இன்றைய தினம் : 2019 ஜூன் 02 கிரிகோரியன் ஆண்டு : 153_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 154_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 212 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 455 – உரோமை நகரம் வன்முறையாளர்களால் இரண்டு வாரங்கள் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது. 1098 – முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது. சிலுவைப் போராளிகள் நகரைக் கைப்பற்றினர். 1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர். 1805 – நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சு-எசுப்பானியக் கடற்படையினர் பிரித்தானியரிடம் இருந்து பிரான்சுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் டயமண்ட் குன்று என்ற ஆளில்லாத் தீவைக் கைப்பற்றினர். […]
Categories