Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. இடிபாட்டில் சிக்கி பலியான ஓட்டுநர்…. சென்னையில் கோர விபத்து….!!!

சாலையோரம் நின்ற வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனுமன் பேட்டை வள்ளலார் தெருவில் கண்டெய்னர் லாரி ஓட்டுனரான ஜோதி(28) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஜோதி கார் உதிரி பாகங்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரப்பர் பொருட்களை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோதாவரி(20) என்ற மகளும், அர்ஜுன்(18) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் கோதாவரி உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கோதாவரி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளி சென்று வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

மாணவியை கடத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நீலன்தாங்கல் பகுதியில் ஓட்டுனரான செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்லப்பாண்டி கடத்தி சென்றுள்ளார். பின்னர் கோவிலில் வைத்து மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.  இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தலையில் கல்லை போட்டு கொலை செய்து விடுவேன்” மிரட்டிய மகனுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி கொசபாளையம் பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனரான செந்தில்குமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் மதன்(19) கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடி போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மதன் தினமும் தனது தாய், தந்தை மற்றும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு வரவில்லை? தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசமங்கலம் கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சித்ராஞ்சித்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் அருகே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சித்ராஞ்சித் வேலைக்கு செல்லாததால் அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வேலன் என்பவர் வாலிபர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சித்ராஞ்சித் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் தராமல் இருந்த நபர்…. பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேவூர் ஈ.பி நகர் விவேகானந்தர் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி(37) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பட்டு சேலை தயாரிப்பாளரான கோதண்டராமனிடம் சிவகுமார் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தேவிக்கும், கோதண்டராமனுக்கும் இடை பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சிவக்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சரியா இருக்கா….? பட்டாசு கடைகளில்…. சப்-கலெக்டர் திடீர் ஆய்வு….!!!!

பட்டாசு கடைகளில் சப் கலெக்டர் நேரில் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி பஜார் வீதி, சீதாராமய்யர் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பழக்கடைகளில் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் தீபாவளி காலகட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்காக உரிமம் வழங்க கடை உரிமையாளர்களின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சப்-கலெக்டரான மந்தாகினி வந்தவாசி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கடைகளில் திடீரென ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் பட்டாசு கடைகளில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்னை கருணை கொலை செய்து விடுங்கள்…. கலெக்டருக்கு மனு அனுப்பிய மூதாட்டி…. என்ன காரணம் தெரியுமா….?

தன்னை கருணை கொலை செய்யுமாறு மூதாட்டி கலெக்டருக்கு மனு அனுப்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் சின்ன குழந்தை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 95 ஆகும். இவருடைய கணவரான தர்மன் கடந்து சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ராஜேந்திரன், நடராஜன், குமரேசன் என மூன்றும் மகன்கள் இருந்துள்ளனர். இதில் குமரேசனம் நடராஜனும் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகனான ராஜேந்திரனுடன் சின்ன குழந்தை வசித்து வருகின்றார். கடந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செடிகளுக்கு இடையே கிடந்த சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பெரும் சோகம்…!!

அரசு பேருந்து ஓட்டுநர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் பேருந்து ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கும் ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த உறவினர்களும், தீயணைப்பு வீரர்களும் முருகனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சுத்தமலை பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் செடியின் நெடுக்கில் முருகனின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…. இப்படியா நடக்கணும்…. விநாயகர் சிலை ஊர்வலத்தில்…. பலியான பள்ளி மாணவன்….!!!!

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன்  பலியாகியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு திலீப் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் விநாயகரை எடுத்துச் செல்லும் வாகனத்தில் திலீப் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இது வழக்கமாக இருக்கு…. அலைமோதிய கூட்டம்…. மகிழ்ச்சியில் சென்ற பக்தர்கள்….!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கே வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல பகுதியில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே இந்த வாரமும் விடுமுறை நாள் என்பதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இதனை தொடர்ந்து அதிகாலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு நடவடிக்கைகள்…. “வாட்ஸ் அப்” எண் அறிமுகம்…. செய்திக்குறிப்பில் வெளியீடு….!!

