சென்னையில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகருக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு 172 பயணிகள், ஆறு விமான ஊழியர்கள் என 178 பேருடன் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுப்பிடித்தார். இதையடுத்து விமானம் புறப்படவில்லை. விமான பொறியாளா்கள் பழுதடைந்த இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டனா். எனினும் உடனடியாக சரிசெய்யமுடியவில்லை. இதனால் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. […]
Tag: #Tourists
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் நீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சீசன் களை கட்ட துவங்கியுள்ளது. இன்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திற்பரப்பு அருவிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் நீரில் நீராடி செல்கின்றனர். அதே போல் அங்குள்ள சிறுவர்கள் […]
மான்டனிக்ரோ என்ற குட்டி நாட்டில் உள்ள ஆலிவ் மரம் ஒன்று அதிக வயதான மரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அந்த மரத்தின் வயது 2, 244 ஆண்டுகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. 30 அடி நீளம் , அகலம் பச்சைப்பசேலென்ற காணப்படும் இலைகள் ஒழுங்கில்லாமல் பின்னிப் பிணைந்து முதல் பார்வையிலேயே இது ஒரு ஆலிவ் மரம் என்று அறிந்து கொள்ளக் கூடிய இந்த மரத்துக்கு என்று தனி சிறப்பு ஒன்று இருக்கிறது .இது இயேசு கிறிஸ்துவை […]
ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகாரித்துள்ளதால் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது . கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .மேலும் காவிரி அணைக்கு கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு வரும் தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர் . ஒகேனக்கல்லில் மெயின் அருவி உட்பட 5 அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் தண்ணிர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று ஞாயிறு கிழமை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். , மேலும் படகுசவாரி செய்தும்,குழதைகளுடன் […]
ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமில்லாமல் துபாய், இலங்கை, தாய்லாந்து உட்பட வெளி நாடுகளுக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று எஸ் ஜி 58 என்ற விமானம் துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 189 பயணிகள் பயணித்தனர். விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்த போது […]
ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணையில் படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகள் சவாரி செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் வைகை அணைக்கு கோடை விடுமுறை காரணமாக திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்.இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் மகிழும் வண்ணம் அங்கு படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.படகு சவாரியின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையே சுற்றுலா […]
பழவேற்காட்டில் தடையை மீறி சென்ற படகு மற்றொரு படகுடன் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியானார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் எட்டு ஆண்டுகளுக்கு முன் பல விபத்துகள் ஏற்பட்ட காரணத்தால் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 16 பேருடன் முகத்துவாரம் பகுதிக்கு சென்றுவிட்டு கரை திரும்பிய சுற்றுலா பயணிகளின் படகு எதிர்பாராமல் எதிரே வந்த மற்றொரு படகு மீது மோதியதில் அனைவரும் கடலுக்குள்ளெ விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து படகோட்டி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பயணிகளை கண்ட […]
கண்கவரும் 17 வயதான கோலா கரடி!!!
சீன வனவிலங்கு பூங்காவில் உள்ள 17 வயதான கோலா கரடி சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது . தெற்கு சீனாவில் உள்ள குவாங்சோ நகர பூங்காவில் 60 கோலா கரடிகள் உள்ளன.அதிலும் , உகி என்ற 17 வயது கோலா கரடி, பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது .பொதுவாக கோலா கரடிகள் 10 -12 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும் தன்மையுடையது . மேலும் உகி கரடி , 6 தலைமுறைகளை சேர்ந்த கரடிகளுடன் வாழ்ந்து வருகிறது.அதனால் இதனை பூங்கா காப்பாளர்கள் […]
ஒகேனக்கலில் தொழிலாளர் தினம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி, அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் தர்மபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம், மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்இந்நிலையில் இன்று கோடை விடுமுறை மற்றும் தொழிலாளர் தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். வருகை தந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல், படகு சவாரி செய்தும், மெயினருவியில் குளித்தும் விடுமுறையை கழித்து மகிழ்ந்தன.மேலும் […]
ஊட்டியில் கோடை சீசன் ஆரம்பித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருக்கி ஊட்டி என்று அழைக்கப்பட்டது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். தற்போது கோடை கால சீசன் ஆரம்பித்துள்ளதால், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்த […]
கோடை கால வெயிலில் குளிர்ச்சி அளித்து வரும் ஐந்திணை மரபணு பூங்காவிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே தோட்டக்கலைத்துறை சார்பில், அமைக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பூங்கா கடந்த வருடம் திறக்கப்பட்டது. அங்கு சினிமா ‘சூட்டிங்’ எடுக்கவும் அனுமதித்துள்ளனர். இங்கு அமைந்துள்ள நிலங்களின் சிறப்பிற்கு ஏற்றார் போன்று ஐந்திணை பூங்கா அமைக்கப்பட்டது.குறிச்சி பூங்கா சேலம் ஏற்காட்டிலும், முல்லை பூங்கா திண்டுக்கல் சிறுமலையிலும், நெய்தல் பூங்கா நாகப்பட்டினம் திருக்கடையூரிலும், மருதம் […]