வீட்டின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் ஸ்டேப்ளி தெருவில் சங்கரலிங்கம் என்ற ஓய்வு பெற்ற ஆடிட்டர் வசித்துவருகிறார். இவர் தனது சகோதரனின் வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்து இதுகுறித்து உடனடியாக சங்கரலிங்கத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து […]
Tag: Tuticorin
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 2 வாலிபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோனார் கோட்டை புதூரில் வசித்து வரும் சுடலை என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் செட்டிகுறிச்சியில் இருந்து வெள்ளாளங்கொட்டை செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோவிலில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. […]
ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ பனைக்குளம் பகுதியில் யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அதன்பின் யோவான் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில் அவர் கீழ பனைகுளத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து வெளியே சென்று நீண்ட […]
சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் ஏழாம் நாளை முன்னிட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், விஸ்வரூப தீபாராதனையும் நடைபெற்றது. இதனை அடுத்து உருகு சட்ட சேவை நடந்த பின்னர், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு சென்று தரிசனம் வழங்கினார். அப்போது சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு […]
பட்டப்பகலில் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை வாலிபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அவர்கள் திடீரென அந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]
ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியில் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 20 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கலாபுரம் 12வது தெருவில் தர்மர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் முருகன் என்ற மகன் உள்ளார். இவர் மயிலோடை பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். இவருடைய அண்ணனான சுடலைமணி என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அண்ணனை போல் கார் ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட செல்வமுருகன் மோட்டார் சைக்கிளில் குறும்பூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]
கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்குளம் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்திரபோஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தகாடையூர் பகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டனர். இவர் அப்பகுதியில் ஒரு மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் […]
மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செம்பொன் குடியிருப்பு பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த இளம் பெண்ணை காணவில்லை என தேடிய உறவினர்கள் அவரை […]
திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் இளம்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலப்பை பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குட்டிப்பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுபத்ரா தேவி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுபத்ராவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வரும் பங்குனி மாதத்தில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து துறையூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு வந்திருந்த சுபத்ரா […]
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவகட்டிகொட்டாய் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுவிற்கு அடிமையானதால் எப்போதும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மது குடித்து விட்டு வரும்போது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அருள் தனது வீட்டில் […]
2 3/4 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்கள் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி அழகேசபுரம் மெயின் ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லின் முன்பு நின்று கொண்டிருந்த ஒரு லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி […]
டயர் பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகனான அப்துல் காதர் சென்னையில் வசித்து வந்துள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு காயல்பட்டினத்திற்கு வந்து தங்கியிருந்து மீண்டும் சென்னைக்கு தனது நண்பர்களான சிவா, சதீஷ், கார்த்திக், ஜாகிர், ஹாஜி ஆகியோருடன் புறப்பட்டுள்ளார். இவர்களது காரானது செய்துங்கநல்லூர் அருகிலுள்ள தூதுகுழி சாலை வளைவில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் டயர் […]
4 பெண்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளம்புவனம் கிராமத்தில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த கோவில் விழாவில் இளம்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஆவுடையம்மாள் என்பவர் விழாவில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை மர்ம […]
கோவிலுக்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்ச மொழி பஞ்சாயத்து தலைவர் பிரவீன் குமார் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு சாத்தான்குளத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் பேரில் […]
மாவு ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 மூட்டை அரிசி மாவு மற்றும் 16 மூட்டை ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூரணமால் காலனியில் இயங்கி வரும் ஒரு மாவு அரவை ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தாசில்தார் தலைமையில் தாலுகா வினியோக அதிகாரி சுப்புலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி திரு ரெங்கராஜ் மற்றும் […]
தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்த மாரியம்மன் வெண்கல சிலையை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் வெண்கல சிலையானது கிடைத்துள்ளது. இந்த சிலையின் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும் இருகின்றது. இந்த சிலையின் இடது கையானது உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 2 அடி உயரம் கொண்டதாகவும், பிற்கால வார்ப்பு மூலம் செய்யப்பட்ட சிலை […]
300 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை 20 கேன்களில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தடைசெய்யப்பட்ட மஞ்சள், கடல் அட்டைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவற்றை படகுகள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வந்துள்ளது. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மாவட்ட கடலோர காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு […]
குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ ஈரால் நடுத்தெருவில் கணேசமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனக துர்காதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த துர்கா தேவி திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]
லோடு ஆட்டோ ஏற்றி பஞ்சாயத்து துணை தலைவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் நாராயணன் என்ற பால் வியாபாரி வசித்து வருகிறார். இவர் செம்மரிகுலம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இவருக்கு அதே ஊரில் வசிக்கும் லிங்கதுரை என்ற உறவினருடன் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்ரமணியபுரத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நாராயணன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பின்னால் லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த லிங்க […]
வேலைக்கு சென்ற துப்புரவு தொழிலாளி திடீரென நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கூறியதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் தொகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பணியில் இருந்தவர் நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக அதிகாலை 4 மணி அளவில் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலானது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி […]
பணம் கேட்டு மிரட்டியதோடு ஒருவரை அரிவாளால் தாக்கிய குற்றவாளியின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் மரவன்மடம் தம்பிக்கு மீண்டான் பகுதியில் வசித்து வரும் ஜெயமுருகன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சோரீஸ்புரம் பகுதியில் வசித்துவரும் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, அவரை அரிவாளால் தாக்கி உள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயமுருகனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் குற்றவாளியான ஜெயமுருகன் […]
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய மாதா சர்ச் தெருவில் கிளின்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாமுவேல் புரத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் குற்றவாளிகளான 3 பேரையும் கைது செய்து விட்டனர். அதன்பின் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இந்த […]
காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழவல்லான் அருகே குடித்துவிட்டு சிலர் தகராறு செய்துள்ளனர். அப்போது ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த முருகவேல் என்பவர் பழிவாங்கும் நோக்கத்தோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவின் மீது மினி லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தப்பி ஓடிய […]
சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் தாளமுத்துநகர் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த நபர் பழையகாயல் புல்லாவழி பகுதியில் வசித்து வரும் ஜெயராஜ் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக […]
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மது மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக 63 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் படி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 40 பேரை கைது செய்துள்ளனர். அதோடு அவர்களிடமிருந்த 302 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். […]
பத்து நாட்களுக்கும் மேலாக தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனசேகரன் நகர், ராம் நகர், முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர் மற்றும் குறிஞ்சி நகர் போன்ற இடங்களில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து விட்டது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் மற்ற இடங்களுக்கு சென்று தங்கி விட்டனர். ஆனால் மாநகர பகுதிகளில் வெள்ளம் […]
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இவரது கணவர் குலசேகரன்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இதனால் கணவருக்கு உதவியாக காலையில் கடைக்கு சென்றுவிட்டு, வேலைகளை முடித்த பின்பு சொர்ணம் வீட்டிற்கு திரும்புவார். இந்நிலையில் வழக்கம்போல கடையின் வேலைகளை […]
கண்மாயில் குளிக்கச் சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருமலை சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் திருமூர்த்தி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் திருமணமான சில மாதங்களிலேயே திருமூர்த்தி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது அண்ணன் அய்யனார் என்பவரின் மனைவியான செல்லத்தாயுடன் சுப்புலட்சுமி வசித்து வந்துள்ளார். இவர் குருமலையிலுள்ள ராஜாங்கல் கண்மாயில் குளிக்க செல்வது […]
இலங்கைக்கு கடத்த முயன்ற 4.3 டன் மஞ்சள் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இலங்கை அரசாங்கம் அவர்கள் நாட்டில் வசிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்படும் மஞ்சளை கடலோர போலீசார் பறிமுதல் செய்வது அடிக்கடி நிகழ்கிறது. இதனால் இந்த […]
பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் புதுமாப்பிள்ளை உடல் கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேலாயுதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது. அங்கு தரையில் பதிக்கப்பட்டிருந்த டேங்கருக்குள் இருந்த பெட்ரோலை மாற்றி வாகனத்தில் உறிஞ்சும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியில் தென்காசி மாவட்டம் பாப்பான் குளத்தில் வசித்துவரும் ரகு, தியாகராஜன், பாலசுப்பிரமணியன் மற்றும் இலுப்பையூரணி பகுதியில் வசித்து வரும் ஜஸ்டின் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டிருந்த டேங்கருக்குள் தண்ணீரை […]
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் தனது கணவர் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் ஒரு ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விக்னேஷ் மற்றும் விஷ்வா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கவிதாவிற்கு இரைப்பை வலி ஏற்பட்டதால் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வித்யாசமான போட்டியை நடத்தி அதில் பங்கேற்ற வாலிபர்களை அழ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயாமொழி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வித்தியாசமான போட்டிகள் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற ஒரு போட்டியின் விதிமுறையானது, ஒருவர் முதலில் 10 பச்சை மிளகாய்களை சாப்பிட்டு, அதன் பின்னர் தோல் நீக்கப்பட்ட கற்றாழையை சாப்பிட வேண்டும் என்பதாகும். அதில் பங்கு பெறும் நபர்கள் கடைசியாக எலுமிச்சம் பழத்தில் பாதியை சாப்பிட்டுவிட்டு, சிறிது சர்க்கரையையும் உட்கொள்ள வேண்டும் […]
