இன்றைய தினம் : 2019 மே 30 கிரிகோரியன் ஆண்டு : 150_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 151_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 215 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர்.யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத் தறித்து முற்றுகையிட்டனர். 1381 – இங்கிலாந்தில் விவசாயிகளின் கலகம் ஆரம்பமானது. 1416 – திரிபுக் கொள்கைகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிராகா நாட்டு மெய்யியலாளர் ஜெரோமி காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தினால்எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 1431 – நூறாண்டுப் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட […]
Categories