Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 4 பள்ளிகள்…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. கலெக்டரின் திடீர் ஆய்வு….!!

பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐயங்கார் புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட நிர்வாகி…. காசோலை வழங்கிய கட்சியினர்…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!

படுகொலை செய்யப்பட்ட நிர்வாகியின் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ம.தி.மு.க முன்னாள் பொருளாளருமான கணேசமூர்த்தி தலைமையில் ம.தி.மு.க-வினர் சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ம.தி.மு.க சார்பாக ஒரு லட்சம் ரூபாய் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குலுக்கல் முறையில் தேர்வு…. தீவிரமாக நடைபெறும் பணி…. அதிகாரிகளின் செயல்…‌.!!

தேர்தலில் வேலை பார்ப்பதற்காக அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தேர்தலுக்காக அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் பணியமர்த்தும் வேலை நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இம்மாவட்டத்தில் இருக்கும் 543 வாக்குச்சாவடி மையங்களில் இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து மொத்தமாக 1,164 வாக்குச்சாவடி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களுக்கிடையே இருந்த முன்விரோதம்…. கல்லால் அடித்து கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரை மறித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ராணுவ வீரர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான் வட்டம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் மோகனுக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின் மோகன் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கிய ஜெய்சங்கர் அவரை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் ஜெய்சங்கரின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் பின்பற்ற வேண்டும்…. போட்டியாளர்களுக்கு படிவம் வழங்கல்…. கலெக்டரின் செயல்….!!!

தேர்தலில் போட்டியிடும் நபர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர், கந்திலி, ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி,  ஆலங்காயம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1779 கிராம உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்கான மனு தாக்கல் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அவதூறாக பேசினாங்க…. உரிமையாளர்கள் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அடகு கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து காவல் நிலையத்தின் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஷாராப் பகுதியில் 50-க்கும் அதிகமான நகை அடகு கடைகள் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகை அடகு வைத்தது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணைக்கு வந்துள்ளனர். அப்போது கடை உரிமையாளரை காவல்துறையினர் அவதூறாக பேசியதாக தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த வியாபாரிகள் தங்களின் கடைகளை அடைத்துவிட்டு காவல்துறையினர் மீது நடவடிக்கை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேட்புமனு தாக்கல்…. வாலிபரின் வியப்பூட்டும் செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தல் நடக்க இருக்கிறதால் வேட்பு மனு தாக்கல் செய்ய வாலிபர் ஒருவர் முருகர் வேடம் அணிந்து வந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கின்றது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆசிரியர் நகரில் இருக்கும் ஒன்றிய அலுவலகத்தில் முருகன் வேடம் அணிந்து கையில் வேலுடன் 22 வயதுமிக்க வாலிபர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்ய விட்டல…. பொதுமக்கள் தர்ணா போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவகளிடமிருந்து மீட்டு தருமாறு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொத்தூர் ஊராட்சி அமைந்திருக்கிறது. இந்த ஊராட்சியில் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்த காரணத்தினால் தற்போது அதே பகுதியில் வசிக்கும் வேறு சிலர் அதை ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்று விவசாயம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் இறந்து போகும் நபர்களை அங்கே அடக்கம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இனி உங்களுக்கு பயம் வேண்டாம்…. 24 மணி நேரமும் சேவை…. சூப்பிரண்டு தகவல்….!!!

பொதுமக்கள் காவல்துறையினரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிபிசக்கரவர்த்தி சென்னை மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக சென்னையில் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பின் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து இம்மாவட்டத்தில் கிராமப்பகுதிகள் அதிகம் இருப்பதினால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு காவல்துறை என்றாலே ஒரு அச்சம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு காதலி மறுப்பு…. காதலன் கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலி மீது பெட்ரோல் ஊற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியாம்பட்டு பகுதியில் சமியுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பி.எஸ்.சி நர்சிங் படித்த இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குடும்ப சூழ்நிலையால் இளம்பெண் தனது காதலை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த சமியுல்லா ஒரு கேனில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை சரியாக செய்யவில்லை…. புதிதாக அதிகாரி நியமனம்…. சரக டி.ஐ.ஜி உத்தரவு….!!

கஞ்சா மற்றும் கவுன்சிலர் கொலை வழக்குகளில் விசாரணை செய்ய புதிதாக இன்ஸ்பெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பகுதியில் கடந்த மாதம் 26- தேதி இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான குடோனில் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடோனில் வைத்திருந்த பட்டா கத்திகள்,கஞ்சா மற்றும் செல்போன்கள் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அந்த வழக்குகள் காரணமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திடீரென பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் சேவுகப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வாசுகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மாலை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வாசுகி கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாசுகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீரமான நடைபெறும் முன்னேற்பாடு…. அலுவலர்களுக்கு பயிற்சி…. கலெக்டரின் செயல்….!!

ஊராட்சி ஒன்றிய தேர்தல் விரைவில் வர இருப்பதால் அதில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கலெக்டர் பயிற்சி அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் அலுவலர்களுக்கு தேர்தல் வழிபாட்டு நெறிமுறைகள் பற்றி கலெக்டர் விளக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இம்மாவட்ட ஊராட்சி அலுவலகத்தின் தேர்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேரில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணத்திற்கு வச்சாங்க…. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி முதல் 9- தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலை நடத்த விதிமுறைகளும் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு அருகாமையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகள் அனைத்தையும் முடிவடையும் வரையில் அமலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜீனர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க ஏதோ பண்றாங்க…. தப்பி ஓடிய ஓட்டுனர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஏரியில் மணலை கடத்த உபயோகித்த எயந்திரங்களின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாலைநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் கல்லூரியின் பின்புறத்தில் இருக்கும் ஏரியில் இரண்டு டிப்பர் லாரிகளில் பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக மணல்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினரை பார்த்ததும் ஓட்டுனர்கள் வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளையும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

படுகொலை வழக்கு…. சூப்பிரண்டுக்கு நோட்டீஸ்…. டி.ஐ.ஜி உத்தரவு….!!

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை பிடிக்க தவறிய துணை காவல்துறை சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டாக இருந்த சிபிசக்கரவர்த்தி தலைமையில் டவுன் காவல்துறையினர் ஜீவா நகர் பகுதியில் கட்டபஞ்சாயத்து மற்றும் கஞ்சா கடத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்த டீல் இம்தியாஸின் குடோனில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள் மற்றும் பத்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 நபர்களை காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகர மன்ற உறுப்பினர் படுகொலை…. வலைத்தளங்களில் பரவும் காட்சி…. முதலமைசருக்கு வேண்டுகோள்….!!

படுகொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் மற்றும் அரசு வேலை வழங்க கட்சி பொதுச் செயலாளர் தமிழக அரசிடம் கேட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் கொலை செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் வீட்டுக்கு கட்சியின் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி நேரில் சென்று அவருடைய தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதன்பின் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடைசி பஸ் போயிடுச்சு…. தேர்வு எழுத போன மாணவன்…. கலெக்டரின் செயல்….!!

தேர்வு எழுத செல்லும் மாணவன் கடைசி பேருந்தை விட்டதால் கலெக்டர் காரில் அழைத்து சென்றுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வு மையங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 900 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 834 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதமிருக்கும் 60 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதன்பின் வேட்டவலம் பகுதியில் வசிக்கும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 40 ஆயிரம் பேர்…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் 40,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் இருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் வில்வநாதன் எம்.எல்.ஏ முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து பல பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு எப்படி தெரிந்தது…. சிறப்பாக நடைபெற்ற முகாம்கள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