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முருகனின் பக்தி பாடல்களை பாடியும் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் பொங்கல் நாளன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:3௦ மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். இதனைத்தொடர்ந்து 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மற்ற கால பூஜைகளும் திருச்செந்தூர் […]
லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெற்றிவேல் என்பவர் நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு டாரஸ் லாரியில் புறப்பட்டார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எதிரே லாரி சென்று கொண்டிருக்கும் பொழுது, அதன் டயர் வெடித்து லாரி நிலைதடுமாறி ஓடியது. அச்சமயத்தில் டிரைவர் வெற்றிவேல் லாரியை சாலையோரத்தில் நிறுத்த முயற்சிக்கும் பொழுது, திருமங்கலத்திற்கு பிராய்லர் கோழிகளை […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 2 அடி உயரமுள்ள 50 3/4 பவுன் மதிப்பிலான தங்கம் காணிக்கையாக வழங்கப்பட்டது ஆண்டு தோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று ஏராளமான பக்தர்கள் முருகரை தரிசித்து வருவது வழக்கம். இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு ஜி ஸ்கொயர் பில்டர்ஸ் நிறுவனம் சார்பில் சுப்ரமணிய சுவாமிக்கு 50 முக்கால் பவுன் மதிப்பிலான இரண்டடி உயரமுள்ள தங்கவேல் காணிக்கையாக செலுத்தப்பட்டது. அப்போது ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி […]
திருசெந்தூருக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலஈரால் வடக்குத் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் தலைமையில் திருச்செந்தூருக்கு சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரை சென்றனர். அப்போது மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எப்போதும்வென்றான் பகுதியில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மேலஈரால் பகுதியில் […]
இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்ற தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து பின் ஓய்வு பெற்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாராயணசாமிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனால் கடினமான வேலைகளை செய்யக் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த ஊரில் உள்ள தோட்டத்தில் நாராயணசாமி தூக்கிட்டு […]
காவலாளி கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் திருமலைநம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரவு நேர பணி முடிந்து அதிகாலையில் அக்கோவிலின் கிணற்றின் பக்கத்தில் நின்றுகொண்டு பல் துலக்கி கொண்டு இருந்த போது, திருமலைநம்பி கிணற்றுக்குள் எதிர்பாராவிதமாக தவறி விழுந்தார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்று […]
பயன்பாட்டில் இல்லாத அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான அணுமின் நிலையம் ஒன்று செயல்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் மட்டும் அவ்வபோது நடைபெறுகிறது. இந்நிலையில் அணுமின் நிலையத்தில் உள்ள மின் ஒயர் மற்றும் எண்ணெய் போன்றவற்றில் திடீரென தீ பற்றியதால் பல அடி உயரத்துக்கு தீயானது கொழுந்துவிட்டு எரிந்து, அப்பகுதியே கரும் புகையால் சூழ்ந்தது. […]
புத்தாண்டு நாளான இன்று திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்து செல்வார்கள். தமிழ் மாதம் மார்கழி முதல் நாளிலிருந்து தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டான […]
விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி காங்கிரஸ் கட்சியினர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகாவிற்கு உட்பட்டு சங்கரபேரி, இளவேளங்கால் போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் வெங்காயம், மக்காச்சோளம், உளுந்து, பருத்தி, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். இந்நிலையில் பருவமழை தாமதமாக பெய்தது மட்டுமல்லாமல் பயிர்களை படைபுழு நோய் மற்றும் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இதனிடையே பயிர் காப்பீடு செய்து […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயிறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகம்பட்டி கிராமத்தில் உளுந்து மற்றும் பாசிப் பயிறு பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இப்பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட இக்கிராமத்தில் மட்டும் 847 ஏக்கரில் இப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் ஏராளமான பயிர்கள் வீணாயின. இந்நிலையில் மீண்டும் பயிர்களை விதைத்தனர். தற்போது இப்பயிர்களை […]
கடந்த நான்கு மாதங்களாக தமிழகமே உச்சரிக்கும் ஒரு பெயர் கொரோனா. இதன் கூடாரமாக விளங்கிய சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனா பாதிப்பு மக்களை துயரத்துக்கு தள்ளி இருந்தாலும், கணிசமான எண்ணிக்கையில் பலரும் குணமடைந்து வீடு திரும்பி வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத உச்சமாக தூத்துக்குடியில் […]
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் டிஜிபி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கடந்த 14ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அவரது உடல் தூத்துக்குடி மையவாடியில் கொண்டு வரப்பட்டு அங்கு குழி தோண்டப்பட்டு பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 487ஆக உயர்ந்துள்ளது. இதில் […]
தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சையில் நேற்று வரை 150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் ஏற்கனவே குணமடைந்த வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று 9 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 105ஆக உள்ளது. மேலும் 45 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 […]
பூங்கா காவலாளி போலீசார் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக பலியானார். தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி என்பவரது மகன் புங்கலிங்கம். 34 வயதுடைய இவர் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 9) தூத்துக்குடி – பாளை சாலையிலுள்ள எம்ஜிஆர் பூங்கா அருகே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது புங்கலிங்கத்திற்கும், அந்த பூங்காவின் காவலாளியாகப் பணியாற்றி வரும் மறவன் மடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது […]
தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் இதுவரை 177 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு […]