Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்படும் ரயில்கள்….. சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளின் அறிவிப்பு….!!!

சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்கரை ரயில்வே சாம்பல்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட தியோபஹால்-பர்கார் இடையே இருவழிப் பாதைகளில் பொறியியல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் திருப்பூர், ஈரோடு, போத்தனூர், சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டாட்டா நகரில் இருந்து புறப்படும் டாட்டா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்(18189) நாளை மற்றும் வருகிற 29-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ரத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இன்று முதல்…. தென்காசி வழியாக மீண்டும் சிறப்பு ரயில் இயக்கம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!!

இன்று முதல் தென்காசி வழியாக நெல்லை- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக மேட்டுப்பாளையம், தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில்களில் ஏராளமான பொதுமக்கள் பயணிக்கின்றனர். நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7:20 மணிக்கு நெல்லையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட பெங்களூரு-காரைக்கால் ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்….!!!

பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேலம், ஆத்தூர் வழியாக செல்கிறது. வழக்கமாக மதியம் 2:30 மணிக்கு ரயில் ஆத்தூரில் இருந்து புறப்பட்டு காரைக்காலுக்கு செல்லும். நேற்று தலைவாசல்- சின்னசேலம் இடையே ரயில்வே இருப்பு பாதையில் மின்சார கம்பிகளை சரி செய்யும் எந்திரம் எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்றது. இதனால் சேலத்தில் இருந்து மாற்று இன்ஜினை கொண்டு வந்தனர். அதன் மூலம் இருப்பு பாதையை சீரமைக்கும் இயந்திரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதனால் மதியம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை-செங்கோட்டை ரயில் ரத்து…. ரயில்வே கோட்ட அலுவலகத்தின் அறிவிப்பு…!!

ராஜபாளையம் சங்கரன்கோவில் இடையே ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் செங்கோட்டையில் இருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை- மதுரை(06664) மற்றும் மதுரையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை (06663) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் நாளை முதல் வருகிற 10-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மைசூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பண்டிகை காலத்தில் கட்டுப்படுத்தும் பொருட்கள் மைசூரு- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் வருகிற 7-ஆம் தேதி மைசூரு- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்(06201) மதியம் 12:15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு திருநெல்வேலிக்கு வருகிறது. பின்னர் 4:35 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது. மற்றொரு மார்க்கத்தில் வருகிற 8-ஆம் தேதி சிறப்பு ரயில் மதியம் 12:45 மணிக்கு திருவனந்தபுரத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த…. தென் மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள்….. முழு விவரம் இதோ…!!

மதுரை வழியாக இயக்கப்படும் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் நோக்கி இயக்கப்படும் எக்ஸ்பிரஸில் இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. மேலும் குருவாயூரிலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸிலும் வருகிற 12-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. இதனை அடுத்து மதுரை வழியாக இயக்கப்படும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பெண்…. பின் நடந்த சம்பவம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

பெண் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து புறப்பட்ட ரயில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அதன் பின் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு மெதுவாக செல்லத்தொடங்கியது. அப்போது பெண் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பதற்றத்துடன் கீழே இறங்கினார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

11 மாதங்களுக்கு பிறகு… மீண்டும் தொடங்கப்பட்ட ரயில் சேவை… சிறப்பு ரயில்களாக இயக்க ஏற்பாடு…!!

கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ரயில் சேவையானது சுமார் 11 மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு துவங்கியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறும்போது, காஷ்மீரின் ரயில்சேவை இயக்கமானது எளிமையை மேம்படுத்துவதோடு, சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த மாற்றுதிறனாளி… சரியான நேரத்தில் காப்பாற்றிய போலீசார்… வைரலாகும் காட்சிகள்…!!

ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது கீழே விழுந்த மாற்று திறனாளியை ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பன்வெல் ரயில் நிலையத்தில் இருக்கும் ஏழாவது பிளாட்பாரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ரேனு பட்டேல் மற்றும் போலீசார் ஹரிஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் 3:45 அளவில் அங்கு வந்த ரயில் புறப்பட்டபோது, மாற்றுத்திறனாளி ஒருவர் அதில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன்…. இதோட இரண்டாவது முறை…. ஆய்வு செய்து வரும் அதிகாரிகள்….!!

