Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு”….. கள்ளக்குறிச்சியில் மாதிரி தேர்வு…. செய்தி குறிப்பில் வெளியிட்ட ஆட்சியர்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பற்றி ஆட்சியர் தகவலை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இத்தேர்வானது வருகின்ற 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. இதனால் இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் விதமாக இலவச மாதிரி தேர்வுகள் நாளை மற்றும் வருகின்ற 17ஆம் தேதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

JUST NOW : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தொடங்கியது ….!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.  குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BIG BREAKING : TNPSC தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் …!!

TNPSC தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கடந்த 7ஆம் தேதி பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அறிமுகப்படுத்தியது. அதில் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை அதனைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அமுலாக்கியுள்ளது.  அதில் , குரூப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 – புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு …!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதியை TNPSC அறிவித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி முறைகேடு மேலும் ஒருவர் கைது …!!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். TNPSC முறைகேடு தொடர்பாக இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் குரூப்-4 தேர்வில் 19 பேரும் , குரூப் 2-ஏ தேர்வில் 20 பேரும் , விஏஓ தேர்வில் 3 பேரும் என 42 பேர் கைதாகியுள்ள நிலையில் 43ஆவதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓம்காந்தனை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்த போது தனக்கு யாரெல்லாம் உதவி இருக்கிறார் என்ற பட்டியலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாற்றங்கள் …!!

டிஎன்பிஎஸ்சி_யில் புதிய மாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வில் வெற்றி  பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் விடைத்தாள் நகல்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் விரல் ரேகை , ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மை சரிபார்க்கப்படும். முறைகேடு முறைகளை கண்டறிந்து தடுக்கும் விதமாக உயர் தொழில்நுட்ப தீர்வு நடைமுறைக்கு வருகிறது. இணையவழி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”ஜெயகுமாருக்கு 7நாள் சிபிசிஐடி காவல்” நீதிமன்றம் அதிரடி …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகுமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜெய்குமாருக்கு சிபிசிஐடி காவல் ? 2.30க்கு தீர்ப்பு ….!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமாரை காவலில் எடுக்க கோரிய சிபிசிஐடி மனு மீது 2.30 மணிக்கு தீர்ப்பு வர இருக்கின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”நான் தவறு செய்யவில்லை”…… கண்ணீர் விட்டு அழுத ஜெயக்குமார்…..!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார் விசாரணையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நாளை ( இன்று ) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”2016 ஆம் ஆண்டிலிருந்தே முறைகேடு” களையெடுக்க போகும் சிபிசிஐடி …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல மதுரை மாநகராட்சியில் படிக்கக் கூடிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து டிஎன்பிஎஸ்சிக்கு எழுதியுள்ள  கடிதம் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 2016 வி.ஏ.ஓ. தேர்வு முறைகேடு – ஆவணங்களை கேட்கும் சிபிசிஐடி

2016 விஏஓ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பிஎஸ்சி குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.இந்த முறைகேடு புகார்கள் சார்ந்த விசாரணைகள் எல்லாமே விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டVAO தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக  பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைக்கு சிபிசிஐடி போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு: ரூ.15 லட்சம் கொடுத்து வேலை..! அதிர்ச்சி தகவல்கள் …!!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ  ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளில்  முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். இதனைத்தொடர்ந்து விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உஉள்ளது. இந்த முறைகேடுகளுக்கு இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அதிகாரியான நாராயணன் என்ற சக்தி என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்த நிலையில் சக்தி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற  […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : முறைகேட்டில் தொடர்பில்லை – ஜெயக்குமார் மனு …!!

குரூப் 4முறை , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என்று இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிதோடு, நாளை காலை எழும்பூர் […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW – குரூப் 2ஏ முறைகேடு : கைதான 2 காவலர்கள் பணியிடை நீக்கம் …!!

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார்  சித்தாண்டி , பூபதி ஆகிய இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குரூப்-2 ஏ தேர்வில் கைதாகி இருக்கக்கூடிய காவலர்கள் சித்தாண்டி பூபதி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இரண்டு பேரும் சென்னை புதுப்பேட்டையில் இருக்க கூடிய ஆயுதப்படை காவலர்கள் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். சித்தாண்டி 2006ஆம் ஆண்டிலிருந்து காவல்துறைப் பணியில் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் …!!

TNPSC முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TNPSC குரூப் 4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிக இருந்து வந்த ஜெயக்குமார் சற்று முன்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்த அவரை தேடி  சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

TNPSC முறைகேடு : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் …!!

TNPSC முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு, அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் தலைமறைவாகினார். இதனையடுத்து அவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் லேப்டாப் , பென்ட்ரைவ் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் சரண் ….!!

