தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு 232 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜமால், ஜோசப் ஜெட்சன், அசோகன், பத்மநாபபிள்ளை, மனோகரன், ரவீந்திரன், ராஜ், திருப்பதி, ஞானராஜ் ஆகியோருக்கும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், சண்முகசுந்தரம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன், தனபால், கோவிந்தன், ஜெயசீலன், சிவசங்கரன், மூக்கன், ஜெயப்பிரகாஷ், முத்து […]
Tag: Tirunelveli
போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளியில் மாவட்ட அளவிலான வளையபந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறுமளஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் இளையோர் ஆண்கள் பிரிவில் மகேஷ், விஜயராஜா, மூத்தோர் பெண்கள் பிரிவில் கீர்த்திகா, நந்திதா ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இந்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் கோட்டையடி சிக்னல் அருகே ஜான் சிங் சீயோன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜானுக்கும் பட்டிரைக்கட்டிவிளை பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று ஜானின் ஹோட்டலுக்கு சென்ற கணேசன், சுந்தர், பிரபாகரன், கலைச்செல்வன் ஆகியோர் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, ஜானை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இத குறித்து ஜான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கணேசன் உட்பட […]
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது. இதே போல் நெல்லை மாநகரை சுற்றி இருக்கும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி முதல் நவம்பர் 2022-கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுகளுக்கு 2 மற்றும் 3- ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அபராத கட்டணமின்றி வருகிற 5- ஆம் தேதி வரை இணையவழியில் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். அபராத கட்டணத்துடன் 7- ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தேர்வு கட்டணத்தை செலுத்தி இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊருடையார் புரத்தில் வெள்ள பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வண்ணார்பேட்டையில் இருக்கும் தனியார் மார்க்கெட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் ரவை பாக்கெட்டை வாங்கியுள்ளார். அப்போது ஒரு பாக்கெட் விலை 43 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கூடுதலாக ஒரு ஒரு ரூபாய் சேர்த்து பில்லில் 44 ரூபாய் என குறிப்பிட்டு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வெள்ள பாண்டி வழக்கறிஞரான பிரம்ம நாயகம் மூலம் திருநெல்வேலி நுகர்வோர் […]
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் வாலிபர் சடலமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த ஆதார் கார்டு மூலம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராதாபுரம் தெற்கு தெருவில் வசித்த கூலித் தொழிலாளியான முருகன் என்பது […]
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997 பிரிவு 41(2) என்ற உத்தரவு திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே நேற்று முதல் வருகிற 16-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாநகர பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு வேலை பார்க்கும் நர்ஸ் ஒருவர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகிறார். மேலும் விரைந்து முதலுதவி சிகிச்சை அளிக்காமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமலும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நர்ஸை இடமாற்றம் செய்வதாக டாக்டர் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது பாத்து(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்துவின் செல்போன் எண்ணிற்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் 91,139 ரூபாய் என இருந்தது. மேலும் வருகிற ஐந்தாம் தேதிக்குள் கடைசி நாள் என குறிப்பிட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளை சமாதானபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமூர்த்தி(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மாடியில் இருக்கும் கொடி கயிற்றில் பாலமூர்த்தி துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் (எண் 06910) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மறு மார்க்கத்தில் ரயில் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் கோவிலுக்கு சென்று சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன், பேச்சியம்மன், தளவாய் மாடன், தூசி மாடன் மற்றும் பரிவார தேவதைகளை வழிபட்டினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிக்காக 12 கோடி ரூபாய் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் இருக்கும் பள்ளியில் 11- ஆம் வகுப்பு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவர் மற்றொரு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் முடிந்து மாணவி வெளியே வந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மாணவர் சிறுமிக்கு தாலி கட்ட முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டவாறு ஓடியதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு […]
அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் பத்தமடை பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் அதிக பாரம் ஏற்றி கொண்டு டாரஸ் லாரிகள் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி சென்ற மூன்று லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து 1.46 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. […]
தண்ணீரில் மூழ்கி 7 மாத குழந்தை மற்றும் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி பெரியார் நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவருக்கு மாரியம்மாள்(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாதுரிதேவி(4) என்ற மகளும், நிரஞ்சனி என்ற 7 மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று காலை மாதுரிதேவி தாமிரபரணி ஆற்றை பார்க்க வேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தற்போது மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேரத்தில் கரடி ஆக்ரோஷமாக பெண்களை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் மகாத்மா காந்தி காலணியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமாரின் பக்கத்து வீட்டினரின் நாய் குட்டி காணாமல் போனது. இதனால் முத்துக்குமாரின் மனைவி சுப்புலட்சுமி, பக்கத்து வீட்டுப் பெண்கள் இணைந்து நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு நாய்க்குட்டியை தேடியுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த பெரிய கரடி […]
பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி பகுதியில் இருக்கும் தாலுகா அலுவலகம் எதிரே பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சேரன்மாதேவி, கூனியூர், பத்தமடை, புதுக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடப்பிரிவு அறையின் மேற்கூறையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததை பார்த்து மாணவர்கள் […]
அதிகாரியின் காரை வழிமறித்து பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு நகரத்தெருவில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு மேகலாவின் கணவர் சுதாகர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரது மகனும் கடந்த 2017-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி பலியானதால் மேகலா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகலாவுக்கு சொந்தமாக சிதம்பரபுரத்தில் இருக்கும் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேகலா அதிகாரிகளிடம் புகார் […]
ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பணிகரிசல்குளத்தில் புதியவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் (40) என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பெரிய முருகன் (50). என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே பயணிகளை ஆட்டோவில் ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பெரிய முருகன் கம்பியால் முருகனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த முருகன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் […]
இன்று முதல் தென்காசி வழியாக நெல்லை- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக மேட்டுப்பாளையம், தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில்களில் ஏராளமான பொதுமக்கள் பயணிக்கின்றனர். நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7:20 மணிக்கு நெல்லையில் […]
தண்ணீரில் மூழ்கி தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலடியூரில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த இர்பான் முகம்மது (34) என்பவர் தனது மனைவி ஜூட்மேரிசுசி, மகள்கள் இஷானா (8), இஷ்ரா (5) ஆகியோருடன் கடந்த மாதம் ஆலடியூருக்கு சென்றுள்ளார். கடந்த 1 மாதமாக தங்கியிருந்த இர்பான் முகம்மது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் விக்கிரமசிங்கபுரம் அருகே […]
வேதியியல் தனிம அட்டவணையை 1 நிமிடம் 33 வினாடிகளில் கூறி 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகவும், புற்றுநோய் சிறப்பு நிபுணருமாக பிரபுராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பல் மருத்துவரான ஆர்த்தி ஹரிபிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதுர்கிரிஷ் ஆத்விக்(6) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு சிறுவயதில் இருந்து தமிழ் மீது மிகுந்த ஆர்வம். இதனால் 3 வயதில் 53 […]
தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழபாலாமடை பகுதியில் நடராஜன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மணப்படை வீடு அருகே இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு அருகில் நடராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்த நடராஜன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி பகுதியில் சிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிமுத்து(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இசக்கிமுத்துவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிமுத்துவின் உடலை மீட்டு அரசு […]
வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிராஜா(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவியும், மூன்று மாத கைக்குழந்தையும் இருக்கின்றனர். நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருடன் பேச்சிராஜா மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நெல்லை- மதுரை பைபாஸ் சாலையில் […]
ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் காய்கறி வியாபாரியான வீரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோட்டைசாமி(17) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீரவேல் தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாறை இடுக்குகளில் கோட்டை சாமியின் கால்கள் சிக்கியது. இதனால் தண்ணீரில் மூழ்கிய அவரை குடும்பத்தினர் மீட்க முயற்சி செய்தனர். […]
சிறப்பு காவல் படை போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பாட்டாலியன் 12-வது சிறப்பு காவல் படையில் தமிழ்ச்செல்வன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை மணிமுத்தாறு பாட்டாலியன் குடியிருப்பில் இருந்த தமிழ்ச்செல்வன் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தமிழ்ச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் ஜோதிடரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சாந்தி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 18-ஆம் தேதி ஜோதிடம் பார்ப்பதற்காக சங்கர் கேரளா சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சங்கர் வீட்டை விட்டு வெளியேறி கடைக்கு சென்று […]
பள்ளி மாணவரை தாக்கிய சிறுவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளம் கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சஞ்சய் ஆயன்குளம் பேருந்து நிறுத்தத்தில் தனது நண்பர்களுடன் வந்து இறங்கினார். அப்போது திடீரென இரண்டு சிறுவர்கள் அங்கு சென்று சஞ்சயை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதனால் […]
ஆட்டோ பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அந்தோனியார் தெருவில் மகேந்திரன்(55) -இசக்கியம்மாள்(49) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மகேந்திரன், இசக்கியம்மாள், அவர்களது மகள் இந்துமதி(25) ஆகியோர் ஒரு ஆட்டோவில் காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலை வழியாக சென்றனர். இந்த ஆட்டோவை மலரகன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். […]
கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை அழகப்பபுரம் நடுத்தெருவில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பித்துக் கொண்டு முடிவு செய்தார். இந்நிலையில் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஒப்பந்தம் எடுத்து பழைய வீட்டை இடித்து புதுப்பித்து கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று பழைய காங்கிரீட் தளத்தை எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. இதில் பூலாங்குளம் […]
வியாபாரி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி மேலத்தெருவில் பழைய இரும்பு வியாபாரியான முத்துகிருஷ்ணன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் செல்வகுமார்(46) என்பவரும் உறவினர்கள் ஆவர். இதில் செல்வகுமார் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஹோட்டல் முன்பு செல்வகுமாரும், முத்துகிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முத்துகிருஷ்ணன் மனைவியுடன் சேர்ந்து […]
வெடிகுண்டு வெடித்து வாலிபரின் கைகள் சிதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான இசக்கிமுத்து(34) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் காடுகளில் சுற்றித் திரியும் வன விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை இசக்கிமுத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்ததால் இசக்கிமுத்துவின் கைகள் சிதைந்து அவருக்கு […]
பெண்ணை வெட்டிக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு வாகைகுளத்தில் கல்யாணசுந்தரம்(39) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் ராமலட்சுமி கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமியின் நடத்தை மீது சந்தேகம் வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ராமலட்சுமி தனது குழந்தைகளுடன் திருநெல்வேலியில் இருக்கும் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் […]
விஷம் வைத்து ஆடுகளை கொன்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியில் கோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் பெருமாள், சப்பானி ஆகியோருக்கு சொந்தமான ஆடுகளும், ராஜ் என்பவருக்கு சொந்தமான மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஆடு, மாடுகள் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்ததை பார்த்து அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம் கிராமத்தில் டேனியல் ஆசீர்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை டேனியல் தனது வீட்டு வளாகத்தில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து டேனியல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டானியல் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் அவரால் […]
சடலமாக மீட்கப்பட்ட நபரின் விவரம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகுளம் விநாயகர் நகர் பகுதியில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்கு அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ஆணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பெரியகுளம் காலனியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள்(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்த இசக்கியம்மாளை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இசக்கியம்மாள் அளவுக்கு அதிகமான சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துவிட்டார். […]
பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தந்தை உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அண்ணாநகரில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கசெல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் என்பவர் தங்கசெல்வியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்கசெல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கூட்டப்பனை சுனாமி நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான மாரியப்பன் என்பவர் பச்சிளம் […]
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை மைலப்பபுரம் வடக்கு தெருவில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார், இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த இசக்கி முத்து என்பவரிடம் அரிவாளை காட்டி முருகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இசக்கிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து […]
தீயணைப்புதுறையினர் விஷ வண்டுகளை பாதுகாப்பாக அகற்றினர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு பணவடலிசத்திரம் கிராமத்தில் விவசாயியான செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது . இந்நிலையில் தோட்டத்தில் இருக்கும் சோள படப்பிற்குள் இரண்டு இடங்களில் விஷ வண்டுகள் இருந்துள்ளது. இதுகுறித்து செல்லப்பா தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் இரண்டு இடங்களில் இருந்த கடந்தை வண்டுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலைப்பள்ளி கடந்த 1880-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த பள்ளி தொடங்கப்பட்டு 142 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் நேற்று வெள்ளிவிழா சந்திப்பை நடத்தியுள்ளனர். அப்போது 96 நண்பர் குழு சார்பில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக 10 லட்ச […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் மெக்கானிக்கான பேச்சிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புதுகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பேச்சிமுத்து கீழே விழுந்து விழுந்து படுகாயமடைந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பேச்சிமுத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளமடை கிராமத்தில் விவசாயியான அக்னி மாடன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சீவல்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தமிழர் விடுதலை களம் இயக்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சீவல்ராஜ் அப்பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இதற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சீவல்ராஜுக்கும், மாணவியின் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 7 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பயிற்சிக்காக ஒரு காரில் சேலம் நோக்கி சென்றனர். அங்கு பயிற்சியை முடித்துவிட்டு 7 பேரும் மீண்டும் அதே காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான ரவிகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரவிகுமார் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருங்காடு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து அப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரியப்பன் மற்றும் மகாராஜனை கைது […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதருக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பால்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பால்ராஜ் அப்பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பால்ராஜை கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் […]