ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து 1.5 பில்லியன் டாலர் நிதி உதவியை முடக்கியுள்ளது அமெரிக்கா. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கியதை அடுத்து, தாலிபான்கள் எளிதாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டனர்.. இனி அந்த நாட்டில் தலிபான்கள் தான் செய்வார்கள் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.. அந்நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.. சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை மீட்டு […]
Tag: US
கொரோனா வைரஸ் அமெரிக்காவின் தயாரிப்பு என்று ஈரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தலைவர் தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பீதி , காட்டி உயிர்பலி வாங்கும் கொரோனா வைரஸ் ஈரானையும் விட்டுவைக்கவில்லை. ஈரானில் 3513 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் பலி எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை […]
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே உள்ள பசுமை பகுதி எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் அயல்நாட்டு தூதுவர்கள் மற்றும் நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை மூன்று ராக்கெட்கள் விழுந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராக்கெட்டுகள் பாக்தாதின் அண்டை மாவட்டமான […]
அமெரிக்காவை தவறாகப் பேசியதால் சுலைமானியை கொன்றோம் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுலைமானி கொலை குறித்து புதிய காரணத்தைக் கூறியுள்ளார். புளோரிடாவில் பாம் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் சுலைமானி கொலை குறித்துக் கூறியதாவது,”ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவைப் பற்றி […]
தனது காதலரான ரோஹ்மன் ஷால்லுக்கு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 28ஆவது பிறந்தநாளை பிரபல மாடலான ரோஹ்மன் ஷால் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரோஹ்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சுஷ்மிதா சென் வாழ்த்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அப்பதிவில் ”நீங்கள்தான் என் வாழ்க்கையின் காதல், என் வேண்டுதலின் விடை, கடவுளின் அன்பு பரிசு, உங்கள் மூன்று தேவதைகளும் (சுஷ்மிதாவும் அவர் […]
ஈராக் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை வெளிப்படுத்தும் வகையில் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார் ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலைய தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார். ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல அமெரிக்கா அதிபர் டொனால்ட் […]
ஈராக் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டார். ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலைய தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார். ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல அமெரிக்கா அதிபர் டொனால்ட் […]
தடைபட்டிருக்கும் அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா மீண்டும் தொடங்க வேண்டும் என்று வட கொரியா அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரிடையே ஏற்பட்ட நல்லுறவை அடுத்து, அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடமாகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தொடக்கத்தில் சுமுகமாக நடைபெற்றுவந்த […]
எதிரி நாட்டு ராணுவ அச்சுறுத்தல், இராணுவ ஆதிக்கத்தின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டுமென்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்களை மீறி வடகொரியா அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகின்றது. வடகொரியா_வின் இந்த அணு ஆயுத சோதனையானது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சோதனையில் இருந்து பின் வாங்குவதாக இல்லை. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜாங் […]
சீனா தேவை இல்லை என்றும் , சீனா_வை விட்டு அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா_வுக்கும் , சீனா_வுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகின்றது. தற்போது இந்த வர்த்தக போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் இரு நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு வரும் அந்தந்த நாடுகளின் பொருட்களுக்கு மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள், பொம்மைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் வரை […]
எங்கள் நாட்டின் இராணுவம் யாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டியுள்ளார். அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கொரிய தீபகற்பத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருவது தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி என்று வடகொரியா எச்சரித்து வருகின்றது. மேலும் இவர்களின் ராணுவ கூட்டுப் பயிற்சியை எச்சரிக்கும் விதமாக அணு ஆயுத சோதனை , ஏவுகணையை ஏவுதல் என்று தொடர்ந்து வடகொரியா ஈடுபட்டு , அமெரிக்காவின் எச்சரிக்கையையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வாடிக்கையாகி விட்டது. […]
பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதாக எழுந்த விவகாரத்தில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து இரண்டு நாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான்கான் கூறுகையில் , பாகிஸ்தானில் தெஹ்ரீக் இ இன்சாப் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு […]
அமெரிக்கா மற்றும் ஈராக் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 IS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராக் நாட்டின் அன்பர் பாலைவனம் அண்டை நாடுகளான சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா எல்லை பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு IS பயங்கரவாத அமைப்பு மிக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. இங்குள்ள பொதுமக்கள் கடத்துவது , கொலை செய்வது என தொடர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2017_ஆம் ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் உள்ள IS தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிவக்கையை ஈராக் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். […]
உலகிலேயே முதன்முதலாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணிக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இந்த சிகிச்சை நடந்தது. இதில் அமெரிக்க நிறுவனம் ஒன்று சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நோயாளிகளிடம், உறுப்புகளை விரைவாக கொண்டு […]