Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் தீ…. 9 பேர் உடல் கருகி பலி…. துருக்கியில் சோகம் …!!

துருக்கியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர். துருக்கி நாட்டில் ஹாஸ்யன்டி  மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர்கள் அனைவருக்கும் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் குழாயில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால்  கொரோனா நோயாளிகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் ஆட்டம் ஆரம்பம்… துருக்கியில் முதல் பலி!

கொரோனாவின் தாக்குதலுக்கு துருக்கியில் முதல் நபர் ஒருவர் மரணமடைந்தார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 160-க்கும் மேற்பட்ட  நாடுகளில் குடியிருக்கிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 7, 987 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3, 237 பேர் இறந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கிணறில் சிக்கித்தவிக்கும் நாய் குட்டி… உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சிறுவன்… வைரலாகும் வீடியோ!

துருக்கியில் எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்து சிக்கித்தவித்த  நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் காப்பாற்றும் காட்சி உலகம் முழுவதும் விலங்கு நல ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தியர்பாகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் நடந்துள்ளது. எனிஸ் டேய்லன் (Enes taylan) என்ற அந்த 10 வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய்க்குட்டியின் சத்தத்தைக் கேட்டு  நின்றுள்ளான். பின்னர் அந்த சிறுவன் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றி அங்கும் இங்கும் பார்த்தான். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

நூற்றுக்கணக்கான அகதிகள்… துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சி..!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான அகதிகள்  துருக்கி வழியாக நடந்து  கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சிக்கின்றனர்.  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், சட்டவிரோதமாக  தங்கள் நாட்டிற்குள் வருபவர்களை தடுக்க எல்லைப்பகுதி முழுவதும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இருப்பினும், கிரீஸ் செல்வதற்கு தங்கள் நாட்டின் வழியைப் பயன்படுத்துவதற்கு அதன் அண்டை நாடான துருக்கி எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காததால், நூற்றுக்கணக்கான அகதிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். துருக்கி எல்லையில் தங்குவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

‘எங்க கிட்ட வெச்சுக்காதீங்க’ – எச்சரிக்கும் இந்தியா..!

துருக்கி – பாகிஸ்தான் கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம் இடம்பெற்றதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு இரு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டது. அதில், “காஷ்மீர் விவகாரத்தை அமைதி பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

‘டெலிவரி ஊழியர்’ செய்த கேவலம்… பீட்ஸாவில் தூ.. தூ… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

துருக்கியில் வாடிக்கையாளருக்கு  பீட்சாவில் எச்சில் துப்பி கொடுத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. துருக்கி நாட்டில் எஸ்கிஷெகிர் (Eskişehir) என்ற இடத்தில் இந்த கேவலமான சம்பவம் நடந்துள்ளது.. ஆம் வாடிக்கையாளர் ஒருவர் பீட்ஸா ஆர்டர் செய்திருந்தார். அதன்படி அதனை விநியோகிக்கும் நபர் வாடிக்கையாளர் வீட்டின் வாசல் பக்கத்தில் நின்று கொடுக்கப்பட வேண்டிய பீட்சாவில்,  உமிழ்நீரை (எச்சில்) துப்பிய பின் வழங்கியுள்ளார். ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த அருவெறுப்பான நிகழ்வு அருகில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

மிரட்டி வரும் கொரோனா… “லட்சக்கணக்கான முகமூடிகள்”… துருக்கியிலிருந்து சீனாவுக்கு அனுப்பி வைப்பு..!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு துருக்கியில் உள்ள சில நிறுவனங்கள் லட்சக்கணக்கான முகமூடிகளை தயாரித்து அனுப்பி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் வெளுத்து வாங்கும் கனமழை… மக்களின் இயல்புநிலை பாதிப்பு..!!

துருக்கியில் கடந்த சனிக்கிழமை முதல் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்புநிலை பாதிக்கபட்டுள்ளது.  துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் காலையில் மெதுவாக பெய்து கொண்டிருந்த மழை பிற்பகலுக்கு மேல்  திடீரென வலுப்பெற்று  வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், சுரங்கப்பாதைகளிலும் தேங்கியதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் பசார் அருகே இருக்கும் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் புகுந்ததால், அங்குள்ள  கடைகளில் இருந்த  பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. முழங்கால் அளவு வெள்ளநீரில் பொருட்கள் […]

Categories

Tech |