துணை செவிலியர் ஒருவர் பெண்ணிற்கு அலட்சியமாக இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது அனைத்து இடங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு இடங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக மேற்கொள்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மந்தவுளி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி […]
Tag: Uttar Pradesh
கொள்ளையடிக்க சென்ற இடத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான பணம் கிடைத்ததால் சந்தோஷத்தில் நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்வாலி திஹட் பகுதியில் நவாப் ஹைடர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு பொது இ-சேவை மையத்தில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி 2 கொள்ளையர்கள் 7 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நவாப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் […]
உத்தரபிரதேசத்தில் புதிதாக 125 பேருக்கும், ராஜஸ்தானில் புதிதாக 122 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 இலிருந்து 2301ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 இல் இருந்து 56ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் 113 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மீரட், கோரத்பூர் நகரை சேர்ந்த இருவர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளார். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு […]
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி – மஹால் எக்ஸ்பிரஸ்ஸின் ஒரு இருக்கையில் கடவுள் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள ஓம்கரேஷ்வர் , மஹகளேஷ்வர் மற்றும் காசி விஸ்வநாதர் ஆகிய மூன்று ஜோதிலிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் அந்த ரயிலின் B 5 பெட்டிகள் பெட்டியில் 64வது சீட் சிவபெருமானின் சிறு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதில் கடவுள் படங்களை […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறி கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அலிகர் […]
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ஜோய் நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் காவலர்கள் வேடமிட்டு சென்று சகோதரிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகி-வருகின்றன. இந்நிலையில், சம்பல் மாவட்டத்தின் பஹ்ஜோய் நகரில் உள்ள ஒரு வீட்டில் சகோதரிகள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலைப் பொழுதில் திடீரென அவர்களின் வீட்டிற்குள் காவலர்கள் வேடத்தில் இரண்டு பேர் நுழைந்துள்ளனர். சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகவும் இது குறித்து […]
ரஞ்சி டிராபி தொடரில் மும்பை – உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 2019-20ஆம் ஆண்டுகளுக்கான ரஞ்சி டிராபி சீசன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் பிரிவு போட்டிகளில் மும்பை – உத்தரப் பிரதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய உத்தரப் பிரதேசம் அக்ஷ்தீப் நாத், உபேந்திர யாதவ் ஆகியோரின் சிறப்பாக ஆட்டத்தால் 8 விக்கெட்டுகளை இழந்து 625 ரன்களைக் குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 128 ரன்களுக்கு 4 […]
குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , […]
மதுராவில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகேயுள்ள சுரீர் நகரில், சிறுமி ஒருவர் தனது பாட்டியுடன் தீவனம் சேகரிக்க காட்டுப்பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவரை மூன்று பேர் மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவரின் மனைவியைபாலியல் தொழிலாளியாக்குவோம் என்று காவல்துறை மிரட்டிய சம்பவம், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த டிசம் பர் 20-ஆம் தேதி லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ராபின் வர்மாவும் ஒருவராவார். உத்தரப்பிரதேச பாஜக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள ராபின் குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமைச் சட்டத்தை […]
உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர் வழக்கை வாபஸ் பெறக் கோரி, அந்த சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் ,அதில் ஒருவன் மட்டும் சிறுமியின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்று, வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளான். அவர்கள் மறுப்பு தெரிவித்ததும் சிறுமியின் […]
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 ஆம் ஆண்டு சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 6 பேருகும் விரைவில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று 6 பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்கள் மீதான கிரிமினல் வழக்கை வாபஸ் பெறும்படி […]
