UNICEF குழந்தை திருமணம் பற்றி அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது UNICEF ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, நைஜீரியா, எத்தியோப்பியா, பிரேசில், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளில் 50 சதவீதம் பேருக்கு சிறுவயதிலேயே குழந்தை திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் 65 கோடி சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதுகுறித்து UNICEF நிர்வாக […]
Tag: UNICEF
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் காலகட்டத்தில் மட்டும் 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழலில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியிருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த போர் நடந்த சூழலின் போது சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் சுமார் 48 லட்சம் குழந்தைகள் பிறந்ததாகவும், 28 லட்சம் குழந்தைகள் கல்வி […]
ஏமன் உள்நாட்டுப் போரின் காரணமாக தற்போதுவரை 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக யூனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏமன் அரசிற்கும் அந்நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. அதன் விளைவாக இதுவரை 5000-த்திக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 5,00,000 – த்திற்கும் அதிகமான சிறுவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) தனது ஆய்வறிக்கையில் […]
இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சினைகள் எழும்போது யுனிசெப் நல்லெண்ணத் தூதுவராக கடமையாற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுவதனால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கத்தினால் ஐ.நா-வுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு–காஷ்மீர் பிரச்சனையில் நடிகை பிரயங்கா சோப்ரா இந்தியாவிற்கு சார்பாக கருத்து வெளியிட்டுள்ளதாகவும், புல்வாமா தாக்குதல் சம்பவத்திலும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதன்காரணமாக அவரை […]