சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜா பேட்டை பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன்ராஜை சக தொழிலாளர்களான காளி, பகவதி ராஜ் மற்றும் குமார் ஆகியோர் மது அருந்திவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் மோகன் […]
Tag: #tiruchi
மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை காவல்துறையினர் புது பேருந்து நிலையம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக […]
போதையில் நான்கு நண்பர்கள் இணைந்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகில் இருக்கும் பாரதி நகர் பகுதியில் அருண் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 4 டன் எடையுடைய யானை சிலை பூஜைகள் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பல வருடங்களாக கற்சிலை வடிவமைக்கும் சிற்ப கூட்டத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் இருக்கும் ஒரு கோவிலுக்கு யானை சிலை செய்வதற்காக கார்த்திக்கிற்கு ஆர்டர் வந்துள்ளது. இதனையடுத்து கார்த்திக் ஒரே கல்லில் 4 டன் எடையிலான யானை சிலையை அழகாக […]
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கேசவன் என்பவர் இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுதபடி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளி தனது வீட்டு குளியலறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து […]
ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ரயிலில் சென்ற பயணிகளிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த 4 பயணிகளிடம் உள்ள கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 199 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த 4 பேரும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள […]
பிள்ளைகளின் தற்கொலைக்கு காரணமான தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ராதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனலட்சுமி, திவ்யா என்ற 2 மகள்களும், விக்னேஸ்வரன் என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் தனலட்சுமி பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதன்பின் ஒரு தனியார் பள்ளியில் திவ்யா 11-ஆம் வகுப்பும், விக்னேஸ்வரன் 8-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். […]
முன்னாள் ராணுவ வீரர் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியில் பா. ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பக்கத்தில் முன்னாள் ராணுவ வீரரான பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் பாலமுருகனுக்கு திருமணமாகி தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன் பின் 2-வதாக அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்த போதும், கருத்து […]
வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணி போல் நடித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் பரிமளா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாள் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தால் அவர் பரிமளாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் ராஜ்குமார் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரிமளா திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பம் தரித்த 2 மாதத்திலேயே பரிமளாவின் கர்ப்பம் கலைந்துவிட்டது. […]
சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 9 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக காவிரி ஆற்று பகுதியில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக சாக்கு மூட்டையில் மணல் அள்ளி, அதனை 9 பெண்கள் கொண்டு சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மணல் கடத்திய பெண்களிடம் நடத்திய விசாரணையில் […]
சொகுசு காரில் 21 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த காருக்குள் பொட்டலம் பொட்டலமாக 21 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் உறையூரில் வசிக்கும் ஆனந்தன், […]
ஜன்னல் கம்பியை அறுத்து 10 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் அப்துல் மாலிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நஜிமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் நஜிமா வீட்டை பூட்டி விட்டு கடந்த 25-ஆம் தேதி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர்களின் உறவினரான சலீம் என்பவர் நஜிமா வீட்டின் […]
விதிமுறைகளை மீறி திறந்து வைத்து விற்பனை செய்த 3 இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி உள்ளிட்ட அனைத்துக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு சந்து கடை மற்றும் தேவதானம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் ஆடு மற்றும் கோழி இறைச்சி […]
மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர் பகுதியில் கூலி தொழிலாளியான நத்தர்ஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நத்தர்ஷா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் மது கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த நத்தர்ஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இனாம்குளத்தூர் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் […]
சட்ட விரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்கு அப்பகுதியில் ரகசியமாக சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கட்டால் என்ற பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக சங்கர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கரும்புலி பட்டியில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மணப்பாறை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக கோபிநாதன் மற்றும் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிறைக்காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவவாண்டகுறிச்சி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மத்திய சிறையில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா வேலை முடித்து விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இளையராஜா திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சென்னையில் இருந்து டால்மியாபுரம் நோக்கி வேகமாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக இவரின் […]
நோயாளி கொரோனா சிகிச்சை மையத்தின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் துவாக்குடியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆரோக்கியராஜ் திடீரென சிகிச்சை மையத்தின் 2-வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய […]
கூலி தொழிலாளியிடம் 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பூக்கடை பகுதியில் போஸ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் போஸ் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு அம்பிகாபுரம் பகுதியில் வசிக்கும் ராஜாமுகமது, வினோத்குமார், லோகநாதன் போன்ற மூன்று வாலிபர்கள் சென்றுள்ளனர். அப்போது 3 வாலிபர்களும் இணைந்து கத்தியை காட்டி மிரட்டியதோடு, போஸிடம் இருந்த 2000 ரூபாய் பணத்தை பறித்து விட்டு […]
மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அதவத்தூர் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷிற்கு சோமரசம்பேட்டை அருகில் இருக்கும் கொய்யா தோப்பு பாலம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு இருவர் இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரி […]
எல்.இ.டி டி.வி-யை திருடிய குற்றத்திற்காக இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த எல்.இ.டி டி.வி-யை திருடிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனை அடுத்து காலையில் வசந்தகுமார் டி.வி திருடு போனதை பார்த்து அதிர்ச்சி […]
குடும்ப தகராறில் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ஆறுமுகம் என்ற மாநகராட்சி துப்புரவு பணியாளர் வசித்து வருகிறார். இவருக்கு துரைசாமி, ஐயப்பன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் துரைசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே திருமணமாகாமல் இருந்துள்ளார். மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக ஐயப்பன் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்ணன் […]
