உக்ரைனின் 40-க்கும் மேற்பட்ட நகரங்களை ரஷ்யா குண்டு வீசி தகர்த்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கிடையில் இந்த போரில் உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் ரஷ்யா கைப்பற்றியது. இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த நான்கு பகுதிகளையும் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் சர்வதேச சட்டத்தை இந்த செயல் மீறுவதாக […]
Tag: ukrain
உக்ரைன் மீதான போர் எட்டு மாதங்களைக் கடந்துள்ளது. மேலும் ரஷ்யப்படைகள் பெரும்பாலான பகுதிகளில் பின் வாங்க தொடங்கியிருக்கும் இந்த வேலையில் கிருமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் “THE KERCH” பாலத்தை உக்ரைன் தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் ரஷ்ய படையினருக்கு தேவையான அனைத்து ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரஷ்ய பயங்கரவாத எதிர்ப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உக்ரைன் தாக்குதல் நடத்தி பாலத்தை […]
ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 220 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களாக நீடித்து வருகின்றது. இதில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. அப்படி ரஷ்யப்படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை தன் வசம் இணைத்துக் கொண்டது. இதனால் மிகுந்த கோபமடைந்த உக்ரைன் ராணுவ படைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை மீட்பதற்கு ரஷ்ய படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றது. அதன்படி குப்பியான்ஸ் நகரை மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் போராடி […]
அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு உக்ரைனை நோக்கி ரஷ்ய ரயில் செல்கிறது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 225 நாளை கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. இதில் ஏராளமான மக்கள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான ரயில் ஒன்று அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு உக்கிரனை நோக்கி செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இந்த ரயில் ரஷ்யாவின் படைப்பிரிவுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரயில் உக்ரைன் எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 300 […]
இராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணிகளுடன் மேற்கொண்ட ஒத்திகை அணிவகுப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. உக்ரைன் நாடு விடுதலை அடைந்து 30 ஆண்டுகள் ஆகின்றது. இதனை கொண்டாடும் வகையில் ராணுவ அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணியுடன் அணிவகுப்பை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனை அடுத்து இராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணியுடன் மேற்கொண்ட அணிவகுப்பின் புகைப்படங்கள் தற்போது வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது இந்த […]
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் உக்ரைன் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும்போது மருத்துவமனைக்கு உள்ளே 33 சிக்கிக் கொண்டதாக தெரிய வருகிறது. தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் அதிவிரைவாக செயல்பட்டதால் மருத்துவமனைக்கு உள்ளே சிக்கியவர்களில் சிலரை காயமின்றி […]