திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முருகனின் பக்தி பாடல்களை பாடியும் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் பொங்கல் நாளன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:3௦ மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். இதனைத்தொடர்ந்து 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மற்ற கால பூஜைகளும் திருச்செந்தூர் […]
Tag: tiruchendur
புத்தாண்டு நாளான இன்று திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்து செல்வார்கள். தமிழ் மாதம் மார்கழி முதல் நாளிலிருந்து தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டான […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு, விபூதிப் பிரசாதம் வழங்கிட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோயிலாகவும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இக்கோயிலில், ரூ.250 கட்டணத்தில் சிறப்பு விரைவு தரிசனம், ரூ.100 கட்டணத்தில் […]
மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 12 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மற்றும் ஹைட்ரோகார்பன் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஹைட்ரோகார்பன் விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம். அது இருக்கக்கூடிய வளத்தை பயன்படுத்தக்கூடிய ஒன்று என்று கூறி அதனை […]
தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 6 […]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில்ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இம் மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று அதிகாலை ஒரு மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் பின்பு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும். […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த திருமதி துர்காஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.