Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாளை முதல் முகாம்… 48 நாள் பங்கேற்க… பூஜை செய்து அனுப்பப்பட்ட லட்சுமி…!!

ஸ்ரீயோக ராமச்சந்திர மூர்த்தி கோவிலுக்குரிய லக்ஷ்மி யானை இன்று காலை லாரி மூலம் புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக தேக்கம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் இருக்கும் ரேணுகாம்பாள் கோவில் உடன் இணைந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கோவிலுக்கு சொந்தமான யானை ஒன்று உள்ளது. இந்த யானையின் பெயர் லட்சுமி ஆகும். இந்த லக்ஷ்மி யானை இன்று காலை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக லாரி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புத்துணர்வு முகாம் நாளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கையை நிறைவேற்றுங்கள்…. மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம்…. 177 அரசு ஊழியர்கள் கைது….!!

தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆரம்பித்து பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் அருகில் பெரியார் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “புதிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரே இடத்தில் இரண்டு வீடு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஒரே பகுதியில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி பகுதியை சார்ந்தவர் பிச்சுமணி. இவர் தனது உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் சென்றுள்ளார். கடந்த 1ஆம் தேதி அவரது வீட்டின் முன் மற்றும் பின்புற கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் பிச்சுமணி மற்றும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

10 நாளா காத்திருக்கோம்… இனி முடியாது… மறியலில் பொதுமக்கள்…!!

பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 ஆவது வார்டுகுட்பட்ட கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு நிலைமையா….? பார்த்துக்க ஆள் இல்லை…. தம்பதி எடுத்த முடிவு….!!

முதியோர் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கந்தசாமி காயம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்களின் மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்களை கவனிக்க ஆள் யாரும் இல்லாத காரணத்தினால் வெகுநாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீஸார்….. மடக்கிப் பிடித்த லாரி…. சிக்கிய மணல் கொள்ளையன்….!!

லாரியில் மணல் கடத்தியவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் இதர காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செய்யாற்றில் இருந்து ஒரு டிப்பர் லாரி அந்த வழியாக வந்துள்ளது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் சட்டத்திற்கு விரோதமாக கடத்தி வரப்பட்டது என்பதை அறிந்த காவல் துறையினர் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராமானுஜம் என்பவரை கைது செய்துள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் லிப்ட் தாரேன்” கண்ணாடியில் நோட்டமிட்ட நபர்…. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. பொது மக்களிடம் சிக்கி கைது….!!

பெண்ணிடமிருந்து சங்கிலியை பறிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடக்குவெளி கிராமத்தைச் சார்ந்தவர் தர்மலிங்கம்-மீனா தம்பதியினர். மீனா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு வடக்குவெளி கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீனாவிடம் தனது மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள் ஊருக்குள் சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்சி இரண்டாக பிளவுபடும்… ஸ்டாலின் வெற்றி பெறுவார்… நாஞ்சில் சம்பத் அதிரடி பேட்டி…!!

சசிகலாவுக்கு அதிமுகவின் கொடியை பயன்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது “அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் போது அவர் சிறைக்கு சென்று உள்ளார். எனவே அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு முழு தகுதியும் சசிகலாவிற்கு உள்ளது. கே.பி.முனுசாமி வெளியிட்ட கருத்தை வைத்துப் பார்க்கும்போது சசிகலா அதிமுகவில் இணைந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல் நிலை சரியில்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. தாயை இழந்து கதறும் 4 பிள்ளைகள்….!!

உடல்நல பாதிப்பால் மனவேதனை அடைந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் வீரகோயில் கோட்டை கிராமத்தை சார்ந்த விவசாயி சரவணன்-சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு ஓவியா, தேவிஸ்ரீ திவ்ய தர்ஷன், பிரவேஷ் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். சகுந்தலா கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவர் பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் பலனளிக்காத காரணத்தினால் கடந்த 26ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பொண்ணு சீர் வரிசைக்காக வைத்திருந்தோம்…. திருடிட்டு போயிட்டாங்களே…. காவல் நிலையத்தில் புலம்பும் பெற்றோர்….!!

மணப்பெண்ணுக்காக வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் தரணிபாலன்-சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷ், சவுமியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சவுமியாவுக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் நேற்று காலை சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக தரணிபாலன் அப்பகுதியில் உள்ளவர்களையும் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு நேற்று அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை…. வேலை இல்ல…. விரக்தியில் இருந்த வாலிபர்…. பெற்றோரைக் கதற வைத்த செயல்….!!