பள்ளியில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் 455 மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை கண்காணிப்பு அலுவலரும், மீன்வளத் துறை கூடுதல் ஆணையர் சஜ்யன்சிங் ஆர்.சவான் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அதன்பின் தடுப்பூசி போடுவதற்கு வந்த பொதுமக்களிடம் கண்காணிப்பு அலுவலர் தங்களுக்கு முகாம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் கரியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாந்தா தனது பேரன் வேதகிரி மற்றும் உறவினரான ராம்பிரசாத் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தரைப்பாலத்தில் சென்ற நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த கார் திடீரென மோதியுள்ளது. இதில் 3 பேரும் கீழே விழுந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை தடுத்து நிறுத்திய கணவர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குழந்தைகள் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த பெற்றோர் தற்கொலைக்கு முயற்சி செய்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு மீனாட்சி தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றுயுள்ளனர். அங்கு இருக்கும் குளத்தில் சிறுவர்கள் 2 பேரும் மீன் பிடிக்க சென்ற நிலையில் கால் தவறி குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து அடிக்க வந்தோம்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண் ஒருவரின் வீட்டிற்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வீட்டு வசதி வாரியம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சிக்காக சம்பத் சென்ற போது வீட்டில் மனைவியும், மகளும் தனியாக இருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் சம்பத் வீட்டிற்கு சென்று அலுவலகத்தில் தூய்மை பணியாளராக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காலை நேரத்தில் அக்கம்பக்கத்தினர் பார்த்த போது மணியின் வீடு இடிந்து விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையை […]

Categories
திருப்பத்தூர்

மொத்தம் 1,70,000…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஸ்கூட்டரில் வைத்திருந்த 1,70,000 ரூபாயை திருடிச் சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரகவுண்டனூர் பகுதியில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசுகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் தங்க நகை அடகு வைத்து அதன் மூலமாக 1, 70, 000 ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து ஸ்கூட்டரில் வைத்துள்ளனர். இதனையடுத்து அதே பகுதியில் இருக்கும் மற்றொரு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற குழந்தைகள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்ற 2 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு மீனாட்சி தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளுடன் கிராமத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் மீனாட்சியின் கணவன் லோகேஸ்வரன் மற்றும் இரண்டு குழந்தைகளும் கைலாசகிரி மலைக்கு சென்று உள்ளனர். அப்போது அங்கிருக்கும் கோவில் குளத்தில் மீன் பிடிக்க இறங்கிய போது ஹரிபிரீத்தா மற்றும் அஸ்வந்த் ஆகிய 2 குழந்தைகளும் கால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சரியாக வரவில்லை…. பொதுமக்கள் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

குடிநீரை விநியோகம் செய்ய வேண்டி பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகம்மியம்பட்டு அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் 5௦-க்கும் அதிகமானோர் காலி குடங்களுடன் புத்து கோவில் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

100 நாள் திட்ட வேலை…. தொழிலாளர்களுக்கு தடுப்பூசி…. கலெக்டர் உத்தரவு….!!

கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு கலெக்டரின் உத்தரவின் பேரில் நேரில் சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது, இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்குக் தடுப்பூசி போட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோர் தலைமையில் நரசிங்கபுரம் உள்பட 2 கிராமங்களில் தொழிலாளர்களை தேடி சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பணிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிட்டு” 17 வயது சிறுமி கர்ப்பம்…. நீதிமன்றம் உத்தரவு….!!

சிறுமிய பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடுமாம்பள்ளி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். பிறகு 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்குப் பின் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பானூர் கிராமத்தில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் இதயக்கனி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரும் அதே பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் இவர்கள் 2 பேரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். பிறகு பெற்றோர்களின் சமதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நான் இதை குடிக்க போறேன்…. மனைவியை பயம்புடுதிய கணவன்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கல்நார்சம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது போதையில் வீட்டில் வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது போதையில் சரவணன் வீட்டிற்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தனது மனைவியை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுல திருத்தம் செஞ்சிருக்காங்க…. சோதனையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

போலி சான்றிதழ்களை தயாரித்து ஆசிரியர் பணியில் வேலை பார்த்து வந்த ஆசிரியர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கிரிசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக மகாலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருடைய சான்றிதழில் உண்மையை கண்டறிய இயக்குனர் அலுவலகத்திற்கு சோதனை செய்ய அனுப்பி இருந்த நிலையில் போலியானது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுல குளறுபடி இருக்கு…. எவிடன்ஸாக மாட்டிய ஆடியோ…. பொதுமக்கள் புகார்….!!

தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக பொதுமக்கள் அலுவலகரிடம் புகார் அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிம்மியம்பட்டு ஊராட்சியில் மொத்தமாக ஒன்பது வார்டுகள் இருக்கிறது. அதில் 5, 101 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் ஊராட்சியில் இருக்கும் 3 மற்றும் 7-வது வார்டுகளில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவங்க மகன் சொல்லுவதில் பெருமை…. நல்லாசிரியர்களுக்கு விருது…. கலெக்டரின் செயல்….!!

நல்ல ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி விழாவில் ஆசிரியர் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசியுள்ளார். திருப்பத்தூரில் ஆசிரியர் தின விழா அன்று நல்லாசிரியர் விருதுகளை எட்டு ஆசிரியர்களுக்கு வழங்கபட்டது. அப்போது இம்மாவட்டத்தில் பணிபுரிகின்ற பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் எல்லோரும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு கதைகளை கூறியும் பாடங்களை நடத்த வேண்டும். இதனை அடுத்து மாணவர்களுக்கு எந்தப் பாடத்தில் விருப்பம் அதிகமாக இருக்கின்றது என கண்டறிந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் குறைவாக இருக்கு…. பணி இடைநீக்கம்…. துணை பதிவாளர் உத்தரவு….!!

ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் வந்ததால் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மண்டலநாயனகுண்டாவில் நியாயவிலை கடை அமைந்திருகிறது. இந்நிலையில் அங்கே பல முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் துணை பதிவாளர் முரளிகண்ணன் அப்பகுதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் படி கூட்டுறவு சார்பதிவாளர் தர்மேந்திரன் திடீரென நியாயவிலை கடையில் ஆய்வு செய்துள்ளார். அப்போது நியாய விலை கடையில் இருக்கும் சர்க்கரை, பாமாயில், அரிசி போன்ற பொருட்கள் இருப்பு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வழங்க வேண்டும்…. பெண்கள் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தொழிலாளிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காத நிறுவனத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொம்மேஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷூ கம்பெனி அமைந்திருக்கிறது. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஆட்களை குறைத்துள்ளனர். இந்நிலையில் பணியிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையின் காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கம்பெனி நிர்வாகத்தை முறையிட்டனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி தாங்க…. கட்டுப்பாடுகள் பின்பற்ற வேண்டும்…. அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்….!!

அரசு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற ஒத்துழைக்குமாறு காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் சதுர்த்தி விழாவிற்கான கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமை தாங்கியுள்ளார். அப்போது பொதுமக்களின் பொதுநலன் கருதி விழாக்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பின் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்காத நிலையில் மாநில அளவிலான பல துறைகளுடன் ஆலோசித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சமையல் செய்த பெண்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. அதிகாரிகளின் ஆய்வு….!!

சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் உள்ள ஆவாரங்குப்பத்தில் கடந்த 1990-ம்  ஆண்டு ஜவகர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழாக ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடுகள் கட்டப்பட்டு 3௦  வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டதால் தற்போது பெய்து வரும் கனமழையால் வீட்டில் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்ட் சிலாப்புகள், மேற்கூரைகள் அனைத்தும் சேதமடைந்து கிழே விழுந்து வருகிறது. இதனையடுத்து இப்பகுதியில் இருக்கும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்…. கிணற்றில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டி ஒருவர் கிணற்றில் பிணமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் அப்பாசி கவுண்டர் பகுதியில் திலகவதி என்பவர் வசித்து வருகிறார். இவரின் கணவர் மாதவகுமார் ஏற்கனவே காலமாகிவிட்டார். இந்நிலையில் திலகவதி இரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் வீட்டின் பின்புறம் இருக்கும் கிணற்றில் திலகவதி பிணமாக கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் குடும்பத்தினர் கிணற்றில் இறங்கி திலகவதி சடலத்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 50 லிட்டர்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தோப்பில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவலாபுரம் அருகாமையில் உமராபாத் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் வாணக்கார தோப்பில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் தோப்பில் சாராய விற்பனையில் ஈடுபட்ட செட்டு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை அவங்க கண்டுக்கவில்லை…. ஜோராக நடைபெறும் விற்பனை…. பொதுமக்கள் குற்றச்சாட்டு….!!

வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் ஊராட்சி சாமுண்டி வட்டம் பகுதியில் தங்குதடையின்றி கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருகின்றனர். இதனை அறிந்த பொதுமக்கள் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்வது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. மடக்கிப் பிடித்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமம்பட்டி பகுதியில் வசிக்கும் ஆஞ்சு என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் முட்புதரில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் ஆஞ்சுவை பிடிக்க முயற்சி செய்த போது அவர் தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை துரத்தி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து விற்பனை…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியின் அருகாமையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வசிக்கும் பத்மா என்பவர் வீட்டின் பின்புறம் இருக்கும் புதரில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருக்கும் வழக்கு…. கணவன் கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மேட்டூர் பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாழரசு என்ற மகன் உள்ளார். இவர் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் பிரதீபா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து இருவருக்குமான விவகாரத்து வழக்கு மற்றும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதியினர்…. திடீரென நடந்த விபரீதம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

லாரி டயரில் சிக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜனும், நிர்மலாவும் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது பைபாஸ் சாலையின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது கண்டெய்னர் லாரி ஒன்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதுனாலும் கேளுங்க…. கலெக்டரின் விளக்கம்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நடந்த பயிற்சியில் கலெக்டர் காய்கறிகளை வெட்டி சமைப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் வைத்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் உணவு தயாரிக்க வெங்காயம் மற்றும் காய்கறிகளை கத்தியால் துல்லியமாக வெட்டி உணவு தயாரிக்கும் முறை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் தடுப்பு அணைகள் நிரம்பி வழிவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம், அலசந்தாபுரம் மற்றும் திம்மகெடா நீர்வீழ்ச்சி பகுதிகளில் தொடர் கனமழையால் நீர்வீழ்ச்சியில் உருவாகும் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பூதனாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் நாராயணபுரம் மற்றும் திம்மாம்பேட்டை மண்ணாற்றின் வழியாக ஆவார குப்பம் பாலாற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனையடுத்து மழையால் அலசந்தராபுரம், நாராயணபுரம், கொடையாஞ்சி, அம்பலூர், திம்மாம்பேட்டை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாதியில் நின்ற ரயில்…. போக்குவரத்து பாதிப்பு…. பொதுமக்கள் அவதி….!!

ரயில் இன்ஜின் கோளாறு ஏற்பட்ட காரணத்தினால் தண்டவாளத்தில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து ஹைதராபாத் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டி-வாணியம்பாடிக்கு இடையே திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நின்றுள்ளது. இந்நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு சரக்கு ரயில்களும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் ஆணின் சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விவசாய கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பூஞ்சோலை மற்றும் வக்கணம்பட்டி பகுதி வழியாக பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து 60 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரால் மீட்க முடியாத நிலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த திடீர் முடிவு…. அதிகாரிகள் இடமாற்றம்…. அலுவலர் உத்தரவு….!!

8 ஊராட்சி செயலாளர்ககளை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் எட்டு ஊராட்சி செயலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் 8 பேரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் கன்னடிகுப்பம் ஊராட்சி செயலாளர் பழனி செங்கிலிகுப்பத்திற்க்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இங்கே பணிபுரிந்து வந்த சுப்பிரமணி கன்னடிகுப்பதிற்க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வடகரையில் இருந்த சங்கர் மின்னூரில் வேலை […]

Categories

Tech |