ஒரே வாரத்தில் இரண்டு சிறப்பு ரெயில்கள் தடம் புரண்டதால் தண்டவாளங்களை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு சரக்கு ரயிலானது புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சரக்கு ரயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியிலுள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, ரயிலின் 25வது மற்றும் 26ஆவது பெட்டிகளின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விட்டது. இந்நிலையில் திடீரென கேட்ட அந்த பயங்கர சத்தத்தால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுக்கடங்காத கூட்டம்… நிரம்பி வழிந்த ரயில்கள்… சொந்த ஊருக்கு படையெடுக்கும் நகரவாசிகள் …!!

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அதிகளவு மக்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்களில் பயணித்து சென்றனர். பொங்கல் பண்டிகையானது வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையானது 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் இருக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து  சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில்களிலும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொங்கல் வருதுல்ல….! இடமே இல்லை… செம கூட்டம்… வேற ரயில் விடணும்… வெளியான புது தகவல் …!!

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசித்து வருவதால் தற்போது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெறும் 3பேர் தான் வராங்க…! ”தலைகீழாக மாறிய பயணம்” காரணம் என்ன ? ரயில்வே நிர்வாகம் புலம்பல் …!!

பாசஞ்சர் ரயிலானது எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றமடைந்ததால், பொதுமக்களுக்கு இதில் பயணிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு காரணமாக ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயிலான,  திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அதோடு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் அடைந்த இந்த ரயிலில் தற்போதுள்ள நடைமுறையின்படி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உழைத்து சாப்பிட்ட நாங்கள்….. “பிச்சைக்காரர்களாகிட்டோம்” வடமாநில தொழிலாளர்கள் வேதனை பேட்டி….!!

சென்னையில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைபாதையில் தஞ்சமடைந்துள்ளனர். சென்னையில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்டது. இந்த கட்டுமான பணிகளில் 75 சதவீதத்திற்கும் மேல் வடமாநில தொழிலாளிகளே ஈடுபடுத்தப்படுவர். ஊரடங்கிற்கு பின் பல கட்டுமான நிறுவனங்கள் வேலை இல்லை என்பதால், தொழிலாளர்களை அப்போதே வெளியேற்றி விட்டது. ஒரு சில கட்டுமான நிறுவனங்கள் மட்டும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்கள் பணிபுரிந்த இடத்திலேயே தங்க அனுமதி அளித்ததோடு, […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சையளிக்க சிரமம்… அதிவேக ரயிலில் கொண்டு செல்லப்படும் நோயாளிகள்… வெளியான வீடியோ!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அதிவேக ரயிலில் ஏற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய வைரசுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி ,ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் பிரான்சும்  இருக்கிறது. பிரான்சில் இதுவரை மட்டும் 25, 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,331 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ EFFECT” 60% டிக்கெட்டுகள் ரத்து….. ரயில்வே அதிகாரிகள் தகவல்….!!

மார்ச் மாதத்தில் 60 சதவிகிதம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா  வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருவதால், அதனுடைய அச்சம் பொதுமக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், பொதுமக்களும் பயணங்களை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரயில் பயணத்தை பயணிகள் விரும்பாமல் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால் அதை ரத்து செய்தும்  வந்துள்ளனர். அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் முன்பதிவு செய்த பயணிகள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயற்சி… திடீரென மோதிய ரயில்…. உயிரிழந்த பரிதாபம்…

கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடந்த பொழுது ரயில் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜி புரத்தை சேர்ந்தவர் மிதுன் இவர் திருநின்றவூரில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்ற மிதுன்  தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் இரயில் முன் பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி… 2 மாணவிகளின் விபரீத ஆசை… ஒருவர் உடல்சிதறி பலியான சோகம்..!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் பலியானார். மற்றொரு மாணவிஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கு வங்க மாநிலம் மெயினாகுரி மாவட்டத்திலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களில் சுமார் நூறு பேர் நேற்று ஓடுலாபரி என்ற நகரில் உள்ள ஒரு நதிக்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு நிறைய மாணவிகள் நதிக்கரையில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 மாணவிகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

பயணியின் உயிரைக் காத்த ரயில்வே காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், வண்டியிலிருந்து ஒரு பயணி தவறி கீழே விழும் நேரத்தில், அங்கிருந்த காவலர் ஒருவர் பயணியை லாவகமாக உள்ளே தள்ளி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது. தொடர்வண்டியிலிருந்து கீழே விழும் பயணியை காவலர் ஒருவர் காப்பாற்றும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு எட்டாவது நடைமேடையிலிருந்து, தாதர் விரைவு தொடர்வண்டி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பயணி ஒருவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி… மகிழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள்..!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்காணப்படுகிறது.  தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் விடுமுறை நாட்டகளில் மட்டுமே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் தற்போது மக்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும்  போது ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு சென்று நீராடிச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரதான அருவியில் கூட்டம் அலை மோதுகிறது.   மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால்  அருவிகளில் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளி ஆஃபர் …. ”மெட்ரோ 50 % கட்டண சலுகை” மக்கள் மகிழ்ச்சி …!!

தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ இரயில் சேவை மக்களுக்கு அதிரடி சேவையை அளித்துள்ளது. வருகின்ற 27_ஆம் தேதி ஞாயிற்றுகிழைமை தீபாவளியை பண்டிகை கொணடப்படுகின்றது. இதற்காக வருகின்ற சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வழகியெல் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் தீபாவளி பண்டிகை நாளை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோருக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம்… திக்..திக்..நிமிடத்தில் சரி செய்த ஊழியர்கள்… குவியும் பாராட்டு…!!

திருச்சி மணப்பாறையில் கனமழையால் ரயில் தண்டவாளத்தில் ஜல்லி அகன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இந்நிலையில் பாலக்காடு ரயில்வே பாலத்தில் ரயில் இருப்புபாதை சுற்றி போடப்பட்டிருந்த ஜல்லி கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தின் கட்டைகள் அந்தரத்தில் தொங்குவது போல காட்சி அளித்தன. இதனை பராமரிப்பு பணியின் போது கண்டுபிடித்த ஒரு ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

8 மணிக்கு தொடங்கிய இரயில் முன்பதிவு…… 5 நிமிடத்தில் காலியானது….!!

பொங்கல் பண்டிகைக்கு இரயில் பயணத்துக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு  தொடங்கி  5 நிமிடங்களில் கலியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை முதல் ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை விடபடுகின்றது. இதில் வார விடுமுறை நாட்களை தவிர ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலை நாட்கள் ஆகும். வெளியூரில் வேலை செய்பவர்கள் திங்கட்கிழமை மட்டும் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் 9 நாட்கள் விடுமுறை கொண்டாடலாம். இதில் பொங்களுக்கு ஜனவரி 10ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“ஹைதராபாத் TO புதுச்சேரி”ஆசிரியர் திட்டியதால் கோபம்… ரயிலேறி ஓட்டம் பிடித்த சிறுவன்..!!

ஹைதராபாத் மதரசாவில் இருந்து புதுவைக்கு ஓடி வந்த சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.  உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது அப்சர் அலி என்பவரை 13 வயது மகன் அப்துல் மாலிக். இவர் ஹைதராபாத் பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் குரான் படித்து வருகிறார். மதரசா ஆசிரியர் அப்துல் மாலிக்கை கடிந்து கொண்டதால் கோபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலேறி சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்  […]

Categories
சேலம் மாநில செய்திகள்

அட பாவிகளா…!! இப்படியா செய்விங்க…. தண்டவாள கொக்கி அகற்றல்…. தீடீர் திருப்பம்…!!

 சேலம் மாவட்டத்தின் இரயில்வே தண்டவாளத்தின் கொக்கிகளை அகற்றியது ஊழியர்கள் என்று இரயில்வே ஐ.ஜி வனிதா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக இருக்குமோ என்று விசாரணை நடைபெற்று நடைபெற்றது. மேலும் 40 கொக்கிகளை இல்லாத போது இரயில் வந்தால் கண்டிப்பாக இரயில் கவிழும் என்று […]

Categories
சேலம் மாநில செய்திகள்

BREAKING : சேலம் ரயிலை கவிழ்க்க சதி..?

சேலத்தில் இரயில் தண்டவாளத்தில் உள்ள கொக்கிகள் அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்ட அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . மர்மமான முறையில் அகற்றப்பட்டது குறித்த விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை TO அரக்கோணம்” புதிய மின்சார ரயில் சேவை… மகிழ்ச்சியில் பயணிகள்..!!

சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு குறைந்த செலவில் நவீன வசதிகளுடன் புதிய மின்சார ரயில் இயக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரக்கோணம் வரை நவீன வசதிகளை கொண்ட மின்சார ரயில் இயக்கப்பட்டது. 8 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயில் நவீன எலக்ட்ரானிக் முறையில் முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான இருக்கை வசதிகள் சிசிடிவி கேமராக்கள் ஜிபிஎஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன பயோ-டாய்லெட் தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் நவீன வசதியுடன் செயல்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு” பயணிகள் அவதி..!!

சென்னை கோடம்பாக்கம்  மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.   சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தாம்பரம் கடற்கரை  மார்க்கத்தில்  உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில்  மரக்கிளைகள் தீப்பிடித்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தால் மின்சார அங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.  இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் 25 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் செல்லும் மின் கேபிள்கள் என்பதால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண்… துணிச்சலுடன் காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு…!!

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவல் துறை அதிகாரி காப்பாற்றிய சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு பெண் ஒருவர்   ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் ரயில்  செல்வதை கண்டு அவசர அவசரமாக ஓடிச்சென்று எற முயற்சித்துள்ளார். அப்பொழுது நிலைதடுமாறியதால்  கீழே விழுந்தார். இதில் ரயில்  சக்கரத்தின் இடையில்  சிக்க இருந்த அவரை,ரயில் நிலையத்தில்  வழக்கமாக  ரோந்து பணியில் ஈடுபடும்  ரயில்வே துறை காவலர் ஒருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் செல்லும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு “காவல்துறை அதிரடி !!..

கொள்ளையர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க ஈரோடு முதல் சேலம் வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் ஈரோடு வழியாக சேலம் செல்லக்கூடிய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது காரணத்தினால் சில பகுதிகளில் ரயில்கள் 20 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்கின்றன இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் சில நாட்களாக ரயில் பயணிகளிடம் தங்களது கைவரிசையை காட்டி வருவதாக புகார்கள் எழுந்து வந்தன இதனைத் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரயில் மோதி மூவர் பலி ! தண்டவாளத்தைக் கடக்கும் போது பரிதாபம் !!

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தண்டவாளத்தைக் கடக்கும் போது   3 பேர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் மாவட்டம் கரும்பூரைச் சேர்ந்தவர்,  காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர்.இவர், தனது சகோதரி பானுமதி மற்றும் 11 வயதான  பேரன் நித்திஷ் ஆகியோருடன் சென்னை செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்த நிலையில் முதல்  நடைமேடையில் இருந்து , இரண்டாவது நடைமேடைக்குச் செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக , அதிவேகத்தில் வந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் நகைபறிப்பு !!!கொள்ளையர்கள் அட்டகாசம் !!

சேலத்தில் ,ஓடும் ரயிலில் நடந்த   நகைபறிப்பு சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது . சேலம் ,சங்ககிரி அருகே மாவெலிபாளையம் என்ற ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகில் தரைவழி பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது . அதனால்   ரயில்கள் குறைந்த  வேகத்தில் இயக்கப்படுகின்ற நிலையில்  கொள்ளையர்கள்  சென்ற  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 4 ரயில்களில் ஏறி 24 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .   ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் ,விசாரணை நடத்திய நிலையில் ,20 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓடும் ரயிலில் 5 பவுன் நகை கொள்ளை “ரயில் பயணிகளே உஷார் !!…

ஓடும் ரயிலில் 5 1/2 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர்  காமராஜ் என்பவர் இந்நிலையில் இவர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆர.எஸ்.புரத்தில் பழக்கடைஒன்றில்கேஷியராக பணிபுரிந்து  வருகிறார்.இந்நிலையில் இவரும் இவரது மனைவியும் சேலத்தில் உள்ள உறவினர் திருமணத்திற்கு செல்ல புறப்பட்டனர். கோவை ரயில் நிலையத்திற்கு சென்று ஆலபுழா to மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் ஏறினர்.அதன்பின் தனது பையில் நகைகள் மோதிரம், தங்க நாணயம் என 5½ பவுன் மற்றும் ரூபாய்.3 […]

Categories

Tech |