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் ராஜீவ் காந்தி என்பவர் தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சர்க்கரை ஆலை மூடப்பட்டு உள்ளதால் அவர் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜீவ் காந்தி குடும்பத்தை நடத்துவதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கடன் தொகை 5 லட்சத்திற்கும் மேல் உயர்ந்ததால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குழந்தை திருமணம்” காப்பாற்றப்பட்ட 14 சிறுமிகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

14 சிறுமிகளுக்கு  குழந்தை திருமணம் செய்ய இருந்ததை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மணப்பெண்ணாக இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வராங்க…! காத்திருந்த குடும்பதுக்கு அதிர்ச்சி… ! மாமியார், மருமகளுக்கு நடந்த விபரீதம் …!!

இருசக்கர வாகன விபத்தில் மாமியாரும் மருமகளும் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் இருக்கும் சாத்தனுரைச் சார்ந்தவர் முத்து-சின்ன குழந்தை தம்பதியினர். முத்துவின் தம்பி மகன் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி பச்சையம்மாள். சின்ன குழந்தைக்கும், பச்சையம்மாளுக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்றுமுன்தினம் இரவு சின்ன குழந்தையின் மகன் சங்கர் இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி ரோந்து…. சிக்கிய மணல் கடத்தல்… தி.மலையில் கைது நடவடிக்கை …!!

டிப்பர் லாரியில் மணல் கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் வழிமறித்தனர். அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிப்பர் லாரியை ஓட்டி வந்த கல்பூண்டியைச் சேர்ந்த பிரஷாந்த் என்பவரை கைது செய்தனர். மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக… வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

போலீசார் மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை கைது செய்ததோடு, அதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்பூண்டி கிராமத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து அந்த லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கல்பூண்டி பகுதியில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தரவில்லை…. விரக்தியில் மாணவன் எடுத்த முடிவு… தவிக்கும் தாயார்…!!

செலவுக்கு பணம் தராததால் கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் ரயில்வே கிராஸ் ரோடு பகுதியில் சந்திரா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விக்டர் ரோசாரியோ என்ற மகன் உள்ளார். இவர் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டை வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்டர் தனது தாயிடம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டபோது அவரது தாய் தன்னிடம் பணம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற தம்பதிகள்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்களின் கைவரிசை…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவில்மாதிமங்கலம் பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போது, சத்யநாராயணன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் வீட்டு கதவை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து வீட்டிற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற விவசாயி…. திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தி. மலையில் பரபரப்பு…!!

விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோவில்மாதிமங்கலம் கிராமத்தில் விஸ்வநாதன் என்ற விவசாயி வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய முதியவர்…. மருமகள் அளித்த புகார்… தி. மலையில் பரபரப்பு…!!

மொபட்டில் சென்ற போது முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாயனதாங்கள் கிராமத்தில் முனியப்பபிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரும்பாக்கம் ஏரியில் மீன் பிடிக்க கடந்த 2ஆம் தேதி தனது பேரன் மகேஷ் என்பவருடன் சென்றுள்ளார். அதன்பின்னர் அவரது வீட்டிற்கு மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் சென்னை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் இறந்த அக்கா, தம்பி…. அதிர்ச்சியில் பெற்றோர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தரமற்ற இனிப்புகளை சாப்பிட்ட அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசிங்கநல்லூர் தொகுதியில் பழனி சென்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பாஞ்சாலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆஷானி என்ற மகளும், ஹரி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி தனது குழந்தைகளுக்கு கடைவீதியில் விற்ற இனிப்புகளை வாங்கி தந்துள்ளார். அதனை சாப்பிட்ட இரு குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இருவரும் மயங்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எதுக்குடா இங்க நிக்குற ? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… தி.மலையில் பரபரப்பு …!!

சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமாட்சி புறத்தில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் வசிக்கும் மகா என்ற மகாதேவன் என்பதும், அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சாராயம் விற்பனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நம்பிக்கையோடு வந்தோம்… ஆனா இப்படி நடக்குது… கலெக்டர் அலுவலகத்தில் புலம்பும் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தடுப்பதற்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பயமில்லாமல் விற்பனை” வசமாக சிக்கிய மூவர்… பறிமுதல் செய்த போலீசார்.!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் என்ற பகுதியில் அப்பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு சிலர் லாட்டரி சீட்டுகளை  பொது இடத்தில் வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் அண்ணா சிலை அருகிலும், வெண்மணி என்ற கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் போளூர் பஸ் நிலையம் அருகிலும், […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

“சோலாரில் இஸ்திரி” திருவண்ணாமலை மாணவிக்கு….. ஸ்வீடன் நாடு விருது….!!

தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மாணவி வினிஷா என்பவர் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் உட்பட பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வினிஷாவிற்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான  விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவவே, பலரும் மாணவி வினிஷாவிற்கு  தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலை ஏற்க முடியாது… மறுத்த சிறுமியை குத்திவிட்டு… தற்கொலை செய்த இளைஞர்..!!

காதலை ஏற்க மறுத்ததால் 17 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர், மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள சோ.நம்மியந்தல் என்ற கிராமத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் தான் பிரசாந்த்.. இவருக்கு வயது 19.. இவர் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அனிதா என்ற சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் பிரசாந்த் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அனிதா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கணவர் வெறிச்செயல்”… 8 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கொடூரம்..!!

வரதட்சணை கொடுமை காரணமாக 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவர்  அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஷோபானவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  4ஆவது முறையாக கர்ப்பமாக இருந்தார் ஷோபனா.. இந்த சூழலில் மணிகண்டன் தொடர்ந்து வரதட்சணை கேட்டது […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் 8 மாத குழந்தை உட்பட இன்று 127 பேருக்கு கொரோனா உறுதி..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதில் 8 மாத குழந்தை, 39 பெண்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1625 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 70 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மொத்தம் எண்ணிக்கை 1498 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 573 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வரை 916 பேர் சிகிச்சை […]

Categories
காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று புதிதாக 96 பேருக்கும், திருவண்ணாமலையில் 55 பேருக்கும் கொரோனா உறுதி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகள் 1,375 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 807 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 17 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீஸ் வேலை வாங்கித்தருகிறோம்… ரூ 30,00,000 மோசடி செய்த இருவர் கைது…!!

காவல் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள துருகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (25), சரவணராஜி (25), சிவகுமார் (24) ஆகிய 3 பேரிடமும் காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய 2 பேர் அவர்களிடமிருந்து 2,25,000 ரூபாயை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, இந்த […]

Categories
செங்கல்பட்டு திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் 77 பேர், செங்கல்பட்டில் 127 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் இங்கு 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று வரை 442 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் 2 குழந்தைகள் உட்பட 130 பேருக்கு கொரோனா உறுதி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை இன்று கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1009 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 440 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றுவரை 879 ஆக இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சரக்கு அடிக்கும் போது திடீர் தகராறு… நண்பரை கிணற்றில் தள்ளி கொன்ற நண்பர்கள்..!!

மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் ஒருவரைக் கிணற்றில் தள்ளி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்துள்ள நாராயணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், ராஜா, பாலகிருஷ்ணன் ஆகிய 4 நண்பர்களும் சேர்ந்து அதே பகுதியிலுள்ள விவசாய கிணறு ஒன்றின் அருகில் உட்கார்ந்து மது குடித்துவிட்டு சீட்டு விளையாடியுள்ளனர். அப்போது சங்கருக்கும், நண்பர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.. இந்த தகராறில் சங்கரை, தாக்கிய அவரது […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமையில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னை மற்றும் பெங்களுருவில் இருந்து திருவண்ணாமலை வந்த 8 பேர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 548 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுவரை 522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் இதுவரை 310 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் இருந்து வந்த 6 பேருக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமையில் நேற்று வரை 492 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 240 பேர் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனவால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி… திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை!

கொரோனா வைரசஸ் தொற்று பரவுவதை தடுக்க அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் முதல்முறையாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த ஆட்சியர், “வரும் 7ஆம் தேதியன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம். தனியார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

”இம்புட்டு வரி” போட்டா யாரு கட்டுறது…. திருவண்ணாமலையில் கடையடைப்பு …!!

