மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. திருச்சியில் மது போதையில் சென்ற இளைஞருக்கு சாலை போக்குவரத்தை சரி செய்யும் பணி தண்டனையாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டியதால் போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில் சீரார் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் இரண்டு தினங்களுக்கு மாநகர […]
Tag: trafficpolice
சாலையில் பூசணிக்காய் உடைத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்டுதோறும் ஆயுத பூஜை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்துவிட்டு திருஷ்டிப் பூசணிக்காயை நடுரோட்டில் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பூசணிக்காயை உடைப்பதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது அதன் மீது ஏறி வழுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஈரோடு மாவட்டத்தில் சாலையோரத்தில் தோண்டப்பட்ட குழியை மண்ணை கொண்டு சமன் செய்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். ஈரோட்டில் 60வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை, மின்சார கேபிள் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஈரோடு மருத்துவமனை முதல் சந்தைக்கு உட்பட்ட பகுதி வரை குழியின் காரணமாக போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. இதனை ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்ளாத பட்சத்தில், போக்குவரத்து […]
தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர். சென்னையில் இன்று முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களிடம் ரு. 5 ஆயிரம் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 1000 அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி […]
டெல்லியில் குடிபோதையில் போக்குவரத்து காவலரிடம் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லியில் ஒரு ஆணும்,பெண்ணும் நன்றாக குடித்துவிட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது அவர்களை பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மறித்து வாகன சாவியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து வண்டியில் அமர்ந்திருந்த நபரும் தகாத வார்த்தைகளால் போக்குவரத்து […]