திருப்பதியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஊரடங்கு தளர்வு பின்னர் முதலில் 33 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக அதிகளவு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், 300 ரூபாய் கட்டணத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், வி.ஐ.பி தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி […]
Tag: Tirupathi
பக்தர்களைக் கவரும் வண்ணம் திருப்பதியில் அதிக இடங்களில் மரம் வளர்ந்து பசுமையாக்க திட்டத்தை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஊரடங்கு தளர்வு காரணமாக, வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு பின்பு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் என இரண்டு பிரத்தியேக சாலைகள் அமைக்கப்பட்டு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபயணமாக சுவாமியை தரிசிக்க செல்பவர்களுக்கு ஏற்றவாறு படிக்கட்டுகளும், […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆறு கட்ட ஊரடங்கை தொடர்ந்து ஏழாவது கட்டமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் […]
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலங்களை விற்பனை செய்ய கூடாது என இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் உள்ளுர் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றவர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து உறுப்பினர்களும் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிலையில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் அறங்காவலர் குழு கூட்டம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை அதிகாலை 12 மணிக்கு வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ஆகம முறைப்படி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அதன் படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 முதல் 4 மணி வரை மத்திய மாநில அமைச்சர்களும், 4.30மணி முதல் 5 மணி வரை பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் […]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள ரஞ்சன் கோகாய் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி பதவி ஏற்றார். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருக்கும்போது, அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என ரஞ்சன் கோகாய் உட்பட நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால், இவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து, தீபக் மிஸ்ரா […]
திருவண்ணமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் வீட்டில் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஏழுமலை என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது, வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 41 சவரன் தங்க […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் . திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.கருவறை,ஆனந்த நிலையம்,பகல வடா சன்னதி,யோக நரசிம்மர் சன்னதி மற்றும் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு,பச்சை கற்பூரம்,மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட மூலிகை கலவைகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டன.இதையடுத்து கோவில் திருமஞ்சனத்தை ஒட்டி இன்று சர்வ தரிசனம்,திவ்ய தரிசனம், குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், […]
திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த குஜராத் தம்பதியினர் வளர்ப்பு பூனையை கண்டுபிடிக்கக் கோரி ரேணிகுண்டா ரயில்வே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் ஜேஸ்பாய் இவரது மனைவி மினாபீ இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத காரணத்தால் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பூனையுடன் வந்துள்ளனர். இதையடுத்து தரிசனத்திற்கு பின் சொந்த ஊர் செல்வதற்காக ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தவர்களின் பூனை தொலைந்தது. இதனால் பதற்றமடைந்தவர்கள் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் […]
பல மாதங்களாக தேடி வந்த சமூக செயல்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், பிப்ரவரி 15-ஆம் தேதி மாயமானார். அன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறிய முகிலனை அதற்கு அடுத்த நாளிலிருந்து காணவில்லை. அதன் பின் காவல்துறையினர் விசாரணை நடத்தியும், செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ் […]