நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இரவு நேரத்தில் குட்டியுடன் எட்டு காட்டெருமைகள் முகாமிட்டது. இந்நிலையில் காட்டெருமை ஒன்று குட்டிக்கு பால் கொடுத்தவாறு நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து காட்டெருமைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் அருகே கோபத்துடன் தாக்குவதற்காக சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் ரைபிள் ரேஞ்ச் செல்லும் சாலையில் நின்ற வாகனங்களை ஒதுக்கிய பிறகு காட்டெருமைகள் அந்த வழியாக தேயிலை தோட்டத்திற்குள் […]
Tag: traffic jam
நடுரோட்டில் அரசு பேருந்து கண்டக்டரும், டிராக்டர் ஓட்டுநரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்றபோது அவ்வழியாக சென்ற டிராக்டர் பேருந்து மீது உரசுவது போல வந்தது. இதனை பார்த்த கண்டக்டர், டிராக்டர் ஓட்டுனரிடம் சாலையோரமாக மெதுவாக செல்லுங்கள் என கூறியுள்ளார். […]
சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து தலைமலை செல்லும் சாலையில் தொட்டபுரம், காந்திநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றன. நேற்று காலை நெய்தாளபுரம் அருகே மூங்கில் மரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அவழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
சாலையில் விழுந்த மர கிளையை தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்புறப்படுத்தினர். சென்னை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மயிலாப்பூர், மெரினாவில் இருந்து அண்ணா சாலை செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையின் குறுக்கே இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]
சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை கிருஷ்ணா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திம்பம் மலைப் பாதையில் உள்ள 10-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றது. இது […]
லாரி டயர் வெடித்ததால் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இங்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கரூரிலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி திம்பம் மலைப்பாதையில் 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்தது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. […]
3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்கா, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் தூண்பாறை உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு […]
லாரி வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பகல் நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று […]
லாரி பழுதாகி நின்றதால் மலை பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் லாரி திம்பம் மலைப்பாதையில் 26-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி பழுதாகி நின்றதால் அவ்வழியாக சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மெக்கானிக்கை வரவழைத்து […]
நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் கடந்த 10-ஆம் தேதி முதல் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்லக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் காலை 6 மணி முதல் திம்பம் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரிலிருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் […]
மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். கடந்த 10-ஆம் தேதி முதல் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திம்பம் மலை பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தை […]
மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 22 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டுள்ளது . இந்த லாரி திம்பம் மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் […]
லாரி பழுதாகி நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி இறப்பதாக கூறி கடந்த 10-ஆம் தேதி முதல் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், மாணவ-மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்திற்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 10-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். அந்த உத்தரவின்படி பண்ணாரி சோதனை சாவடியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் அனைத்து வாகனங்களும் […]
பலத்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் பலத்த மழை பெய்து உள்ளது. இந்த மழையினால் வனப் பகுதியில் இருக்கும் காய்ந்த புற்கள், செடிகள் பசுமையான நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் கேத்தியில் இருந்து சேலாஸ் செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. […]