ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் தூனிசில் (Tunis) செயல்பட்டு வருகிறது அமெரிக்கத் தூதரகம். இந்த நிலையில் இந்த தூதரகத்திற்கு நேற்று இரண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை அங்கு திடீரென வெடிக்கச் செய்தனர். தற்கொலை தாக்குதலில் அவர்கள் இருவரும் பலியாகி விட்டனர். அதுமட்டுமில்லாமல் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார். […]
Tag: Tunisia
துனிசியா நாட்டில் படகு ஓன்று கடல் அலையில் சிக்கி கவிழ்ந்ததில் 13 பெண்கள் உயிரிழந்தனர். துனிசியா நாட்டிலிருந்து 50 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு படகு மத்திய தரைக்கடல் வழியாக புறப்பட்டு சென்றது. இந்த படகு அங்குள்ள லாம்பெதூசா (Lampedusa) தீவின் அருகே வந்த போது மோசமான வானிலையின் காரணமாக திடீரென ஏற்பட்ட கடல் அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து நள்ளிரவில் கிடைத்த தகவலின் படி இரண்டு மீட்பு கப்பல்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற இத்தாலி கடற்படையினர், அங்கு நீரில் உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்த […]
துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளாகி 80க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா நாட்டில் இருந்து ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் ஐரோப்பியாவை நோக்கி படகில் பயணம் செய்தனர். சுமார் 80_க்கும் அதிகமானோரை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் சென்ற படகு எடை தாங்காமல் நடுவழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு நீரில் மூழ்குவதை பார்த்த மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் தொடர்ந்து முயற்சித்தும் 4 பயணிகளை மட்டுமே கரைக்கு மீட்டு […]