போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஓட்டுநர் தனது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெற்குணம் கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வந்தவாசி செம்பூர் சாலையில் இருக்கும் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் வீரராகவன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் வீரராகவனுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து பணிமனையில் இருக்கும் மேலாளரிடம் கேட்டபோது, […]
Tag: Tiruvannamalai
வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளக்கரவாடி பழைய மண்ணை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் 100 நாள் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போதே கணபதி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணபதி ஏற்கனவே […]
மின்வாரிய அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாமரை நகரில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் செயல் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மகளின் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க ராஜசேகரின் குடும்பத்தினர் வெளியே சென்றனர். அதன் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகின்றது. இதை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா நடைபெற்றதில் அருணாச்சலேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்துள்ளது. அதன்பின் 6 மணிக்கு மேல் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் வீதியுலா நடைபெற்றுள்ளது. இந்த ஏற்பாடுகளை நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர்கள் கவனித்துக் கொண்டனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் […]
மைனர் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதோடு, அவரது பெற்றோரை எச்சரித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் பிளஸ் டூ படித்து முடித்துள்ள 17 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் உறவினர் மகனான அருண்குமார் என்பவருடன் வரும் 27ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைத்து திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருமணம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்களுக்கு ரகசிய […]
விபத்தின்போது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பெண்ணாத்தூர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வி என்ற சகோதரி உள்ளார். இவர் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலையில் பெரியகோளாபாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் செல்வி தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்தில் தலை சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே […]
தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரும்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலர் கொட்டாய் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேனை மறைத்து கொண்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். […]
சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மோத்தகல், வேப்பூர் செக்கடி, தட்டரணை போன்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் தயாளன், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பிற தனிப்பிரிவு போலீசார் இணைந்து தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் நடத்திய சோதனையில் […]
மதுவில் விஷத்தை கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முள்ளிபட்டு என்ற கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பழனி ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. அதோடு ஊரடங்கு காலத்தில் போதைக்கு அடிமையான பழனி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வாழ்க்கையில் விரக்தியடைந்த பழனி கடந்த 9ஆம் தேதி விஷத்தை […]
கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வி.வி. தாங்கல் மலையின் மீது கல்குவாரி ஒன்று உள்ளது. இதன் குத்தகை காலம் முடிவடைந்ததால் கடந்த ஓராண்டாக இந்த குவாரி செயல்படவில்லை. அங்கு ஜல்லி உடைக்கும் இயந்திரம் ஒன்று உள்ளது அதனை குன்னத்தூரில் வசித்து வரும் சித்திக்பாஷா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலாஜி நகரில் வசித்துவரும் முனுசாமி என்பவர் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் டிராக்டர் வண்டியை […]
தாய் மற்றும் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஐங்குணம் என்ற கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாவதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சங்கராபுரத்தில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது தனது ஒரு வயது குழந்தையுடன் யுவனேஸ்வரனுடன் மாயாவதி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தையை எல்லா இடத்திலும் […]
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையம்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். மாரிமுத்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. […]
சாராயம் விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான குழு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. அப்போது குப்பு என்னும் மூதாட்டி சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது. இதனையடுத்து மூதாட்டியை போலீசார் உடனடியாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த சாராயத்தையும் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 999 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்றைய நிலவரப்படி 1,199 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 465 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 727 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 7 பேர் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்றைய நிலவரப்படி 1,060 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 455 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 598 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 7 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3, 4 வயது குழந்தைகள் மற்றும் […]
திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 768 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் இதுவரை கொரோனோவால் பாதித்த 4 பேர் உயிரிந்துள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்யாறு பகுதியில் 15 பேருக்கும், திருவண்னாமலையில் 10 பேருக்கும் புதிதாக தொற்று […]
