எம்.ஜி.ஆர் சிலை தீப்பிடித்து எரிந்ததால் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் எம்.ஜி.ஆர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை தேர்தலின் காரணமாக துணியால் மூடி வைத்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி ஒன்றிய தி.மு.க சார்பில் அப்பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது எம்.ஜி.ஆர் சிலை மூடப்பட்டிருந்த துணி மீது தீப்பொறி பறந்து விழுந்ததால், மளமளவென தீ சிலை முழுவதும் பரவிவிட்டது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் […]
Tag: thirupathur
புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலப்பள்ளி கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குரிசிலாப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தமிழரசி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மாமியார் வீட்டிற்கு சென்ற அசோக், அவரது மச்சான் பிரவீன் என்பவருடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அசோக் குளித்து கொண்டிருக்கும் போது, திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை அடுத்து அருகில் […]
கிணற்றில் கால் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொல்லக்கொட்டாய் கிராமத்தில் லட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் லட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் பின்புறத்தில் 30 அடி ஆழ கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார். இவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் […]
அ.ம.மு.க மாவட்ட மாணவரணி செயலாளர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் வானவராயன். இவரை பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வைத்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தி.மு.க பிரமுகர் உட்பட 7 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த கூலிப்படையை வைத்து வானவராயனை கொலை […]
ஆற்றுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசி வருவாய்த் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக காவல்துறையினருக்கும் வருவாய் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பச்சூர் ஆற்றுப் பகுதியில் 40 சாக்குகளில் 2 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது வருவாய் துறையினருக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் […]
ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த துணை ராணுவப்படை வீரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சார்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் பைஜூம் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் துணை ராணுவப் படையில் பணியாற்றி வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ருவிட்டு விடுமுறை முடிந்ததால் மீண்டும் பணிக்குத் திரும்ப கேரளாவில் இருந்து சென்னை நோக்கி மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்டுள்ளார். அதே ரயில் பெட்டியில் சென்னையில் தனியார் […]
ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் சாம்ராஜ். இவர் ஒரு ராணுவவீரர். இவரது மனைவி சாந்தி கந்திலி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பொங்கல் விடுமுறைக்காக சாம்ராஜ் திருப்பத்துருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சாம்ராஜ் தனது வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். […]
சென்னை அரசு பேருந்தில் முன்புறமாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூரை சார்ந்தவர் ரகுபதி. இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் ரகுபதி மற்றும் சண்முகம் பணியில் இருந்துள்ளனர். பேருந்து ஓசூரை நோக்கி சென்றபோது வழியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான புகாரை ஏற்க மாநில அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் ஊராட்சியில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் வாணியம்பாடி புத்து கோவில் பகுதியில் வசித்து வரும் இரண்டு பேருக்கு 7 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். […]
ஒரே வாரத்தில் இரண்டு சிறப்பு ரெயில்கள் தடம் புரண்டதால் தண்டவாளங்களை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு சரக்கு ரயிலானது புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சரக்கு ரயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியிலுள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, ரயிலின் 25வது மற்றும் 26ஆவது பெட்டிகளின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விட்டது. இந்நிலையில் திடீரென கேட்ட அந்த பயங்கர சத்தத்தால் […]
மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொம்மை குடிப்பதில் சுரேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாடும் குப்பம் பகுதியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, தனது மகனுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் ஜீவா நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், இவர்களின் […]
திருப்பத்தூரில் பொது கழிவறையை சுத்தம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் 32-வது வார்டு கவுதம் பேட்டையில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வீடுகளில் தனிநபர் கழிபறை கிடையாது. இதனால் அங்குள்ள பொதுக்கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கழிபறையில் போர்வெல் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படும். இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பு போர்வெல் இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதனால் கழிவறைக்கு தண்ணீர் வரவில்லை என்பதால். அப்பகுதி பெண்கள் […]
31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இன்று முதல் 27 ஆம் தேதி வரை 31 வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது .இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்கள், சாலை பாதுகாப்பு உறுதிமொழிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்தவகையில் சேலத்தில் தலைக்கவசம் […]