Categories
அரசியல் மாநில செய்திகள்

நிறைகளும் குறைகளும் இணைந்த பட்ஜெட் – விஜயகாந்த் அதிருப்தி …!!

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று விஜயகாந்த் அதிருப்தி அடைந்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தெரிவித்தார். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் , பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்தவகையில் இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட […]

Categories
தேசிய செய்திகள்

Budget2020: தொழிலதிபர்கள் கூறுவது என்ன?

2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து சில முக்கிய தொழிலதிபர்களின் கருத்தைக் கேட்டறியப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து வாப்கோ ஆட்டோ இண்டஸ்ட்ரீஸின் தலைவர் கன்னியப்பன கூறுகையில், ”இந்த பட்ஜெட்டில் நிறைய புதிய முயற்சிகளும் ஆக்கப்பூர்வத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகளையும், கிராமப்புற மக்களையும் குறிவைத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களின் வருமானத்தை மும்மடங்காகப் பெருக்கும் விதத்தில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்புத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு […]

Categories
தேசிய செய்திகள்

Budget2020: ஆட்டோமொபைல் தொழில்துறை பழைய நிலைக்கு திரும்புமா?

2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறை மீண்டும் எப்போது வளார்ச்சி பாதைக்கு திரும்பும் என்பது பற்றிய நிபுணர்களின் கருத்து. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து ஹூண்டாய் துணை தலைவர் பிசி தத் நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக உள்ளது. விவசாயத் துறைக்கு பெரும் உந்துதலை கொடுக்கும் என […]

Categories
தேசிய செய்திகள்

Budget2020 : சுற்றுலாவுக்கு ரூ.2500 கோடி, கலாசாரத்துக்கு ரூ.3150 கோடி ஒதுக்கீடு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தவதற்காக 2020-21ஆம் ஆண்டில் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாயும், கலாசார துறைக்கு மூன்றாயிரத்து 150 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்தார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். சுற்றுலாத் துறைக்கான புதிய அறிவிப்புகள் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும்விதமாக வரும் 2020-21 நிதியாண்டில் இரண்டாயிரத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘பாஜகவை நம்பி வாக்களித்த மக்களுக்கு இப்படி ஒரு பட்ஜெட்டா?’ – ப. சிதம்பரம் ஆதங்கம்

தனக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமரவைத்த வாக்காளர்களுக்கு இப்படி ஒரு பட்ஜெட்டையா பரிசளிப்பது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாட்டின் நிதியமைச்சர் 160 நிமிடங்களுக்கு மிகப் பெரிய பட்ஜெட் உரையை நிகழ்த்தியுள்ளார். உங்களைப் போலவே நானும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

Budget2020 : நாகை மீனவர்கள், விவசாயிகள் அதிருப்தி

மத்திய அரசு அறிவித்த பட்ஜெட், மீனவர்களுக்கு உகந்தது அல்ல என மீனவர்களும், அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல் பட்ஜெட் அமைந்துள்ளது என விவசாயிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாகை மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டில் 200 லட்சம் டன் மீன் உற்பத்தியைப் பெருக்க இலக்கு எவ்வாறு நிர்ணயிக்கப் போகிறோம் என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும், 200 லட்சம் டன் […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டை விட சற்று கூடுதலாக ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் அரசு பங்குகளை விற்பது, வரியில்லா வருமானங்களை அதிகரிப்பது, மாணியங்களைக் குறைப்பது உள்ளிட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. அதேபோல் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டைவிட(ரூ. 3.18 லட்சம் கோடி) ஆறு விழுக்காடு கூடுதலாக ரூ. […]

Categories
தேசிய செய்திகள்

Budget2020: விளையாட்டுத் துறையில் என்ன மாற்றங்கள்?

மத்திய பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இந்திய விளையாட்டுத் துறைக்கு ரூ. 50 கோடி கூடுதலாக ரூ. 2826.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒலிம்பிக் நடக்கவுள்ளதால் இந்திய வீரர், வீராங்கனைகளுக்காகவும், விளையாட்டுக்காகவும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது. இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எதிர்பார்த்ததைப்போல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூ.50 கோடி விளையாட்டுத் துறைக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய மக்களுக்கு ஏதுமற்று, பணக்காரர்களுக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் எதுவுமில்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் இல்லை. சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி […]

Categories
தேசிய செய்திகள்

‘இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் அல்ல, வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்கள்’

மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் என்றும், இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் அல்ல, வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்கள் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் இன்றைய இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருகியுள்ளதை நேரடியாக சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ள அவர், இளைஞர்கள் திறமையும், அறிவும், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் கொண்டவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

கூட்டணி கட்சியை நோக்கி பாயும் ராமதாஸ் ….!!

எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்.ஐ.சி. பங்குகளை ஐ.பி.ஒ.(IPO) மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது. இது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக, பாமக கட்சிகள் கூட்டணி அமைத்து செயல்படும் நிலையில், […]

Categories
Uncategorized

”அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்” சீமான் காட்டம் …!!

மத்திய பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

பாஜக விரும்பும் கலாச்சார திணிப்பு… வேதனையளிக்கும் பட்ஜெட்… முக ஸ்டாலின் காட்டம்…!!

 பாஜக விரும்பும் கலாச்சார திணிப்பை ஒரு நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என்று திமுக ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது – முதல்வர் பழனிசாமி பாராட்டு

 மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது என்று தமிழக முதல்வர் பழனிசாமிபாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நீண்ட நேரம் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பட்ஜெட் குறித்து  தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயம், பாசன வசதி, […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : நாட்டின் தேவைகள், வருங்கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்- பிரதமர் மோடி நம்பிக்கை..!!

நாட்டின் தேவைகள், வருங்கால எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நீண்ட நேரம் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் குறித்து நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

3.50 லட்சம் கோடி எங்கே ? முதலீடுகள் எங்கே ? பிப்.4 இல் LIC ஊழியர்கள் போராட்டம் ….!!

பிப்.4 இல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்  மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இதில் எல்.ஐ.சி பங்குகள் தனியாருக்கு விற்கப்படுமென்ற அறிவிப்பும் வெளியாகியது. இதற்க்கு LIC ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு  போராட்டமும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து LIC சங்கம் தெரிவித்ததால் LIC-யின் பங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : மிக நீண்ட உரை…. ஆனால் வெற்று உரை… ராகுல் விமர்சனம்..!!

மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நீண்ட நேரம் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பட்ஜெட் குறித்து கருத்து கூறியதாவது, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வேலைவாய்ப்புக்கான உறுதி இல்லாதது ஏமாற்றம் – TTV தினகரன்.

வேலைவாய்ப்புக்கான உறுதி இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று மத்திய பட்ஜெட் குறித்து TTV தினகரன் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

10க்கு 1 மார்க் போட்ட ப.சிதம்பரம்….. பொருளாதாரத்தை கைவிட்ட மோடி அரசு ..!!

மத்திய பட்ஜெட்டுக்கு 10க்கு 1 மதிப்பெண் வழங்குவேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து  செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டில் ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை – கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்..!!

மத்திய பட்ஜெட் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

அதிகாரிகளுக்கும் அல்வா… மக்களுக்கும் அல்வா… கமல் ஹாசன் கிண்டல் ட்விட்..!!

மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பட்ஜெட் எதிரொலி ”பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி” முதலீட்டாளர்கள் அதிர்ச்சி …..!!

மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.   மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் பெரு நிறுவனங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள் குறித்த ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், பட்ஜெட் அறிவிப்புகளின் எதிரோலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 987 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 39,735 புள்ளிகளில் இன்றைய  வர்த்தகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020: என்.ஐ.பி. உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ரூ.103 லட்சம் கோடி ஒதுக்கீடு

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் மாபெரும் திட்டமான என்.ஐ.பி. திட்டத்திற்கு ரூ.103 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்தார். இதில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மத்திய அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்கள்: நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட என்.ஐ.பி. திட்டத்திற்கு 103 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து முதலீடுகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Budget2020 : பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து …!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இது குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் :  பட்ஜெட் குறித்து டெல்லி மக்கள் அதீத எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் மத்திய அரசு மீண்டும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டுள்ளது. பாஜக முன்னுரிமை அளிக்கும் இடத்தில் டெல்லி இல்லை. டெல்லி மக்கள் ஏன் பாரதிய ஜனதாவினருக்கு வாக்களிக்க வேண்டும்? ராஜ்நாத் சிங் :  நாட்டின் பொருளாதாரத்தை தட்டியெழுப்பும் பட்ஜெட். புதிய மற்றும் உறுதியான இந்தியாவை இது […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2020: வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள்

மலிவு விலை வீடுகள் வாங்கப்படுவதை ஊக்கப்படுத்தும்விதத்தில் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வீடுகள் வாங்குவதை எளிமையாக்கும்விதத்தில், ஊக்கப்படுத்தும்விதத்திலும், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் வீட்டுவசதித் திட்டங்களை ஊக்குவிக்கும்விதமாக மலிவு விலை வீடுகள் கட்டுமான திட்டங்களுக்கு ஓராண்டு வரிவிலக்கு அளிக்கப்படும் எனக் கடந்த ஜூலை மாதம் தாக்கல்செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பிரிவு 80EEAஇன் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த வரிச்சலுகையை மேலும் ஒரு வருடம் நீட்டித்து இந்த பட்ஜெட்டில் […]

Categories
அரசியல்

10 % வளர்ச்சியா ? ”வாய்ப்பே இல்லை’ – அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு ….!!

அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. இருப்பினும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து, திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறுகையில், “அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த அறிவிப்புகள் உள்ளன – எம்.எஸ் சுவாமிநாதான்

மத்திய அரசின் 2020-21 பட்ஜெட் அறிவிப்புகளில் விவாசயத் துறையை முன்னேற்ற தேவையான பல அறிவிப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணபர் எம் எஸ் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் விவசாயம் தொடர்பான ஏராளமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிருணர் எம்எஸ் சுவாமிநாதன் கூறுகையில், “விவசாயத்தை முன்னேற்ற நிறைய புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் அனைவரும் விவசாய துறையில் ஈடுபட […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : ரூ. 5 லட்சத்துக்கும் கீழ் வருமானம்…. இனி வருமானவரி கிடையாது..!!

ஆண்டிற்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நபர்களுக்கு இனி வருமானவரி கிடையாது என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை உரையில் கூறியதாவது : ஆண்டிற்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நபர்களுக்கு இனி வருமானவரி கிடையாது. அதேபோன்று, ரூ.7.5-10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 15 சதவீதமும், ரூ.10 – 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : பட்ஜெட் எதிரொலி: கடும் வீழ்ச்சியில் பங்குச் சந்தைகள் …!!

மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் பெரு நிறுவனங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள் குறித்த ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், பட்ஜெட் அறிவிப்புகளின் எதிரோலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 706 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 40,017 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது. அதேபோல, […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : தொழில் துறைக்கான சிறம்பம்சங்கள்….!!

2020 மத்திய நிதிநிலை அறிக்கையில் தொழில் துறைக்கு அறிவிக்கப்பட்ட செயல்திட்டங்களின் சிறப்பம்சங்கள் இதோ… தொழில் துறையை முன்னேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தொழில் துறைக்கு 27 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வர்த்தம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு தொழில் துறை பட்ஜெட்டின் சிறப்பம்சம்கள் தொழில் வளர்ச்சி நிறுவனங்களை ஊக்குவிக்க 27,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு அரசு – தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் செலுத்திய வரி உங்களுக்கே திருப்பி அளிக்க அரசுத் திட்டம்….!!

ஏற்றுமதியாளர்களிடம் மத்திய, மாநில அரசுகள் பெற்ற வரியை, அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியதாவது, “ஏற்றுமதியாளர்களிடம் மத்திய, மாநில அரசுகள் பெற்ற வாட் உள்ளிட்ட அனைத்து விதமான வரியும், அவரவர் கணக்குகளுக்குத் திருப்பிச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தை இந்த ஆண்டு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : வருமான வரி வரம்பு குறித்த தகவல்கள் ….!!

வருமான வரி வரம்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறிய முக்கிய தகவல்கள்… மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2020-21ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது. இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : ”எல்.ஐ.சி , வங்கி பங்குகள் விற்பனை” பட்ஜெட்டில் அறிவிப்பு …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , தனிநபர் வருமான வரி குறைப்பு :  ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை 10 விழுக்காடு ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 15 விழுக்காடு ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 20 விழுக்காடு ரூ.12.5 […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : பெண்கள் திருமண வயதை அதிகரிக்கும் விவகாரம் – குழு அமைக்க நடவடிக்கை!

பெண்களின் திருமண வயதை அதிகரிக்கப்பது தொடர்பான குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஏராளாமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு: பெண்கள் தாய்மையடையும் வயதை நிர்ணயம் செய்வது குறித்து ஆராய ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்படும்; அக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் – பட்ஜெட்டில் அறிவிப்பு …!!

நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். பொருளாதாரத் துறை சார்ந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்: நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் உருவாக்க மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : உள்கட்டமைப்பை மேம்படுத்த என்னென்ன திட்டங்கள்?

நாட்டின் உள்கட்டமைப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறிய முக்கிய தகவல்கள்… 2020 – 2021ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரை நிகழ்த்திவருகிறார். அதில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அவர் வெளிட்ட முக்கிய அறிவிப்புகளைக் காணலாம். போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு 5 ஆண்டுகளுக்கு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு சென்னை- […]

Categories
தேசிய செய்திகள்

2025ஆம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க மத்திய அரசு திட்டம்!

2025ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளனர். 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது சுகாதாரத் துறையில் கொண்டுவரவுள்ள திட்டங்கள் குறித்து பேசிய அவர், “மலிவு விலையில் மருந்து வாங்குவதற்கு ஏதுவாக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜன் ஆயுஷாதி கேந்திரா திறக்கப்படும். மருத்துவ கருவிகளிலிருந்து கிடைக்கும் வரிப் பணத்தைக் கொண்டு மருத்துவமனைகள் […]

Categories
தேசிய செய்திகள்

‘திருக்குறள் வழியில் நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடி’ – நிதியமைச்சர் புகழாரம்

‘பிணியின்மை’ என்று தொடங்கும் திருக்குறள் வரிகளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர், அதன்படி பிரதமர் நரேந்திர மோடி நாட்டை ஆட்சி செய்துவருவதாக பெருமிதம் தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். வேளாண் துறைக்கான பட்ஜெட்டை அறிவிக்கும்போது, ’பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி வரியை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர், தற்போது திருக்குறள் வரிகளையும் மேற்கோள் காட்டியுள்ளார். அவர் கூறிய திருக்குறள் வரிகள் பின்வருமாறு: ”பிணியின்மை செல்வம் விளைவின்பம் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டிய ’பூமி திருத்தி உண்’ வரியின் விளக்கம்?

மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக உரை நிகழ்த்திவரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஔவையாரின் ஆத்திச்சூடியில் வரும் ’பூமி திருத்தி உண்’ வரியை மேற்கோள்காட்டியுள்ளார். 2020ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். 2020ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பட்ஜெட்டின் நோக்கம் என்று தெரிவித்து வேளாண் துறைக்கான செயல்திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார். அப்போது, தமிழ்ப்புலவர் ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி வரியை மேற்கோள்காட்டி நிதியமைச்சர் பேசினார். அதில் ’பூமி திருத்தி உண்’ […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : புதிய கல்விக்கொள்கை விரைவில் அமல், ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு ….!!

 வரும் நிதியாண்டில் கல்வித் துறைக்கு 99 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதில், 2030இல் உலகளவில் அதிக வேலையாட்களைக் […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : வேளாண்மைத் துறைக்கான சிறம்பம்சங்கள்…!!

2020 மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறைக்கு அறிவிக்கப்பட்ட செயல்திட்டங்களின் சிறப்பம்சங்கள் இதோ… மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்திரா காந்திக்கு பிறகு நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யும் 2020-21ஆம் ஆண்டுக்கான முழுமையான மத்திய நிதிநிலை அறிக்கை இது. இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல்செய்யும் நாட்டின் மத்திய நிதிநிலை அறிக்கையானது, சரிந்த […]

Categories
தேசிய செய்திகள்

#Budget Live : ”ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்” ரூ 3,150,00,00,000 ஒதுக்கீடு …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் : ஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து இடங்களில் தொல்லியல்துறை அருங்காட்சியகம் அமைக்கப்படும். இந்திய பாரம்பரிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கலாச்சாரத்துறைக்கு ரூ.3150 கோடி ஒதுக்கீடு.இந்திய பாரம்பரிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்கப்படும். பட்டியிலனத்தவர்கள், பழங்குடியினர் மேம்பாடு : பட்டியலினத்தவர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : குட் நியூஸ் : ”கிராமங்களுக்கு பைபர்” 27,000 K.M விரிவாக்கம்…!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , பட்டியிலனத்தவர்கள், பழங்குடியினர் மேம்பாடு : பட்டியலினத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாத உயர்வுக்கு 85 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியினரின் வாழ்வாதார உயர்வுக்கு 53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு பெண் குழந்தைகளை பாதுகாப்போம் : பேட்டி பச்சாவ் […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : ரூ. 99,300,00,00,000 கல்விக்காக ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்காக ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு 2025ம் ஆண்டிற்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக்குவதே பிரதமர் மோடியின் கனவு  தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : ”விவசாயிகளுக்காக இரயில் சேவை, விமான சேவை” – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி – நிர்மலா சீதாராமன் தேசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் ‘விவசாயிகளுக்காக இரயில் சேவை, விமான சேவை அமைக்கப்படும்.. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : போலீஸ் பல்கலைக்கழகம்….. ”புதிய கல்விக் கொள்கை”.. நிர்மலா சீதாராமன்…!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , புதிய கல்விக் கொள்கை : புதிய கல்விக் கொள்கை நாடு முழுக்க விரைவில் அமல்படுத்தப்படும். மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள். 150 பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும். மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : தனியாருடன் இணைத்து 2000 மருத்துவமனை …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , மீனவர்கள் பாதுகாப்பு : சாகர் மித்ரா என்னும் திட்டம் வாயிலாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். சுகாதாரம் : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் பங்களிப்புடன் இரண்டாயிரம் மருத்துவமனைகள் அமைக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12 ஆயிரத்து […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் உரை …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , அதில் ஔவையாரின் ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் பேச்சினார் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார்.

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : விவசாயிகளுக்கு ரூ15 லட்சம் கோடி கடன் இலக்கு – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. “கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் – நிர்மலா சீதாராமன் உறுதி …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் , நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், நடுத்தர குடும்பத்தின் வளர்ச்சியை கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா மூலமாக இந்தியாவின் வளர்ச்சி உலக அரங்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் கூறியதாவது:- மூன்று நோக்கங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், […]

Categories

Tech |