ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 10 நாட்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பைக்காரா மற்றும் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு […]
Tag: tourist
சுற்றுலா தலமான தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் தேவதானம் சாஸ்தா கோவில் அருவி உள்ளது. இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். இதனை அடுத்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அருவியில் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி […]
விடுமுறை தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக பத்தாயிரம் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முன்பு குவிந்துவிட்டனர். இவர்கள் வரிசையில் காத்திருந்து நுழைவுச் சீட்டை வாங்கி பூங்காவிற்கு சென்றனர். […]
வால்பாறை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர கடைகளை திறப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்நிலையில் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த பொதுமக்களை காவல்துறையினர் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு தடை விதித்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கும் தடை விதித்துள்ளனர். ஆனால் நீரார் அணைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் திரண்டனர். இதனையடுத்து கட்டுப்பாடுகள் குறித்து சரியாக […]
வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சுற்றுலா தளமானது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் அங்கு கடை நடத்தி வருபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மேலும் வியாபாரத்தை நம்பி இருக்கும் கடைக்காரர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கண்காணிப்பு […]
மும்பை நகரம் இன்று இரவு முதல் தூங்காநகரம் ஆகவே விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் கடைகளைத் திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மும்பையின் பிரபல வணிக வளாகங்களில் இரவு நேரத்திலும் உணவுகள் விற்பனைக்கு திறந்திருக்கும் என்றும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் விதத்திலும் விடிய விடிய கடைகளை திறக்க தூங்கா நகரம் திட்டம் அமலுக்கு வருகிறது என்றும், கடற்கரை அருகே உள்ள முக்கிய இடங்களிலும், வணிக வளாகத்திலும் ஆறு உணவு […]
வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மூன்று விழுக்காடு அதிகம் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு 2019 ஆம் ஆண்டு வந்து சென்ற வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதன் மூலம் வந்த வருமானம் குறித்த அறிக்கையை சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் வெளிநாடுகளில் இருந்து 96,69,233 சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2018 […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் பூங்காவில் சுற்றுலா பயணிகளுடம் கேரள மலை அணில் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே உள்ள அரசு பூங்காவில் பூத்து குலுங்கும் அழகான மலர் கொத்துக்களை காணவும், குழந்தைகளுடன் விளையாடி மகிழவும், புகைப்படம் எடுக்கவும் ஏராளமான மக்கள் வந்துசெல்வர். அந்த வகையில் இங்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் கேரளா மலை அணில் ஒன்று பழம் மற்றும் உணவுபொருள்களை கைநீட்டி வாங்கி சாப்பிடும். மேலும் […]
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும் சிற்றாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுற்றுலா பயணிகள் யானை சவாரியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் . கூடலூர் , முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க வனப்பகுதிக்குள், யானை சவாரி மற்றும் வாகன சவாரியை வனத்துறை நடத்தி வருகிறது . இந்நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் , வாகனங்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கையை 6 ஆக வனத்துறை, உயர்த்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
கன்னியாகுமரி, திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் . தொடர்ந்து பெய்த கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குளுகுளுவென கொட்டித்தீர்க்கும் அருவியில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள், குளியலிட்டு மகிழ்ச்சியில் பூரிப்படைந்துள்ளனர் .
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாரெழுந்துள்ளது. கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும்.கோடை விடுமுறை காரணமாக இங்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது . இந்நிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்ல, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையின் வாகனத்தில் செல்ல மட்டுமே தாங்கள் அனுமதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். அதனால் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் , உதயகிரி கோட்டையில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அதிலும் உதயகிரி கோட்டையை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி பயணிகள் பலர் வந்துள்ளனர். இங்கு மான்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட தேவையான அம்சங்கள் உள்ளது .
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள்,வேறுவழியின்றி கடற்கரையில் நின்றபடியே திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். மீண்டும் கடல் சீற்றம் குறைந்த உடன் படகு சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .