நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் மணி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு மணி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, 2 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை […]
Tag: tiruchy
தங்கள் வீட்டுப் பெண்ணிடம் ஏன் செல்போன் எண்ணை கேட்டாய் என்று கூறி மனநலம் பாதிக்கப்பட்டவரை 3 பேரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனவளர்ச்சி குன்றிய காணப்பட்டுள்ளார். இவருக்கு இளமாறன் என்ற சகோதரர் இருக்கிறார். இந்நிலையில் பார்த்திபனிடம் தனது வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக அருகே உள்ள எலக்ட்ரிஷன் குமார் என்பவரை வீட்டிற்கு அழைத்து வருமாறு இளமாறன் […]
காவலாளியை தாக்கி விட்டு கோவிலில் 2 மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள அறிவியல் கோளரங்கம் எதிரே பிரசித்தி பெற்ற பச்சநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை தனியார் அமைப்பு நிர்வகித்து வருவதால் அனைத்து நாட்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். இந்த கோவிலில் திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் வசித்து […]
40 நிமிடங்களில் 60 வகையான பாரம்பரிய உணவு வகைகளை செய்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனை படைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா மற்றும் தர்ஷினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் பல வகையான மூலிகை செடிகளை தங்கள் வீடுகளில் வளர்ப்பதுடன் அந்த மூலிகைச் செடி […]
திருச்சி விமானநிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணிற்கு காலை வேளையில் ஒரு போன்கால் வந்துள்ளது. இதனை திருச்சி விமான நிலையத்தின் நிலைய மேலாளரான ஆல்பர்ட் என்பவர் எடுத்து பேசியுள்ளார். அதன் எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தகுதி இல்லாமல் விமான நிலைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருச்சி விமான நிலையத்திற்குள் குற்றவாளிகளுக்கு […]
799 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 28ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த ஒரு நபரை தனியறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் […]
பெண் காதலை ஏற்க மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அட்டப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரத்குமார் அவர் வசிக்கும் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் ரிலாக்ஸ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டருக்கு இந்திரா காந்தி தெருவில் வசித்துவரும் வினோத் காம்ப்ளி என்ற வாலிபர் சென்றுள்ளார். அப்போது சென்டரின் உரிமையாளர் அங்குள்ள பெண்ணுடன் அவரை விபசாரத்தில் ஈடுபட அழைத்துள்ளார். இதனால் வினோத் காம்ப்ளி கே.கே. நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மசாஜ் சென்டரின் […]
போலி மசாஜ் சென்டர் நடத்தி வந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஸ்பா சென்டர் என்ற பெயரில் போலி மசாஜ் சென்டர் நடத்தி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் கும்பலை பிடிக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து அங்குள்ள அனைத்து மசாஜ் சென்டர்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் […]
தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தேவிமங்கலம் கரியமாணிக்கம் பிரிவு ரோட்டில் கண்ணன் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு மகாலெட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு பாம்பு மகாலெட்சுமியை கடித்ததால் கண்ணன் அவரை உடனடியாக மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் […]
இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பந்தானது மூதாட்டியின் தலையில் விழுந்து அவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் கல்லறை மேட்டு தெருவில் பாப்பாயி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10ஆம் தேதி பாப்பாயி அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, அந்த பந்தானது எதிர்பாராவிதமாக அந்த மூதாட்டியின் தலையில் விழுந்து விட்டது. இதனால் நிலை தடுமாறி […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம்சமயபுரம் பகுதியில் சபியுல்லா என்பவரின் மகனான அப்துல் அஸ்லாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் இவர் தனது உறவினரான அப்துல் ஹக்கீம் என்பவரது பராமரிப்பில் இனாம் சமயபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தில் […]
ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து ஸ்கூட்டரில் டிவிஎஸ் டோல்கேடிலிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவரது பின்னால் திருப்பத்தூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் ஞான ஜோதி என்ற உதவியாளர் அமர்ந்திருந்தார். அப்போது […]
திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள ரெட்ஹில்ஸ் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித் […]
எடையில் மோசடி செய்ததால் விவசாயிகள் வியாபாரியையும், லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த வியாபாரி, சோபனபுரம் பகுதியில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வந்துள்ளார். இவர் ஒரு நாளைக்கு 40 டன் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து அவற்றை இரண்டு லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் மக்காச்சோளத்தை லாரிகளில் ஏற்றி சென்ற போது அதன் எடை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் சந்தேகப்பட்டனர். எனவே அந்த மூட்டைகளை லாரியிலிருந்து […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அதற்கு காரணமாக இருந்த நபரை பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிலோன் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இத்தகவலை அறிந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் […]
திருச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அனைவருக்கும் நினைவிருக்கும் சென்ற 2018 ஆம் ஆண்டு ஆர்ஆர்பி நடத்திய தெற்கு ரயில்வே தேர்வில் 400க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில், தேர்ச்சி பெற்றிருந்த தமிழர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தது. இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல வட மாநில தொழிலாளர்கள் ரயில்வே பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இந்த […]
