Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

14 நாட்களில் இவ்வளவு காணிக்கையா ? மொத்தமாக அள்ளிய திருத்தணி முருகன் கோயில் …!!

திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள்  14 நாட்களில் 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்துவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திரு தளம் ஆகும். இந்த  திருக்கோவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பணம், தங்கம் போன்றவைகளை உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

BREAKING : தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலி..!!

திருத்தணி அருகே 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தெக்களூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து  குழந்தை ஓன்று உயிரிழந்தது.  அந்தோணி என்ற 4 வயது குழந்தை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்ததபோது எதிர்ப்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

150 ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது… சூர்யாவின் அறிவுரையை ஏற்ற திருத்தணி ரசிகர்கள்..!!

திருத்தணியில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் வாகன ஓட்டிகள் 150 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.  சென்னையை சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை வழியாக  ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில்  கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பரை பேருந்தில் ஏற்றாத நடத்துனர் தாக்குதல் “விசாரணை நடத்திய காவலருக்கும் அடி” இருவர் கைது..!!

திருத்தணியில் நண்பரை பேருந்தில் ஏற்றாததால் நடத்துனர் மற்றும் காவலரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், தனது நண்பர் விஜய்யை ரேணிகுண்டாவிற்கு வழியனுப்ப ஆந்திரா அரசு பேருந்தில் ஏற்றி விடுவதற்கு  பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததால் விஜய்யை ஏற வேண்டாம் என்று  நடத்துனர் கூறியதால்  சக்கரவர்த்தி ஆத்திரமடைந்து நடத்துனரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அங்கிருந்த போக்குவரத்து காவலரான ராமன் என்பவர் வந்து […]

Categories

Tech |