திருவண்ணாமலை நகராட்சியில் வாடகை உயர்த்துவதற்கு கண்டனம் தெரிவித்து தற்போது வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சொத்து வரி , கடை வாடகை பல மடங்கு வரி உயர்த்தியுள்ள திருவண்ணாமலை நகராட்சியை கண்டித்து சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படுமென்று வணிகர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.  எனவே திருவண்ணாமலை நகராட்சியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறு வணிகர்களுக்கு 100 ரூபாய் என்றும் , பெரிய வணிகர்களுக்கு ஆயிரம் ரூபாய் என திருவண்ணாமலை நகராட்சி உயர்த்தி கட்டணங்களை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

21….. சிவராத்திரி…. என்னென்ன பூஜைகள் எப்போவென்று தெரியுமா….? மிஸ் பண்ணிடாதீங்க…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள சிவராத்திரியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்படுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும்  கோவிலாகும். இந்த கோவிலில் கார்த்திகை தீபம் உள்ளிட்ட முக்கிய சிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மகாசிவராத்திரி தொடங்கிய கோயிலாகவும் இது கருதப்படுகிறது. சிவனின் அடிமுடி இவையிரண்டையும் திருமாலும் பிரம்மாவும் கணக்கிட முடியாமல் தவித்த போது சிவபெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி அளித்த திருநாளே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேற வேற மாநிலத்திலிருந்து…… வெரைட்டி சரக்குகள்…… குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது…!!

திருவண்ணாமலை அருகே மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துனர். திருவண்ணாமலை மாவட்டம் பெருங்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரும், கீழ்பெண்ணத்தூர் பகுதியில் வசித்து வரும் ராமசாமி என்கின்ற நபரும் இணைந்து புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை குறைந்த விலையில் வாங்கி கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தனியம்பாடி காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட,  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தண்டராம்பட்டு பகுதி அருகே மதுபாட்டில்களை விற்க முயன்ற […]

Categories
மாநில செய்திகள்

ஏராளமான வேலைவாய்ப்பு….. ராணுவத்தில் ஆசையா…? கட்டாய வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. அப்புறம் வருத்தப்படுவீங்க….!!

திருவண்ணாமலையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது. திருவண்ணாமலையில் ராணுவத்திற்கான ஆள் சேர்க்கும் முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை மாநகரை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1 முதல் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

இளைஞர்களே பயன்படுத்துங்க… இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்!

திருவண்ணாமலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலையில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் இளைஞர்கள் இதில் கலந்துகொள்ளலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை இதற்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்னடா….. ஆம்பளைங்களா வந்து போறாங்க….. போலீஸ் சந்தேகம்…… பெண் கைது….!!

திருவண்ணாமலை அருகே வீட்டின் பின் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியில் நேற்றைய தினம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு தெருவில் உள்ள வீட்டில் ஆண்கள் சிலர் அதிக அளவில் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் மப்டியில் அங்கே சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது செல்வி என்கிற 55 வயது மதிக்கத்தக்க பெண் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

6 TO 8….. ரூ200…. 10 TO 12….. ரூ800….. அரசு பள்ளியில் அநியாய கட்டண வசூல்…… நடவடிக்கை எடுக்குமா DPI….!!

திருவண்ணாமலை அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காரணம் மற்றும் ரசீதின்றி அநியாய கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த வெம்பாக்கம் தாலுகா பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் படித்து வரும் மாணவ மாணவிகளிடம் அப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் எட்டாம் வகுப்பு வரை ரூபாய் 200ம்  10 முதல் 12 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தடுப்பூசியால் 4 மாத குழந்தை மரணம்….. வழக்கும் வேணாம்…. எதுவும் வேணாம்…… பெற்றோர்கள் கதறல்….!!

திருவண்ணாமலை அருகே தடுப்பூசி போட்ட பின் குழந்தை உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை  அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவருக்கும் லத்தீஸ் என்ற ஆண் குழந்தை நான்கு மாதங்களுக்கு முன்பு பிறந்தது.  நான்கு மாதங்கள் ஆன நிலையில் லத்தீஷிற்கு தடுப்பூசி போடுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளனர். அங்கு தடுப்பூசி போட்டு வீட்டிற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

106+21….. ட்ரைவர்….. கண்டக்டருக்கு நிரந்திர பணி…… அதிமுக MLA வழங்கல்….!!