போதை பொருட்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கார்த்திகேயன் அறிமுகம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதை பொருட்கள் ஒழிப்பது குறித்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

3 புதிய வழித்தடம்…. சிறப்பாக நடைபெற்ற தொடக்க விழா…. எம்.எல்.ஏ-வின் செயல்….!!

3 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க நடைபெற்ற தொடக்க விழாவில் ஜோதி எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பணிமனையில் இருந்து 3 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இதற்கு நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கியுள்ளார். பிறகு நகரமன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கு நாள்…. ஆற்றில் தீபம்…. அலைமோதிய பொதுமக்கள்….!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாக நதியில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காட்டுக்காநல்லூர் வழியாக நாக நதி செல்கிறது. இதில் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யும் ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஆடிப்பெருக்கு நாள் அன்று அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் நதிகரைக்குச் சென்று அந்த நதியை வணங்கி காலத்திற்கும் வற்றாத ஜீவநதியாக பிற்கால சந்ததிகளுக்கும் பயனளிக்க வேண்டும் என ஒவ்வொரு வருடமும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாயில் நுரை தள்ளியபடி துடித்த சிறுமி…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. பெரும் சோகம்…!!

விஷ பூச்சி கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்குவளைவேடு கிராமத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகாசினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுஷ்கா(9) என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் அனுஷ்கா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வெளியே பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளார். இதனை அடுத்து நள்ளிரவு நேரத்தில் சிறுமியை விஷ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் ரஞ்சித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான். இதனை அடுத்து சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர். அப்போது கிணற்றுக்கு அருகில் கிடந்த ரஞ்சித்தின் காலணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“50,000 ரூபாய் நிதி” முதலமைச்சரின் ஆணை…. ஆட்சியரின் தகவல்….!!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் ஆணை வழங்கி உள்ளார். தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி அரசின் சார்பாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த 1,650 நபர்களில் கொரோனாவால் உயிரிழந்த 923 குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் இணைய வழி வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்…. தி.மலையில் பரபரப்பு….!!

மகன் தாய் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அக்ராபாளையம் கிராமத்தில் ஜெயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 3 மகன்களும் இருக்கின்றனர். இவரது மகனான விஜயகுமார் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் விஜயகுமார் ஜெயாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை, சொத்தை பிரித்து தரவில்லை என கூறி தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ஜெயா தூங்கிகொண்டிருந்த போது விஜயகுமார் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்துவிட்டாரா….? தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. கிராம மக்களின் போராட்டம்…!!

முதியவர் கிணற்றில் விழுந்து விட்டதாக நினைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெய்குப்பம் கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 100 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் விவசாய கிணற்றில் குளிப்பதாக கூறிவிட்டு சென்ற பழனி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பழனி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என நினைத்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், வருவாய் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தம்பதியினாரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அக்ராபாளையம் காலனி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் 2 வயதில் லிங்கேஷ் மற்றும் லித்ஷாஸ்ரீ என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷர்மிளா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவி-மகனை இழந்த நபர்…. சாலையில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி-மகனை இழந்து பலவருடங்களாக விரக்தியில் இருந்த நபர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புங்கம்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளியான ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் ஸ்ரீதர்ஜோஸுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் வெள்ளேரி கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அவரது மனைவி சங்கீதா உயிரிழந்துவிட்டார். மேலும் ஸ்டீபனுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. இடிபாட்டில் சிக்கிய வாலிபர்கள்…. தி.மலையில் பரபரப்பு….!!

