Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? நீதிமன்றம் கேள்வி!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்குரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் – புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு!

விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானங்கள் இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் உள்ள பொருட்களை அரசுடமையாக்க வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்தது. கடந்த 2017ம் […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து – உயர்நீதிமன்றம்உத்தரவு!

பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீதி தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசு மீதி அவதூறு பரப்புவதாக கடந்த 2012ம் ஆண்டு தமிழ், ஆங்கில பத்திரிக்கைகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் 28 வழக்குகள் தொடரப்பட்டது. முரசொலி மீதி 20 வழக்குகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, நக்கீரன், தினமலர், தி இந்து மீதி 2 வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தி இந்து பத்திரிக்கை சார்பில் என். ராம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கியது!

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான சிறப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு பிரதிநிதிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான குழுவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரம் 6 நாட்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு 6 நாள் வேலை நாட்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்னும் இரண்டு நாட்களில் முடியவடைய உள்ளது. இதை தொடர்ந்தும் 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஏற்கெனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்துடன் மே […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை – ஓபிஎஸ் வேண்டுகோள்!

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸை வெற்றி கொள்ள நாம் நடத்தும் போரில் பொதுமக்கள் அரசுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மக்களின் உயிரை காக்க தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது உழைத்து கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசு தலைவணங்குகிறது என அவர் கூறியுள்ளார். மக்களின் வேதனைகளை நீக்க வேண்டும், அதனால் ஏற்படும் சோதனைகளை மாற்ற வேண்டும் […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு […]

Categories

Tech |