திருவண்ணாமலையில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது ஏற்கனவே 500ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நேற்று வரை 565 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 217 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் 6 பெண்கள் உட்பட ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை […]
திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் தடையை மீறுவதால் அவர்களுக்கு தமிழக காவல்துறை அபராதம் விதித்தும், வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.. திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவண்ணாமலையில் 229 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 81 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இருந்து […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டாலும் தமிழகத்தில் சில தளர்வுகள் அளித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாலையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதையில் […]
ஆரணியில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒய்வு பெற்ற வங்கி ஊழியரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி விட்டில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று சிறுமியின் பெற்றோர் ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் நடந்த […]
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களை தேனீக்கள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலத்தை கொண்ட கோவிலாக உள்ளது. இங்கே தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் குவிந்த வண்ணம் இருப்பர். இந்த கோவிலுக்கு நான்கு கோபுரவாசல் உள்ளது. அதன்படி, பக்தர்கள் பெரும்பாலும் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் மற்றும் திருமஞ்சன கோபுர வாசல் வழியாக அதிகமாக அனுமதிக்கப்படுவர். நேற்றையதினம் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் வழியாக பக்தர்கள் செல்லும் போது […]
திருவண்ணாமலை அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் அதே பகுதியில் உள்ள கூரப்பட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும் படியாக ஆறு நபர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள அவர்கள் 6 பேரும் ஆந்திராவிற்கு சென்று செம்மரம் வெட்டி கடத்த திட்டம் தீட்டி கொண்டிருந்தது தெரியவருகிறது. இதையடுத்து கணேசன், பிரபு, வெள்ளைச்சாமி, வேலுச்சாமி, ஏழுமலை […]
திருவண்ணாமலை அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியை அடுத்த பட்டியல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வீரகங்கா இவர்கள் மகன் மற்றும் மருமகள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட அவர்களது மகளும் இவர்களது பேத்தியும் ஆன மகேஸ்வரியை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயராமன் தங்களது விவசாய நிலத்தில் யாருடைய எதிர்பார்ப்புமின்றி சுயமாக […]
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளன். தமிழ்செல்வன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன் அருகில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஏரியில் தண்ணீரைக் கண்ட சிறுவன் தனது ஆடைகளை கழட்டி விட்டு குளிக்க ஏரியில் இறங்கியுள்ளார். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாத சிறுவன் தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளன். […]
கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயி லாரி ஏற்றி கொல்லப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் விவசாயம் செய்பவர் கன்னியப்பன். கன்னியப்பனின் நிலத்தின் அருகே கல்குவாரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கண்ணியப்பனும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலரும் கல்குவாரிக்கு வரும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு விவசாய நிலத்திற்கு சென்ற கன்னியப்பன், கல்குவாரிக்கு வந்த லாரி ஒன்றை மறித்துள்ளார் இதனால் லாரி ஓட்டுநர் பலமுருகனுக்கும் […]
திருவண்ணாமலை அருகே ஷேர் மார்க்கெட் மூலம் லாபம் பெற்று தருவதாக கூறி ரூ14,50,000 மோசடி செய்த கணவன் மனைவியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. தேனிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இருவரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். எனது கணவர் வீட்டிலேயே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதாக மணிமேகலையிடம் ஜெயந்தி கூறி வந்துள்ளார். இதையடுத்து மணிமேகலை வீட்டிற்கு ஒருநாள் ஜெயந்தியும் […]
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற பௌர்ணமி கிரிவல ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். குறிப்பாக பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அந்த வகையில், இந்த மாத பௌர்ணமிக்காக தமிழகமெங்குமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 14 கிலோமீட்டர் நகர் பகுதியின் மையத்தில் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் மேற்கொண்டனர். விடியவிடிய நடைபெற்ற […]
திருவண்ணாமலையில் கண்ணை கட்டி கொண்டே அனைத்தையும் சரியாக செய்யும் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் முனுசாமி. இவருக்கு ஸ்ருதி, காஞ்சனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வரும் வேளையில் ஸ்ருதி ஆறாம் வகுப்பும், காஞ்சனா மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றார். இந்நிலையில் சுருதிக்கு யாரிடமும் இல்லாத தனித்திறமை ஒன்று இருந்துள்ளது. அது என்னவென்றால் கண்களைக் கட்டிக்கொண்டு அனைத்தையும் […]
தென் அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலை, தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூடப்படாத ஆழ்துளைக் கிணறு ஒன்று மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றப்பட்டது. அப்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்திற்கு மவுன அஞ்சலியும் சுஜித் நினைவாக கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார். இந்தக் கல்வெட்டில், “நான் சுஜித் பேசுகிறேன், நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி […]
அரூர் அருகே அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 3 கோடியே 47 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி நோக்கி புறப்பட்டு சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி அருகே சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.அப்போது அந்த பேருந்தில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. யாரும் உரிமைக்கோராத அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் இருந்த மொத்தம், 3 கோடியே […]