திருவண்ணாமலையில் அரசு பேருந்தின் ட்ரைவர் கண்டக்ட்ர்களுக்கான நிரந்தர பணிக்கான நகல் வழங்கப்பட்டது.   ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட டிரைவர் கண்டக்டர்களுக்கு நிரந்தர பணிக்கான நகல் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்க சிறப்பு அழைப்பாளராக அப்பகுதி அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் பங்கேற்றார். இதையடுத்து விழாவில் பங்கேற்ற அவர் 106 ட்ரைவர்களுக்கும், 21 கண்டக்டர்களுக்கும் நிரந்தர பணிக்கான நகலை வழங்கினார். இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரியவகையை சேர்ந்த ஆந்தை வனக்காப்பாளரிடம் ஒப்படைப்பு

அரிய வகை ஆந்தை ஒன்று  கண்டெடுக்கப்பட்டு வனக்காப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. வந்தவாசி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கும் அதன் அருகில் உள்ள சிறிய கடைக்கும் இடையிலுள்ள பகுதியில் அரியவகை ஆந்தை ஒன்று அமர்ந்து இருந்ததாகவும் அது பறக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் தகவல் தெரியவந்தது. இதனையடுத்து வந்தவாசி தீயணைப்பு படையினர் சுப்புராஜ் தலைமையில் வந்து பறக்க முடியாத ஆந்தையை மீட்டு தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதைனை தொடர்ந்து வனக்காப்பாளரடம் அரியவகை ஆந்தையை ஒப்படைத்துள்ளனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அக்காவை கொலை செய்த தம்பி

சொத்துப் பிரச்சினையில் சொந்த அக்காவை கொலை செய்துவிட்டு காவல்துறையில் சரணடைந்த தம்பி ஆரணியை சேர்ந்த ஜெய்சன்ராஜின் மனைவி எலிசபெத். இவருக்கும் எலிசபெத்தின் தம்பியான சந்தோஷம் என்பவருக்கும் சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. தாயின் பென்ஷன் தொகையை மாதம் மாதம் தன்னிடம் கொடுத்து விட வேண்டும் என சந்தோஷம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் போல் இன்றும் அக்காவின் வீட்டிற்கு சென்று தனக்கு சொத்தை பிரித்து தரும்படி தகராறு செய்துள்ளார். இதனால் அக்கா தம்பி இடையே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அய்யா….. மிரட்டுதாங்கய்யா….. நீங்க தான் காப்பாத்தணும்….. புல்லுக்கட்டுடன் போராட்டம்….. கலெக்டரை கலங்க வைத்த விவசாயி…!!

திருவண்ணாமலை அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி நியாயம் கேட்டு தனது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தோறும் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை முதியோர் உதவித்தொகை வங்கி கடன் உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிரிவலம் முடித்து திரும்பிய தம்பதியிடம் வழிப்பறி…. போலீஸ் விசாரணை…

கிரிவலம் சென்று திரும்பிய தம்பதியினரை தாக்கி நகை பறித்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகில் உள்ள பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் அருணா தம்பதியினர். நேற்றைய முன் தினம் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்றன.ர் கிரிவலம் முடித்து இரவு 2 மணி அளவில் வீட்டிற்குத் திரும்பினர். வரும் வழியில் செல்வா நகர் வந்த பொழுது எதிரே பைக்கில் வந்த இருவர் தம்பதியினரை வழிமறித்து அருணாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து உள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு….. கிரிவலத்திற்கு உகந்த நேரம் எப்போது….? திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் மேற்கொள்வதற்கு உகந்த நேரம் எப்போது என்பதை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பௌர்ணமி கிரிவலத்திற்கு பிரசித்தி பெற்ற கோவில் என்றால் அது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் தான். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று இந்த கோவிலில் தமிழகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள வருவார்கள். அந்த வகையில், இந்த மாதம் வரக்கூடிய சிறப்பு பவுர்ணமி தினத்திற்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த காலத்துல இப்படியா ?… கோடி சொத்து வேணா ….. விவசாயியுடன் திருமணம்…. என்ஜீனியரிங் பெண்ணுக்கு குவியும் பாராட்டு….!!

திருவண்ணாமலையில் விவசாயியை திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்கும் அவரது தந்தைக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த  வண்ணம் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் பகுதியை அடுத்த முனியன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவரது மகள் அரசம்மாவை இன்ஜினியரிங் படிப்பு படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்து 27  வயது ஆகும் நிலையில் அவரை வெளிநாடு மாப்பிள்ளைகளும், ஐடி கம்பெனியில் பணிபுரியும் மாப்பிள்ளைகளும் தொடர்ந்து பெண் கேட்டு வந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் சம்மதம் தெரிவிக்காத அரசம்மா, அதே […]

Categories

Tech |