திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதனை மீறி பொது இடங்களில் சுற்றி திரிபவர்கள் […]
Tag: tourist place
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சுற்றுலாத்தளங்களில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிக அளவில் காணப்படும். இந்த மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகளவு காணப்படும். இந்த மூன்று மாதமும் கன்னியாகுமரி சுற்றுலா தளங்களின் மெயின் சீசனாக உள்ளது. […]
புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால் அனைத்து சுற்றுலா தளங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் அங்கு உள்ள ரிசார்ட்டுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், ஆட்டம் பாட்டம் என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிகின்றனர். […]
தனியார் நிறுவனம் சார்பில் மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரி ஒன்று இணைந்து ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளனர். மதுரை முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களான அழகர்கோவில் , ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், கீழக்குயில் குடியில் உள்ள புராண சின்னங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 15 நிமிடத்தில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பயணிக்கும் ஒருவருக்கு ரூபாய் 6000 […]