சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிராஞ்சேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குணசேகரன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரனை கைது செய்ததோடு, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை […]
Tag: tirunelvlei
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது புள்ளியியல் துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜா பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென ராஜா மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]
அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கண்டித்தான் குளம் பகுதியில் இருக்கும் வெள்ள நீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் உடலில் துணியால் கல் கட்டப்பட்ட நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சரண்யாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் சரண்யாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]