Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“நிலத்தின் பட்டா ரத்து செய்யப்படும்” தொடர் புகார்கள்…. தாசில்தார் உத்தரவு….!!

மணல் கொள்ளையர்களிடம் சட்ட விரோதமாக விற்கப்படும் விவசாய நிலத்தின் பட்டா ரத்து செய்யப்படும் என தாசில்தார் எச்சரிக்கை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் உள்பட மூன்று பகுதிகளில் பட்டா இடத்தில் மணலை எடுத்து விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் தாசில்தார் மோகன் பல பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கச்சேரி சாலையில் பாலாற்றின் அருகாமையில் இருக்கக் கூடிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக வைத்திருக்கும் நபர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த கொள்ளை சம்பவம்…. அச்சத்தில் இருக்கும் மக்கள்…. போலீஸ் விசாரணை….!!

தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியானகுப்பம்-நாற்றம்பள்ளி ரோடு பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதேபோல் மாரியம்மன் கோவில் அருகில் வசிக்கும் முத்து பிள்ளை என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து ஆயிரம் ரூபாய் பணம், கால் பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

100% போட்டாச்சு…. 10 லட்ச ரூபாய் காசோலை…. ஆட்சியரின் செயல்….!!

ஊராட்சி வளர்ச்சிப் பணிக்காக 10 லட்ச ரூபாய் காசோலையை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 10 லட்சத்துக்கான காசோலையை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கியுள்ளார். அப்போது மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், ஒன்றிய கவுன்சிலர் சாமன்னன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜ்குமார் மற்றும் வார்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் கடத்தல்…. குற்றவாளிகள் தப்பி ஓட்டம்…. போலீஸ் அதிரடி சோதனை….!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை ரயிலில் ஏற்றி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சிறப்பு அதிரடி குழு நாட்டறம்பள்ளி உள்பட 4 பகுதிகளிலும், ரயில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் வந்துச்சு…. இளைஞர்களுக்கு அறிவுரை…. காவல்துறை சூப்பிரண்டு ஆய்வு….!!

கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி உள்பட 5 பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும் மற்றும் பல மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபடுவதாகவும் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறை சூப்பிரண்டு மற்றும் காவல்துறையினர் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் இருந்து ரயில் நிலையம் மற்றும் நாற்றம்பள்ளி சாலை உள்பட […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 9,93,050…. இறுதிப்பட்டியல் வெளியீடு…. ஆட்சியரின் செயல்….!!

கலெக்டரின் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இருக்கும் கலெக்டரின் அலுவலகத்தில் வைத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 4 தொகுதிகளின் வாக்காளர்களின் பட்டியலை கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளது. இவற்றில் மொத்தமாக 1,93,௦50 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதனையடுத்து தற்போது வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் இம்மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டசபை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் அணிய வேண்டும்…. திடீர் ஆய்வு…. காவல்துறை சூப்பிரண்டு உத்தரவு….!!

கொரோனா கட்டுப்பாடுகள் பற்றி காவல்துறை சூப்பிரண்டு ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு முகக்கவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு முககவசம் அணிவித்துள்ளார். இதனையடுத்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் முககவசம் அணிய வேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்று முககவசம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விரைவில் பேருந்து நிலையம்…. தீவிரமாக நடைபெறும் பணி…. எம்.எல்.ஏ-வின் தகவல்….!!

விரைவில் பேருந்து நிலையம் கட்டப்படும் என தேவராஜ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மண் சாலைகளையும் பேவர் ப்ளாக் சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு 2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி தற்போது சக்கர குப்பம் பகுதியில் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை தேவராஜ் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளார். அப்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 29,97,979…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அமைச்சரின் செயல்….!!

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக துணிநூல் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் 90 பயனாளிகளுக்கு 29 லட்சத்து 97 ஆயிரத்து 979 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கியுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர்…. ஆற்றின் கரையோரம் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் குளிக்க போன வாலிபர் ஆழமான பகுதிக்கு சென்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சி. எல்.ரோடு பகுதியில் சகாபுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் தமிழக-ஆந்திர எல்லையில் இருக்கும் புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரும் சாகபுதீனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சகாபுதீனை கண்டுபிடிக்க […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. தீவிர சோதனையில் அதிகாரிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்த குற்றவாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பூசாரி வட்டம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கர்நாடக மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் சரவணன் என்பவர் வீட்டில் மது பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அலுவலகத்தின் முன்பாக விவசாயி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதவாளம் கிராமத்தில் நந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது உடலில் தீ எரிந்த நிலையில் கலெக்டரின் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து முதியவரை தடுத்து நிறுத்தி தீயை அணைத்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற முதியவருக்கு… சரக்கு ரயில் மூலம் வந்த எமன்… திருப்பத்தூர் அருகே நடந்த விபரிதம்…!!

ரயில் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மொரப்பூர் அருகே இருக்கும் வேட்ரப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் காலை மொரப்பூர் வந்துள்ளார். பின்பு அங்கிருந்து வேட்ரப்பட்டி செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த சென்னை நோக்கி செல்லும் சரக்கு ரயில் ஒன்று முருகன் மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நா குடிக்கனும்… பணம் தா… அடிக்கடி சண்டை போட்ட கணவன்… போட்டுத்தள்ளிய மனைவி.!!

குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவரை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குருப்பனூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி முருகன் என்பவரது மகன் வெங்கடேசன்.. 30 வயதுடைய இவரும் கூலி வேலை செய்து வருகின்றார்.. வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சுகந்தி (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.. மேலும், வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கமும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ1,25,00,000 ஒதுக்குனீங்க….. இவ்வளவு தான் தரமா…? நல்ல ரோடு கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்….!!

திருப்பத்தூர் அருகே தரமான சாலையை அமைக்க கோரி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்  பகுதியைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அவர்களது கிராமத்திற்கும், நகரத்திற்கும் சென்றுவர இடைப்பட்ட கரடுமுரடான சாலையை பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து  ஒழுங்கான சாலையை அமைக்க கோரி பலமுறை நடத்திய போராட்டங்களுக்கு பின் 1 ¼ கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதில் முறைகேடு செய்து தரமற்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்” – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதியபுதிதாக மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது.  தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சிறப்பு IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து இன்று புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டவர்களை மாவட்ட ஆட்சியராக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய மாவட்டங்களுக்கு SP நியமனம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய SP நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது. தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 16 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்யபட்டுள்ளனர். இதில் ,  […]

Categories

Tech |