குரூப் 2-A  , குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார். குரூப் 4 தேர்வு முறைகேடு குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு இந்த இரண்டு வழக்குகிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஜெயக்குமார் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீஸார்  அறிவித்திருந்தார்கள். நேற்று கேரளா , ஆந்திரா , கர்நாடகா என மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”வெளியாகும் அடுத்தடுத்த முறைகேடு” மதுரை தேர்வர்கள் பரபரப்பு கடிதம் …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்விலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக 33 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2-ஏ முறைகேடு – மேலும் ஒருவர் கைது …!!

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் குரூப் 4 , குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய தருணத்தில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைதாக்கியுள்ளார். நேற்று காலவர் சித்தாண்டி பூபதி கைது செய்யப்பட்ட நிலையில் 3ஆவது நபராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரூப் 4 முறைகேடு : ஜெயக்குமார் எங்கே ? ”3 மாநிலங்களுக்கு விரைந்த சிபிசிஐடி”

குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கு முக்கிய குற்றவாளியாகவும் , தலைமறைவாகவும் இருக்க கூடிய ஜெயக்குமாரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குரூப்-4 தேர்வு , குரூப்-2 ஏ தேர்வு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை நேற்று சிபிசிஐடி போலீசார் சிவகங்கையில் வைத்து கைது செய்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவரிடம் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி முறைகேடு : 3 மாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான  ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை  சிவகங்கை – ராமநாதபுரம் செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு – தேர்ச்சி பெற பணம் கொடுத்த நால்வர் கைது..!

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரத்தில் காவலர் சித்தாண்டி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

‘இது வெறும் ’இன்டர்வெல்’ தான், ’கிளைமேக்ஸ்’க்கு இன்னும் 12 மாசம் இருக்கு’ – உதயநிதி ஸ்டாலின்

அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், பிராட்வேவில் உள்ள தேர்வாணைய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, […]

Categories
மாநில செய்திகள்

ரூ 100,00,00,000 வசூல்…. குரூப் 4, குரூப் 2ஏ இரண்டிலும் கல்லாகட்டிய சித்தாண்டி ..!!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட காவலர் சித்தாண்டி சிபிசிஐடி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகத் தேடப்பட்டுவந்தவர் காவலர் சித்தாண்டி. இவரை ராமேஸ்வரத்தில் வைத்து சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த காவலரான சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசை ஏமாற்றுதல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : ஆயுதப்படை காவலர் சித்தாண்டி கைது..!!

குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சித்தாண்டியை  சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான  ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 9 பேர் கைது!

குரூப் 4 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 42 பேரில், 9 பேரை சிபிசிஐடி அலுவலர்கள் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தற்போது வரை கைதாகி இருக்கின்றனர். முக்கியமான இடைத்தரகர் ஜெயக்குமார் இன்னும் கைதாகவில்லை. இந்த முறைகேட்டின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்ற […]

Categories
மாநில செய்திகள் ராமநாதபுரம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ராமநாதபுரத்தில் சிபிசிஐடி அதிரடி விசாரணை

டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவியாளர் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவியாளரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் உதவியாளர் பணியிடை பயிற்சிக்காக, சென்னை சென்றிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2-ஏ மோசடி நடந்தது எப்படி ? விசாரணையில் அம்பலம் …!!

குரூப் 2ஏ தேர்வில் எப்படி முறைகேடு நடந்தது ? என்று சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு சம்பந்தமாக 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 8 பேரை கைது செய்திருக்கின்றார்கள். அந்த 8 பேருமே அரசு ஊழியர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல இந்த குரூப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப்-2ஏ முறைகேடு – மேலும் 3 பேர் கைது – சிபிசிஐடி அதிரடி …!!

குரூப் 2A தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாகவும் , அவர்களை CBCIDI போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சொல்லப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

சிக்குன செத்த… ”ஓடி ஒளியும் அரசு ஊழியர்கள்”…. விரட்டும் சிபிசிஐடி …!!

குரூப் 2A தேர்வு முறைகேட்டில் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து TNPSC உரிய ஆவணங்களை CBCID போலீசிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த CBCIDI போலீசார் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக காரைக்குடி பதிவாளர் அலுவலக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2ஏ முறைகேடு – 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவு …!!

குரூப் 2A முறைகேடு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி மீது 4 பிரிவுகளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2 ஏ முறைகேடு – மேலும் 2 பேர் கைது … சிபிசிஐடி அதிரடி …!!

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை CBCIDI போலீஸ் கைது செய்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப்-2ஏ முறைகேடு – அரசு ஊழியர்கள் கைது …!!

குரூப் – 4 தேர்வு முறைகேட்டில் 16 பேரும் , குரூப் -2ஏ தேர்வு முறைகேட்டில் 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வில் 39 புதிய தேர்வர்கள் பட்டியல் வெளியீடு..!!

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டு தரவரிசை பட்டியலில் இடம்பெற்று ரத்து செய்யப்பட்ட 39 தேர்வர்களுக்கு மாற்றாக, புதிய 39 பெயர் பட்டியலில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இளநிலை உதவியாளர், நில அளவையாளர், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை நடத்தியது. இதற்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 2019 நவம்பர் 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு…. மேலும் 4 பேர் கைது..!!  

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதிக்க்கப்பட்டு TNPSC அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்துள்ள  நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. டிஎன்பிஎஸ்சி தட்டச்சராக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப்-2 ஏ  தேர்வு முறைகேடு : சிபிசிஐடி வழக்குப் பதிவு …!!

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்த TNPSC அதிகாரிகள் போலீசிடம்  ஆவணங்களை ஒப்படைத்த நிலையில் CBCID போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு: புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு ….!!

குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களின் புதிய பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 39 பேரின் பெயரை தவிர்த்து விட்டு புதிய தேர்ச்சி பட்டியலை TNPSC […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2 ஏ முறைகேடு – காவல்துறையிடம் டிஎன்பிஎஸ்சி புகார் ..!!

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் டிஎன்பிஎஸ்சி ஆவணங்களை கொடுத்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் TNPSC […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு – சிபிஐ_க்கு நோட்டீஸ் …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கை CBCIDI விசாரணையில் இருந்து சிபிஐ_க்கு மாற்றுவது கோரிய வழக்கில் சிபிஐ_க்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்பீக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் தமிழகத்தில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் ராமேஸ்வரம் , கீழக்கரை  தேர்வு மையத்தில் தேர்வெழுதிய முதல் 100 இடங்களில் முறைகேடு செய்தது தெரியவந்தது. இது […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் புதிய தகவல்..!!

குரூப்-4 தேர்வில் பிரத்யேக பேனாவினை பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முறைகேட்டிற்கு மூளையாக விளங்கியவராகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயகுமார் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி, மதுரவாயல் வட்டாச்சியர் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

சிக்குவாரா ஜெயக்குமார் ? ”துப்புக் கொடுத்தால் துட்டு” பொறி வைத்த சிபிசிஐடி …!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை பிடிக்க CBCID போலீசார் சன்மானம் அறிவித்துள்ளனர்.  குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் இந்த சோதனையில் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

லேப்டாப்… பெண்டிரைவ் … 60 பேணா … அள்ளிச் சென்ற CBCID … ஆதாரம் சிக்கியது ….!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு – ”துப்புக்கொடுத்தால் சன்மானம்” CBCID அதிரடி ….!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முறைகேடு: தொடரும் சிபிசிஐடி விசாரணை …!!

சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள், கொரியர் நிறுவன ஊழியர்கள் என மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டை அடுத்து அதில் தொடர்புடைய 14 பேரை சிபிசிஐடி அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர். இதனையடுத்து குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலையடுத்து அதில் தொடர்புடைய சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சித்தாண்டியை சிபிசிஐடி அலுவலர்கள் தேடிவருகின்றனர். இந்நிலையில், சித்தாண்டியின் சகோதரரும் சிவகங்கையைச் சேர்ந்த சார்பு பதிவாளருமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TNPSC முறைகேடு : எம்ஜிஆர் பாடலைப் பாடி பதிலளித்த அமைச்சர் …!!

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக நாகப்பட்டினத்தில் மண் பரிசோதனை நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி அமைச்சர் ஓஎஸ்.மணியன் இதில் கலந்துகொண்டு, 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மண் பரிசோதனை நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியணிடம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு : தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் – திருமா வேண்டுகோள்..!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்..!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு : விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிப்பு..!!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே குரூப் 4 தேர்வில் 5 விதமான விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிகப்பட்டுள்ளது  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது- TNPSC விளக்கம் …!!

குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து தேர்வு இரத்து செய்யப்படாது என்று TNPSC விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள்.இதில் 100 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்ததாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறைகேட்டுக்கு தொடர்பான அதிகாரிகள் அடுத்தடுத்து கைதாகி தமிழகம் பரபரப்புக்குளாகி இருந்தது.இதனால் மற்ற தேர்வர்களும் கலக்கம் அடைந்தனர். முறைகேட்டால் எங்களுடைய தேர்வு ஏற்றுக்கொள்ளப்படுமா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு – ஜெயக்குமார் வீட்டில் சோதனை …!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேர்ரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் தற்போது சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள். முகப்பேர் கவிமணி சாலையில் உள்ள ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை […]

Categories

Tech |