100 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு காவல்துறையினருக்கு வெள்ளியங்குடி பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவரின் தோட்டத்தில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு பேரலில் இருந்த 100 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அதனை […]
61 வயதான முதியவர் மாற்றுத்திறனாளி மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் 61 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இவருடைய மூத்த மகள் கை, கால்களை அசைக்க முடியாமலும், பேச முடியாமலும் மாற்றுத்திறனாளியாக இருக்கின்றார். இந்நிலையில் திருமணம் ஆகாத இந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு திடீரென உடல் […]
ரயிலில் வைத்து பெண்ணிடம் 3 வாலிபர்கள் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி இந்த தம்பதிகள் சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் திருச்சி முடுக்குபட்டு ரயில்வே கிராசிங்கில் நின்று கொண்டிருந்தபோது, தெய்வானை கையில் இருந்த பையை 3 மர்ம நபர்கள் […]
2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் கஞ்சா பதுக்கி வைத்திருந்த […]
நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கனாங்குடி கட்டளை வாய்க்கால் பகுதியில் 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி கொண்டிருப்பதாக நவல்பட்டு காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் நரிக்குறவர் காலனி பகுதியில் வசிக்கும் சக்திவேல், சரண்ராஜ் […]
சாராயம் காய்ச்சிய 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராம்ஜி நகர் பகுதியில் திருச்சி மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஜீவிதா மற்றும் விமலாதேவி என்ற இரண்டு பெண்கள் வீட்டிலேயே சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த இரண்டு பெண்களையும் மதுவிலக்கு […]
நள்ளிரவு நேரத்தில் குடிசை பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அம்மாபட்டி பகுதியில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ஒரு குடிசை அமைத்து அதில் சில பொருட்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த குடிசை தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசையில் […]
வான வேடிக்கை வெடிகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவிழா சமயங்களில் வானவெடி வைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவ்வாறு திருவிழாவிற்காக வாங்கி மீதமிருந்த 18 வான வெடிகளை கண்ணன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்ட கழிவறையில் பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்நிலையில் வெப்பம் தாங்காமல் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து வான வெடிகளும் வெடித்து சிதறிவிட்டது. மேலும் […]
ராக்கெட் லாஞ்சர் உட்பட வெடிக்காத 4 குண்டுகளை செயலிழக்க செய்து அதிகாரிகள் புதைத்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வீர மலை அடிவாரத்தில் வழக்கமாக ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த பயிற்சி முடிந்த பிறகு ராணுவ வீரர்கள் வெடிக்காத குண்டுகளை செயலிழக்க செய்து விட்டு அங்கிருந்து புறப்படுவர். இந்நிலையில் கோவையில் இருந்து வந்த ராணுவ வீரர்கள் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். […]
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த வாலிபர் கை மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனுக்கா நத்தம்பகுதியில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பிச்சை மணிக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டது. மேலும் பிச்சைமணி தனது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் […]
விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக நேற்று ஒரே நாளில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து முகக் கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் […]
சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வழுதியூர் பகுதியில் தங்கராசு என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தங்கராசு தனக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராய […]
பேருந்து ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காஜாமலை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக சக்திவேல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 20 நாட்களாக வேலை இல்லாமல் தவித்த சக்திவேல் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டைபட்டி பகுதியில் மணப்பாறை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த 2 பேரும் அதே பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் லோகநாதன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் […]
தந்தை இறந்த துக்கத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில் குமாரின் தந்தை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். அதன்பிறகு செந்தில்குமாரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திலேயே குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் தனது தந்தை இறந்த மனவேதனையில் இருந்த செந்தில்குமார் அடிக்கடி இரவு நேரத்தில் “அப்பா என்னை […]
அரசு அனுமதி அளித்த போதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஏராளமான கடைகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக குவிந்தனர். ஆனால் தொட்டியம் கடை வீதியில் இருக்கும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறும் […]
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக் கோட்டை வாசல் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மதுமிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மதுமிதா கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து தனது தாத்தா ஆறுமுகம் என்பவரது வீட்டிற்கு மதுமிதாவும், அவரது தாய் சகுந்தலாவும் சிகிச்சைக்காக […]
சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் பகுதிகளில் துர்கா தேவி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் துர்காதேவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு […]
இ-பதிவு முறை இல்லாமல் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களும், மாவட்டத்திற்குள்ளேயே பயணிப்பவர்களும் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் […]
அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளை விதித்து நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் கீழ் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை […]
இரண்டு காளைகள் சண்டை போட்டபோது தவறி கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவரது ஜல்லிக்கட்டு காளையுடன் அதே பகுதியில் இருக்கும் மற்றொரு காளை சண்டை போட்டுள்ளது. இந்நிலையில் இரண்டுகாளைகளும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்ட போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 30 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனை பார்த்ததும் […]
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரணிப்பட்டி கிராமத்தில் இருக்கும் குளக்கரை பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் […]
சில கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்டிபெட்டியில் இருக்கும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சுமார் 120-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் […]
தனியார் நிதி நிறுவனங்கள் ஊரடங்கு காலங்களில் பொது மக்களிடமிருந்து பணம் வசூலிக்க கூடாது என்று தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் வேலைகளை செய்ய முடியாமல் பொருளாதார பிரச்சனையில் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களை […]
திருமணமான மூன்று மாதங்களில் புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் அருமை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்ணா வளைவு பகுதியில் வசிக்கும் லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் புதுமண தம்பதிகள் இருவரும் காட்டூர் பகுதியில் இருக்கும் பாரதிதாசன் நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதல் மனைவியான லதாவை அருமை […]
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் துப்புரவு பணியாளராக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களின் மூத்த மகள் […]