வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்தின் கீழ் இதுவரை 2.33 லட்சம் பேர் தங்களது பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்து உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்திம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல்அதிகாரி வாக்காளர் பட்டியலில் 18,000 பேர் பெயர் திருத்தம் செய்து உள்ளதாக குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை […]
Tag: #tnpeople
ஹிந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து […]
தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதிதாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019 இன் படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ள போக்குவரத்து அபராத தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு திருத்தி அமைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தத்தால் பொதுமக்கள் , விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகப்பட்டின மாவட்டத்தில் நேற்று மாலை வேளாங்கண்ணி, தண்ணிலம் பாடி, வடக்கு பொய்கை, நல்லூர், சோழபுரம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த காற்று வீசி கனமழை பெய்தது. உப்பளம், நெல்லித்தோப்பு முத்தியால்பேட்டை, காமராஜ் […]
அத்திவரதர் உற்சவத்தின் 40ஆம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாற்பதாம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அத்திவரதர் பஞ்ச வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாலை ஒன்று அணிவிக்கப்பட்டு, செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு […]
திமுக மீதி நம்பிக்கை கொண்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மனம் நெகிழ பதிவிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக்கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி வாகை சூடியது மக்கள் தங்கள் மீது வைத்திருந்த இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் விதமாக அதிமுக அரசின் குறைகளை கண்டறியவும் திமுகவின் நிறைகளை தெரிந்து கொள்ளவும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று […]
குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகளுக்கும் எந்தவித லாப நோக்கமின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்ட பேரவை கூட்ட தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்பட்டும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும் நிர்வாகத் திறன் இருந்திருந்தால் நஷ்டத்திலிருந்து மீட்டுவிடலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், […]
தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சத்தை சென்னை தற்போது சந்தித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மக்கள் தொகையானது இருந்துவருகிறது ஆகையால் சென்னையில் நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது ஆனால் தற்போது அது குறைந்து வெறும் 525 லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சத்தை […]
மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் . கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனை அடுத்து இத்திட்டத்திற்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இடதுசாரி இயக்கங்களும் ,தமிழ் தேசியவாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி […]
தஞ்சாவூரை சுற்றியுள்ள 13 கிராமத்து மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர் . மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆனது தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டமானது உறுதியாக செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில் அதற்கான உபகரணங்களான குழாய்கள், இயந்திரங்கள் போன்றவை கிராமங்களுக்கு தினந்தோறும் […]
மோடி வெற்றிக்கு கருத்து தெரிவித்த ரஜினிக்கு சீமான் அறிவுரை குறித்து தற்போழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . மக்களுக்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத நடிகர்கள் அரசியலில் குறிப்பதற்கான காரணம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் திரைப்படத்தின் மீதும் அதில் நடிக்கக்கூடிய கதாநாயகர்கள் மீதுமான கவர்ச்சி தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. ஆகையால் கட்சி தொடங்கிய உடன் ஏராளமான மக்கள் நடிகர்களின் பின் சென்று ஏமாந்துவிடுகிறார்கள். இதனால் மக்களுக்காக போராட […]
பவானிசாகர் அணைக்கு வழக்கத்திற்கு அதிகமாக வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பவானிசாகர் அணைக்குஅதிக அளவில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் வரத்தால் அணையானது அழகிய நிலையில் காட்சி தருகிறது சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கும் பவானிசாகர் அணையானது வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது இங்கு கோடை காலங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாகும் கோடை காலத்தை முன்னிட்டு இம்முறை வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்திருக்கின்றன ஆஸ்திரேலியா […]
மணப்பாறையில் பொதுமக்கள் திடீரென பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி காந்தி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் இருந்து முறையாக தண்ணீர் வசதி மக்களுக்கு செய்யவில்லை என அனைத்து மக்களும் குற்றம் சாடினர் . இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் […]
வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக நாங்கள் வாக்களிக்கிறோம் என்று மக்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் மற்ற மாநிலங்களோடு […]