61 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 61 காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும் 14ஆம் தேதி திருப்பூர் கலெக்டர் […]
Tag: thiruppur
மண்ணில் கிடைத்த நடு கல்லை தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு ஆய்வு செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி சாலையோரம் கடந்த வருடம் ஜூன் மாதம் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் அறிந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு இந்த நடுகல்லை சுத்தம் செய்து ஆய்வு செய்துள்ளார். இது தொடர்பான விவரங்களை முடியரசு வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்த நடுக்கல் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வகையான அடுக்கு நிலை சதிக்கல் மற்றும் […]
பாழடைந்த கிணற்றுக்குள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த நாயை தற்போது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கிராமத்தில் காவலர் குடியிருப்பு ஒன்று உள்ளது. அதன் அருகில் 60 அடி ஆழ பாழடைந்த கிணறு ஒன்று இருக்கிறது. இதன் அருகில் இருந்த ஒரு கட்டிட தொழிலாளி நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து உள்ளது. அதனை […]
திருமணத்தை மீறிய தனது உறவு பற்றி தெரிந்துகொண்ட மகளை, பெற்ற தாயே கொன்று வீட்டுக்குள் புதைத்த சம்பவம் 6 ஆண்டுகளுக்குப் பின்பு போலீசாருக்குத் தெரிய வந்தது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் பேபி.. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய கணவரை பிரிந்து வேலன் நகரிலுள்ள தாய் சகாயராணி – தந்தை அப்துல் காதர் ஆகியோருடன் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.. இந்தநிலையில், பாக்யராஜ் என்பவருடன் சகாயராணி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது மகள் எஸ்தர் […]
திருப்பூரில், மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய இரு வாலிபர்கள் பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . ஈரோட்டில் இருந்து கிளம்பி ,திருப்பூரை வந்தடைந்த அரசு பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது , மதுபோதையில் இரு இளைஞர்கள் பேருந்து முன்பாக நடந்துச் சென்றுள்ளனர்.இதைக் கண்ட பேருந்து நடத்துநர் ராமசாமி அவர்களை நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் ,நடத்துநரை தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் சேர்ந்து , இளைஞர்களை அடித்து உதைத்தனர்.திருப்பூர் தெற்கு […]