வீடு இடிந்து விழுந்து இடிபாட்டில் 3 வாலிபர்கள் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இருதயபுரம் பகுதியில் அமிர்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்சாண்டர், லியோபெலிக்ஸ், ஜான்போஸ்கோ என 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பயங்கரமான வெடி சத்தம் கேட்டுள்ளது. அந்த நேரம் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அங்கங்கே கீழே விழுந்தது. அதன்பின் வீட்டின் மேற்கூரை […]

Categories
திருவண்ணாமலை

கடன் வாங்கிய நண்பர்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

கடன் வாங்கி விட்டு தலைமறைவாக இருந்த நண்பனை காட்டிக் கொடுத்ததால் தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொசப்பாளையம் பங்காள தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாம்பு பிடிப்பது மற்றும் ஆட்டோ ஓட்டுனராக இரு வேலைகள் செய்து வந்துள்ளார். இவருக்கு தணிகைவேல் என்ற நண்பர் இருக்கிறார். இவர் தினேஷ் என்பவரிடம் 9000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். அதன்பின் தினேஷ் யுவராஜிடம் தணிகைவேல் எங்கு இருப்பதாக கேட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தி.மலையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டின் மீது மோதிய விபத்தில் பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் கிராமத்தில் விவசாயியான முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தச்சாம்பாடி கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முருகவேலின் வீட்டின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் முருகவேலின் வீட்டின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்துவிட்டது. மேலும் முருகவேலின் மனைவி பிரியா, உறவினர் காசியம்மாள், பிச்சையம்மாள், ஜெயவர்தனா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை தான் காரணமா….? பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!! ….!!

அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். ராஜகுமாரி வயிற்றில் உருவான நீர்க்கட்டிப் பிரச்சனையால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதே மாவட்டத்திலுள்ள உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு அறுவைச் சிகிச்சைச் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜகுமாரி தனியார் மருத்துவமனையின் மருத்துவரின் பரிந்துரையின்படி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எனக்கு செல்போன் வேணும்…. ராஜ கோபுரம் மீது ஏறிய இளைஞர்….!!

கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் ராஜ கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை நகரப் பகுதியை சேர்ந்த நண்பர்கள் புருஷோத், அருணாச்சலம். இவர்கள் இருவரும் கஞ்சா புகைத்து கொண்டும், மது அருந்திக் கொண்டும் ராஜகோபுரம் அருகே சுற்றி திரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தனது செல்போனை நண்பர் அருணாச்சலம் எடுத்து சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தர வேண்டும் எனவும் கூறி புருஷோத் ராஜ கோபுரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“காரை சரி செய்ய கடத்தினோம்” நண்பர்களின் தில்லுமுல்லு வேலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஓட்டுனரை தாக்கி விட்டு மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வாடகைக்காரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியில் வாடகைக்கார் டிரைவரான ராம்குமார் வசித்து வருகிறார்.இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு -ஆற்காடு சாலையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்று செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து ராம்குமார் 4 பேர் கொண்ட மர்ம கும்பலை  காரில்  ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது ஒருவர் தீடிரென வாந்தி வருவதாக கூறியதால் காரை நிறுத்தி அனைவரும் கீழே இறங்கியுள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பழுதடைந்த மின் மோட்டார்…. சிறைபிடிக்கப்பட்ட அரசு பேருந்து…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

குடிநீர் பிரச்சனையால் அவதிப்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்திநகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் காந்திநகர் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட மின்மோட்டார் பழுதடைந்த காரணத்தால் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் கோபமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலையில்  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ராஜன்…. சிறை பிடிக்கப்பட்ட இளம்பெண்கள்…. தி.மலையில் பரபரப்பு…!!

கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காததால் ஒருவர் இளம்பெண்களை வீட்டிற்குள் பூட்டி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் கூலி தொழிலாளியான ரகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மைத்துனர் இருக்கின்றார். இவர் ஆரணி அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜன் ரகுவுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக அளித்துள்ளார். அதில் ரகு 40 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலனுடன் சென்ற இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதல் திருமணம் செய்து கொள்வதற்காக சென்ற இளம்பெண் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தியாகி அண்ணாமலை நகரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் கூலி வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மாதேஸ்வரனும், சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் வசித்த சரிதா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எல்லாத்துக்கும் தீ வச்சிட்டாங்க… அ.தி.மு.க. பிரமுகரின் வீடு சூறையாடல்… தி.மலையில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலரின் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் முன்னாள் அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனுக்கப்பட்டு கிராமத்தில் சொந்தமாக நிலம் இருப்பதால் நெற்பயிர் சாகுபடி செய்யும் சமயத்தில் மட்டும் அங்கு சென்று உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் போன்ற பணிகளை செய்வார். அப்போது மட்டும் அந்த கிராமத்தில் இருக்கும் அவர்களது வீட்டில் தங்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அலறி துடிதுடித்த மனைவி…. தீ வைத்த கணவர் தற்கொலை… தி.மலையில் பரபரப்பு…!!

மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர் தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முளகிரிபட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சங்கர் பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பார்வதி மறுத்ததால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சங்கர் வீட்டில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தலைகீழாக தொங்கியபடி யோகா…. புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி… தொற்றை தடுக்கும் வழிமுறைகள்…!!

16 நிமிடம் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நேரு யுவகேந்திரா சார்பில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாணயத்தை விழுங்கிய சிறுமி… அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்… குவியும் பாராட்டுகள்…!!

அறுவை சிகிச்சை இன்றி சிறுமி விழுங்கிய ஐந்து ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் வெளியேற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரபட்டினம் பகுதியில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 1/2 வயதுடைய தனுசியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமி தனுசியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிறுமிக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தெரியாம இதை அமைக்க கூடாது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விவசாய  நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுனாத்தூர் சாலையூரில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் டெபுடி ஜெனரல் மேனேஜராக சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுப்பிரமணி மற்றும் அவரது மகன் சுரேஷ் என்பவரும் பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் எலித்தொல்லையை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இன்னும் நீ திருந்தலையா… சிறுமிக்கு நடந்த கொடுமை… தி.மலையில் பரபரப்பு…!!

16 வயது சிறுமிக்கு கட்டிட தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது கிராமத்தில் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான சதீஷ் என்பவர் அந்த சிறுமியை வழிமறித்து உள்ளார். இதனையடுத்து அவர் அங்குள்ள ஒரு விவசாய நிலத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நாங்க ஏற்கனவே சொல்லிருக்கோம்” எங்களுக்கும் அதுல வேலை வேணும்… தி.மலையில் பரபரப்பு…!!

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் கோரிக்கை மனுவினை வழங்க சென்றுள்ளார். இந்த கோரிக்கை மனு அதிகாரிகளிடம் வழங்கப்படும் என முன்னரே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணிசுமை அதிகமாக இருந்ததால்…. கோபத்தில் பெண் போலீஸ் செய்த செயல்… தி.மலையில் பரபரப்பு…!!

பணிச்சுமை அதிகமாக இருந்ததால் பெண் போலீஸ் கண்ணாடிப் பெட்டியில் கையால் ஓங்கி அடித்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் மணிமேகலை என்ற பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக மணிமேகலை பணி சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மணிமேகலைக்கு மீண்டும் அதிகமான பணி வழங்கப்பட்டதால் கோபமடைந்த அவர் அங்கிருந்த கண்ணாடி பெட்டியில் கையால் ஓங்கி அடித்து விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த மணிமேகலையை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இன்னும் என் பிள்ளைங்கள காணுமே” அண்ணன்-தம்பிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற இரண்டு சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்ன செங்காடு கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கரன் மற்றும் ஹரிஹரன் என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தனது பெற்றோருக்கு உதவியாக ஆடுகளை அருகில் இருக்கும் வயல் காட்டிற்குள் ஓடி சென்று மேய்த்து வருவர். இதனையடுத்து காலையில் வழக்கம்போல முனுசாமி தான் நடத்தி வரும் இருசக்கர வாகனம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளியல்… கட்டிட மேஸ்திரிக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

குளிக்கச் சென்ற கட்டிட மேஸ்திரி ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் தாங்கள் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவருடைய நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பௌர்ணமி கிரிவலம்… தடை விதித்தார் ஆட்சியர்… பக்தர்கள் ஏமாற்றம்…!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி கிரிவலத்திற்கு இந்த மாதமும் மட்ட ஆட்சியர் தடை விதித்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்று அருணாச்சலேஸ்வரர் கோவில். இங்கு பௌர்ணமி கிரிவலம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மதியம் 3.50 மணியிலிருந்து சனிக்கிழமை மதியம் 2.45 மணி வரைக்கும் பௌர்ணமி உள்ளது. இந்த பௌர்ணமிக்கு கிரிவலம் அனுமதி வழங்கப்படும் என பக்தர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுற்றுலாவுக்கு சென்ற குடும்பம்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் போன்றவற்றை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நுணுக்கம்பட்டி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் உஷாராணியும் இருவரும் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வீடு திரும்பியதும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, 30 ஆயிரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முகநூலில்தான் தெரியும்… இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி விசாரணை…!!

