ஆஞ்சநேயர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியே வழிபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. இந்த சிறப்பு வழிபாட்டில் சீதா, ராமன், லட்சுமணன், அனுமன், விக்னேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான […]
Tag: #Thiruvaarur
தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் மீது ரயில் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் காமராஜர் நகரில் அம்பிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவரது மகன் ஆகாஷ். இவர் பி.காம் படித்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள வெண்ணாறு ரயில்வே தண்டவாளத்தில் காலை கடனை முடித்துவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது மன்னார்குடிக்கு வந்த சென்னை விரைவு ரயிலில் அடிபட்டு தலை துண்டிக்கப்பட்டு சம்பவ […]
நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் பகுதியில் வசித்துவரும் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளை வழக்கம்போல் காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். அப்போது காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள தரிசு நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை அங்கு சுற்றித் திரிந்த 5-க்கும் மேற்பட்ட நாய்கள் விரட்டி கடித்துக் குதறியுள்ளது. இதனால் காயமடைந்த ஆடுகளை சாத்தனூர் கால்நடை […]