Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த நீர்வரத்து…. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலை நேரத்திலும் நீர்வரத்து குறையாததால் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியல் குளித்து சென்றனர். நேற்று மாலை நீர்வரத்து குறைந்ததால் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Categories

Tech |