திருச்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல்திங்கள் கிழமை வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே பொது மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இதனை காரணமாக வைத்து வெளியே வரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஆங்காங்கே மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சேலம் […]
திருச்சியில் வருகின்ற 25, 26ம் தேதிகளில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, திருச்சி மாநகர பகுதிகளில் தற்காலிக […]
திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல் பூரண குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரளா தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்விரைவாக குணம் அடைந்து வருவது ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 32 […]
திருச்சியில் இனி வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய கூடாது என 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குட்செட் யாரட்க்கு நாள்தோறும் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சரக்கு ரயில் மூலம் வந்து சுமை தூக்கும் தொழிலாளர்களால் இறக்கப்பட்டு பின் லாரியில் ஏற்றி அரசு குடோனுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஊரடங்கு காரணமாக சுமார் 350க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றி செல்வதால் லாரி ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் […]
திருச்சி அருகே மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் ஐம்பத்தி ஒரு சவரன் நகை ஐந்தரை லட்சம் பணம் உள்ளிட்டவற்றை திருடிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாலாஜி நகரில் 7-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி வேலைக்கு […]
திருச்சியில் 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மலேசியா மற்றும் ஷார்ஜாவில் இருந்து தமிழகத்திலுள்ள திருச்சிக்கு வருகை தந்த 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர்களிடம் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவத்துறை நிபுணர்கள், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் மூவரையும் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே வாரசந்தையை நீக்கக்கோரி காய்கறி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட கடைகளில் 126 காய்கறி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் தங்களது வியாபாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென வாரசந்தை என்ற பெயரில் ஸ்ரீரங்கத்தின் தெப்பக்குளம் பகுதிகளிலும், கீதா புரத்திலும் […]
இன்று காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி பூ சந்தையில் ரோஜா விற்பனை அமோகமாக காணப்பட்டுள்ளது. இன்று பிப்ரவரி 14 காதலர் தினம் இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் தங்களது காதலை வெளிப்படுத்தி வருவர். அந்த வகையில் காதலர் தினம் என்றாலே ரோஜா, சாக்லேட், காதலர் தின சிறப்பு அட்டை உள்ளிட்டவை அதிகம் விற்பனை செய்யப் படுபவை. அந்த வகையில், திருச்சியில் உள்ள பிரபலமான காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட் […]
திருச்சி அருகே சத்திரம் வழித்தடத்தில் செல்லும் மாநகர பேருந்து நாள்தோறும் பழுதடைவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருபைஞ்சீலி வரை நாள்தோறும் அரசு மாநகர பேருந்து ஒன்று பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் கூலித் தொழிலாளிகள் என 100க்கும் மேற்பட்ட பொது மக்களை ஏற்றிச் சென்று வருகிறது. இந்நிலையில் இந்த பேருந்து மிகவும் பழைய பேருந்து என்பதால் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடும். அதேபோல் நேற்று காலையில் சத்திரம் பேருந்து […]
திருச்சி அருகே ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம், சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கம் சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த நிகழ்வுக்கு மாநகர போக்குவரத்து துணை ஆணையர் வேதரத்தினம் தலைமை தாங்க, அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவிக்கப்பட்டு, மீண்டும் ஹெல்மெட் அணியாமல் வரக்கூடாது […]
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாத்தா சொத்தை பேரனுக்கு வழங்க கோரி ஏட்டாக பணிபுரியும்பெண் காவலரின் கணவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்தில் சந்தேகப்படும்படி தாடியுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அவரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்று சுவர் மீது ஏறி குதித்து உள்ளே […]
திருச்சியில் 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், அவர்கள் விற்கப்பட்ட குழந்தைகளா? அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இரண்டு தம்பதியினர் வேறொரு தம்பதியினரிடம் இருந்து குழந்தையை வாங்கியதாகவும், அதேபோல் மற்றொரு தம்பதியினர் வேறொரு தம்பதியினருக்கு தங்களது குழந்தையை விற்றதாகவும் குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் துறை சார்பில் […]
திருமணமான 8 மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஆத்திரம் அடைந்த கணவன் 2 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் நகரில் வசித்து வருபவர் கமலகாந்த் என்ஜினீயரான இவருக்கும் புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் ஜீவிதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் […]
திருச்சி அருகே பர்தா அணிந்து குழந்தையை கடத்தி விற்க முயன்ற இந்து தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியையடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சரசு. இவர் தனது 2 வயது குழந்தையுடன் கடந்த 26 ஆம் தேதி அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பர்தா அணிந்து வந்த ஒரு பெண்ணும் அவரது கணவரும் குழந்தையுடன் பேச்சு கொடுத்தவாறே அதனை தூக்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த […]
திருச்சியில் கஞ்சா போதையில் நண்பனை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். திருச்சியில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதியில் உள்ள கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளைஞரை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், இறந்தவர் தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்றும், நண்பர்களுக்கு இடையே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரால் முகமது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்தது. […]
திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு. பாலகரை மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்த இவர் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இன்று அதிகாலை மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயரகுவை அடையாளம் […]
திருச்சியில் 8 வயது சிறுமிக்கு தாயின் 2 வது கணவர் சூடு வைத்து பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைல்டு லைன் இயக்குனர் முரளிதரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் தங்களது பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தந்தை சூடு வைத்து சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அதிர்ந்து போன அவர் உடனடியாக […]
திருச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 198 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பொது மக்களை கொண்டு கிராமப்புற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து சமூக தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் பல்வேறு விதங்களில் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 198 […]
மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. திருச்சியில் மது போதையில் சென்ற இளைஞருக்கு சாலை போக்குவரத்தை சரி செய்யும் பணி தண்டனையாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டியதால் போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில் சீரார் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் இரண்டு தினங்களுக்கு மாநகர […]
திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பை அகற்றக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 350 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இதனை பெற்ற அவர் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களை விரைவாக சமர்ப்பிக்க கோரி […]
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கடந்த 3 ஆண்டுகளாக சீரடியில் உள்ளது போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக் கலையுடன் 20 ஏக்கர் பரப்பளவில் 60,000 சதுர அடியில் 30 கோடி ரூபாய் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேகம் விழா கடந்த 17ம் தேதி தொடங்கி காவிரி ஆற்றிலிருந்து 1,008 குடங்களில் எடுத்து வரப்பட்ட தண்ணீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்த […]
திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு, போட்டியில் காளை முட்டி தூக்கியதில் சிறுமி உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே புனித வியாகுல மாதா ஆலய மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண மணப்பாறை வட்டாட்சியர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 650 காளைகள் […]
ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபகாலமாக ஆபாச படம் இணையதளத்தில் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுபவர்கள் என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ பதிவுகளை பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ மட்டும்தான் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் திருச்சியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க கிறிஸ்டோபர் என்பவர் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த […]
ஆபாச படத்தை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் சிறுவர் சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை பார்ப்பவர்கள் பகிர்பவர்கள் மீதுதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சுமார் 3,000 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு பிறகு கைது […]
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே எம்பத்தூர்சத்திரம் என்கின்ற இடத்தில் மயானத்திற்கு நிரந்தர பாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் என்பத்துர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள். இவர் வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை அன்று இறந்து போனார். இதனையடுத்து இவரை அடக்கம் செய்வதற்காக இவரது உறவினர்கள் காவிரிக்கரையில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். செல்லும் வழியில் உள்ள மயான சாலை தனியாருக்கு சொந்தமானதாக இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் அந்த சாலையை கடக்கும் […]
தமிழ்நாட்டில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை விழுந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத […]
ரிக் வாகன இயந்திரத்தின் மூலம் குழந்தை சுர்ஜித்தை கண்டிப்பாக மீட்டெடுப்போம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30 நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் மூன்று […]
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க்கும் பணியில் தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழு இணைந்துள்ளது. திருச்சி மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். அவனை மீட்பதற்கு கடந்த இருபது மணி நேரமாக மீட்புக்குழு போராடி வந்துள்ளது. இதையடுத்து முதல் கட்டடங்களில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை மீட்பு பணியின் போது மணல் சரிந்து 70 அடியில் தற்போது சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் […]
மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 […]
திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் ரூ37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது திட்ட குடியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் உள்ளிட்டோர் சந்தேகிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது […]
திருச்சி லால்குடி அருகே உடையும் நிலையில் உள்ள பங்குனி அணைக்கட்டை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் பங்குனி அணைக்கட்டு காவிரி ஆற்றில் இருந்து வரும் நீர் மற்றும் உபரி நீரால் நிரம்புகிறது. சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களுக்கு பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் பங்குனி அணை கட்டு, தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை […]
திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. திருவிழாவின் 9ஆம் நாளான இன்று, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக கிளிமாலை கொண்டு வரப்பட்டது. இதை அணிந்த படி, நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருளினார் . அப்போது ,பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா’ என பரவசத்துடன் தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு […]