Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென விழுந்த ராட்சத மரம்…. சேதமான வாகனங்கள்…. ஊழியர்களின் தீவிர பணி…!!

சாலையில் விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் ராமர் கோவில் வீதியில் வாகை மரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் 30 ஆண்டுகள் பழமையான ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பேரிடர் மீட்பு குழுவினரின் செயல்…!!

சாலையில் விழுந்த மரத்தை பேரிடர் மீட்பு குழுவினர் அகற்றிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை அருகில் இருக்கும் டைகர் சோலை என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விட்டது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு சுமார் 1 மணி நேரம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாய்ந்து விழுந்த ஆலமரம்…. முற்றிலும் சேதமடைந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

ஆலமரம் சாய்ந்து விழுந்ததால் வீடு முற்றிலும் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கீழமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாரியம்மாள் வீட்டின் அருகில் இருக்கும் ஆலமரம் சாய்ந்து விழுந்தது. இதனால் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டது. ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பாண்டியன் மற்றும் மாரியம்மாள் ஆகியோர் உயிர் தப்பி விட்டனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முருங்கை கிளை உடைந்ததால் கொலை – போலீசில் சரண்

வீட்டில் உள்ள முருங்கையின் கிளை உடைந்ததால் கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் கலைவாணி தம்பதியினர். இவர்களது வீட்டின் அருகில் சிவகுமாரின் சித்தப்பா ராமன் வசித்து வந்துள்ளார். ராமனுக்கும் சிவக்குமாருக்கும் ஏற்கனவே நிலப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் ராமன் வீட்டிலுள்ள முருங்கை மரத்தின் கிளை உடைந்துள்ளது. இதனால் ராமன் கலைவாணி இடம் சண்டை போட்டுள்ளார். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து கோபம்கொண்ட ராமன் கத்தியால் கலைவாணியின் வயிற்றில் பலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உலக சாதனைக்காக .. புதிய முயற்சி கண்ட மாணவர்கள்..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில்  ரோபோக்கள் மூலம் மர கன்றுகளை நடுவதில்  உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் இயங்கி வரும் தனியார் ரோபோடிக் நிறுவனத்தில் பயின்று வரும் 326 மாணவர்கள், 326 ரோபோக்களை கொண்டு கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். தாங்கள் வடிவமைத்த ரோபோடிக் கருவியின் மூலமாக மா,நெல்லி, புளி, வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில நட்டனர். உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

“1 மரம் வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும்” அப்துல்கலாம் பிறந்தநாளில் விவேக் சிறப்பு பேட்டி…!!

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டுமென்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பள்ளிகளில் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இதேபோல தனியார் பள்ளி மாணவர்களையும் மரக்கன்றுகளை வளர்க்க ஊக்கபடுத்த வேண்டும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் “பசுமை புரட்சி” சொட்டு நீர் பாசனம் மூலம் வளரும் மூலிகை மரங்கள்..!!

திருவண்ணாமலை அரசு பள்ளியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மரம் வளர்ப்பதில்   மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் ராமசாணி  குப்பம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து  அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வருகின்றன. அப்பள்ளி வளாகத்தை சுற்றி மாணவர்கள் சார்பில் மரங்கள் நடப்பட்டு பசுமையாக காட்சியளித்து வருகிறது. ஏராளமான மரங்களையும் மூலிகைச் செடிகளையும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் அதிகரித்துள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியில்லா மாவட்டமாகும் தேனீ…50,000 மரக்கன்றுகள்…மாவட்ட ஆட்சியரின் அசத்தல் திட்டம்…!!

தேனி மாவட்டம் போடி அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தேனியை வறட்சி இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரங்களை நட வேண்டுமெனவும் ,திட்டத்தை மாவட்டம் முழுமைக்கும் பேரூராட்சி வாரியாக செயல்படுத்த வேண்டுமெனவும் திட்டமிட்ட அவர் , பேரூராட்சி செயல் அலுவலக அதிகாரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு பேரூராட்சியிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“50 கிராமங்களில் மின்தடை “பொதுமக்கள் அவதி ..!!

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை சுற்றியுள்ள 50 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆங்காங்கே சூறைக் காற்றில் சிக்கிய மரங்கள் சரிந்து விழுந்து உள்ளன. வீடுகளின் மீதும் மின்கம்பங்களில் மிகவும் மரங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார தடை என்பது சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ளது . மின்சார தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து விரைவில் […]

Categories

Tech |