Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்….. ஆற்றில் உற்சாக பரிசல் பயணம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றல் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் அங்கு போலீசார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதோடு, தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்து, அனைத்து அறிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்து பாதுகாப்பு உடைய அணிந்து குடும்பத்தினருடன் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு அதிகரித்த நீர்வரத்து…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வந்தது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு…. ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் உணவகங்கள் மற்றும் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. மேலும் மணல்திட்டு, மெயின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி…. விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 17-ஆம் தேதி முதல் திருப்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி அன்று அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து, கோதை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு….. கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோவை குற்றாலம் அருவிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்தனர். பின்னர் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Categories

Tech |