Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருமூர்த்தி அணையில் நீர் திறக்க முதலமைச்சர் ஆணை!

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம்… விவசாயிகள் போராட்டம்….!!

உடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான  வனத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு த்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. அங்கு காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியார் ஆலையில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி… 3 பேர் கவலைக்கிடம்…!!

திருப்பூரில் உள்ள தனியார் சலவை ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அருகே கருப்பகவுண்டன்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பனியன் சலவை ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் வேலையில்  அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரூக் அகமது என்பவர் முதலில் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். தொட்டிக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற அபு, அன்வர், […]

Categories

Tech |