முகநூலில் அறிமுகமான இளம்பெண்ணுக்கு கணவர் குழந்தைகள் இருப்பதை நேரில் கண்டதும் அதிர்ச்சி அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பாலூர் பகுதியில் தனது கணவன் குழந்தைகளுடன் 25 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் சென்னையைச் சேர்ந்த பூபதி என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இது காதலாக நாளடைவில் மாறியுள்ளது. ஆனால் பூபதிக்கு அந்தப் பெண் திருமணமானவர் என்பது தெரியாது. அந்தப் பெண்ணும் இதை மறைத்தே பூபதியுடன் பழகி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிச்ச வெயிலுக்கு… இப்பம் கொஞ்சம் பரவாயில்ல… ஆனா இங்க மட்டும் வெள்ளம் வந்துருச்சு… அவதியில் பொதுமக்கள்…!!

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் நீரால் சூழ்ந்துள்ளது. வளிமண்டலத்தில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர் நிலவி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் திருவண்ணாமலை சன்னதி தெரு, பெரியார் சிலை சந்திப்பு அவலூர்பேட்டை சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 சென்ட் நிலம்தான் பிரச்சனை… அதிமுக கிளை செயலாளரின் செயல்… திமலையில் பரபரப்பு…!!

டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தவரை அதிமுக நிர்வாகி அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருபவர் துரைக்கண்ணு. அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளரான துரை என்பவருக்கும் துரைக்கண்ணுக்கும் 2 சென்ட் நிலம் வழங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நேற்று முன்தினம் முற்றியதால் துரை மற்றும் அவரது மனைவி தீபா மற்றும் அப்பா முனுசாமி ஆகியோர் துரைகண்ணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உழுவதற்காக சென்ற விவசாயி… டிராக்டரால் நேர்ந்த பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியண்ணநல்லூர் கிராமத்தில் விவசாயி குமார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குமார் உழுவதற்காக வயலுக்குள்  டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் வழியிலேயே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பலிக்கு பலி வாங்கிய சம்பவம்… போலீஸ் விசாரணை… வெளிவந்த ரகசியம்…!!

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை நில விற்பனை தொழிலதிபர் கொலை வழக்கில்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான பங்க்பாபு வசித்து வந்தார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அதிமுக பிரமுகரான கனகராஜ் என்பவரை கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டியதால் மிரண்ட விவசாயி… வழிபறியில் ஈடுபட்ட வாலிபன்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகனான விஜய் என்பவர் செந்தில்குமார் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 3000ருபாய் பணம், ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை பரித்து சென்றுள்ளார். இதுகுறித்து செந்தில்குமார் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென வந்த சத்தம்… பார்த்ததும் பதறிய புவனேஸ்வரி… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையாம்பட்டு கிராமத்தைச் சார்ந்தவர் தண்டபாணி-புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ராகுல், ரமணா, அஜய் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்புறம் சென்ற புவனேஸ்வரியை பாம்பு கடித்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் புவனேஸ்வரியை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புவனேஸ்வரி வழியிலேயே இறந்து விட்டதாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமாய் செய்த செயல்… சோதனையில் சிக்கிய பொருள்… போலீசாரின் கைது நடவடிக்கை…!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் இருக்கும் மேட்டூர் ஆற்றுப்படுகை அருகில் தாலுகா காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்  மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கோபி ஆகிய 2 பேரும் இரண்டு மாட்டு வண்டிகளில் அந்த வழியாக மணல் கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரித்தபோது இருவரும் மணல் கடத்தியது தெரிய வந்துள்ளது. அதன்பின் […]

Categories

Tech |