திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கும், தனி சன்னதியில் இருக்கும் வீர ஆஞ்சநேயருக்கும் பன்னீர், தயிர்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
Tag: #thiruvaroor
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கடலூர் தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள லெட்சுமாங்குடி பகுதியில் முத்துக்குமரன்- வித்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். உள்ளூரில் காய்கறி வியாபாரம் பார்த்து வந்த முத்துக்குமரன் போதிய வருமானம் இல்லாததால் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு முத்துக்குமரனை ஒட்டகம் மேய்க்க கூறியுள்ளனர். இதுகுறித்து முதலாளியிடம் கேட்டபோது முத்துக்குமரனுக்கும் முதலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் […]
மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 4 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 4 பேர் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் சர்வமாணியம் கிராமத்தில் முரளி(32) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முரளி, ராஜ்குமார்(40), லட்சுமணன்(49), ரமேஷ்(40) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்கள் நான்கு பேரையும் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்குன்னம் கிராமத்தில் ஊஞ்சல் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் தீர்மானித்தனர். இதற்காக கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. இந்நிலையில் திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கணபதி பிரார்த்தனை, நவகிரக ஹோமம், நாடிசந்தனம், கோ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சியில் திரளான […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி உப்புக்கார தெருவில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழாவின் 7-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலில் வைத்து பெண்கள் அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக முளைப்பாரி மன்னார்குடி திருப்பாற்கடல் தெரு குளக்கரையில் இருந்து ஊர்வலமாக காந்தி ரோடு, கடைத்தெரு வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கட்டுபாட்டை இழந்த லாரி குடிசை வீட்டிற்குள் புகுந்த விபத்தில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மணல் லோடு ஏற்றுக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றது. அங்கு மணலை இறக்கிவிட்டு லாரி திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தென்னவராயன்நல்லூர் சாலை அருகே இருக்கும் குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதனால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து […]
சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் கஸ்தூரி என்பதும், சட்டவிரோதமாக அவர் சாராயம் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
தனியார் பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயந்தி மடப்புரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து ஜெயந்தியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயந்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
லாரியிலிருந்து டயர் மற்றும் இரும்பு கம்பிகளை திருடிய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியிலுள்ள பழைய இரும்பு கடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சரக்கு வாகன ஓட்டுனர்களான பிரவீன் மற்றும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளிலுள்ள […]
இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வண்டாம்பாளை மேலவெளியில் பெரியார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியார் வண்டாம்பாளை பிரதான சாலையை கடக்க முயன்ற போது யாசர் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த பெரியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி எதிரே இருந்த 98 ஆண்டு பழமை வாய்ந்த கொடிமரம் பழுதடைந்தது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியில் இருந்து 54 அடி உயர தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு ஆகம விதிப்படி புதிய மரம் உருவாக்கப்பட்டது. […]
திருவாரூர் மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் திருவாரூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும் டெங்கு கொசுவை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள அம்மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார் அதன்படி 44 கிராம ஊராட்சிகளில் கொசு உற்பத்தியை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதுகுறித்து அவர் கூறியதாவது ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுவீடாகச் சென்று சுத்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]
திருவாரூர் மாவட்டத்தில் வாகனசோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் அவருடைய உறவினர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார் இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சை பின்தொடர்ந்தார் ஹரிஹரன் . திருவாரூர் அருகே காட்டாறு பாலம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஹரிஹரனை காவல்துறையினர் வழிமறித்தனர் […]