பறேயல்லி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் வீட்டில் நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் வைத்திருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தில் உள்ள அமரியா காவல் நிலையத்தில், புஷ்கர் சிங் கங்வார் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குச் சொந்தமான பறேயல்லி மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரில் மனைவி ருச்சி, ஆறு வயது மகள் அனன்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி புஷ்கர் […]
உன்னாவ் பாலியல் வழக்கு குற்றவாளியான நீக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார். […]
உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக நடனம் ஆடாத காரணத்தால் பெண் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநித்தின் சித்ரகூட் பகுதியில் உள்ள திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் சுதிர் சிங்(45). இவர் அக்ககிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.இவருடைய மகளின் திருமணம் போன மாதம் நவம்பர் 30-ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் கச்சேரியுடன்,மட்டுமன்றி நடன நிகழ்ச்சிக்கும் சுதிர்சிங் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அன்று இரவு நடனக்குழுவை சேர்ந்த பெண்கள் நடனம் ஆடிக் […]
பள்ளி மாணவர்களுக்கு சரியான உணவை வழங்க முடியாத அரசு தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் வழங்குவதன் மூலம், மனிதர்கள் எப்படி போனா எங்களுக்கு என்ன எங்களுக்கு மாடுகள்தான் முக்கியம் என்பது போல் இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களை பாஜகவே ஆட்சி செய்துவருகிறது. அப்படி பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மறைமுகமாக பசுக் காவலர்கள் ஆட்சி மறைமுகமாக நடந்துவருகிறது. அப்படி உத்தரப் பிரதேசத்திலும் பசுக்காவலர்களின் ஆட்சி படு ஜோராக நடக்கிறது. மாடுகள் இறந்து […]
காதலனுடன் ஊர்சுற்ற பெற்ற குழந்தையை விற்பனை செய்த கல்நெஞ்சம் கொண்ட தாயை காவலர்கள் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வரும் ஷாமன் என்ற பெண்ணுக்கு 9 மாத கைக்குழந்தை ஒன்று இருந்தது. இந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் விபின் என்பவருடன் திருமணத்தை தாண்டிய முறைதவறிய உறவு இருந்துள்ளது. இந்த உறவு காரணமாக இருவரும் தனிமையில் சந்தித்து ஊர்சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பெண் தனது […]
வருங்கால வைப்பு நிதி ஊழலை தொடர்ந்து மற்றொரு மோசடி அம்பலமாகி உத்தரப் பிரதேச யோகி அரசை உலுக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு […]
உத்தரப் பிரதேச அரசு மின்சார தொழிலாளர் வைப்பு நிதி ரூ.2,600 கோடியை வங்கிசாரா தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்தியநாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். மேலும் தற்போது நடப்பது ராம ராஜ்ஜியம் (ஆட்சி) அல்ல நாதுராம் (கோட்சே) ராஜ்ஜியம் என்றும் அவர் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் (Akilesh Yadav) செய்தியாளர்களை […]
உத்தரப்பிரதேசத்தில் அரசு கட்டிடம் சரி செய்யப்படாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து வேலை செய்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்வதே அரசின் பிரதான கடமை. அதற்காகவே அவர்களை நாம் வாக்கு அளித்து தேர்வு செய்கின்றேன். சொல்லப் போனால் அரசாங்கம் மக்களுக்கான வேலைக்காரன் என்றும் சொல்லலாம். ஆனால் தற்போது நிலைமை வேறு , மக்களுக்கு சேவை செய்யாமல் ஒவ்வொரு அரசும் மக்களை வஞ்சித்து வருகின்றனர். இதனால் தான் அங்கங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களுக்கு […]
உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிலிப்பிட் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது விவசாய கழிவுப் பொருட்களை தெருக்களில் வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து சுமார் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் பில்சந்தா, நேரியா, அமரியா, புரன்பூர், சேரமாவூ, மதோடண்டா, ஜகனபாத், பிசால்பூர் மற்றும் கஜ்ராவூலா கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.விவசாயிகள் […]
இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவர் கமலேஷ் திவாரி உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமேலேஷ் திவாரி, கடந்த 18ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நாகா பகுதியில் மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.அவரின் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டது. அவரின் எலும்புகள் மற்றும் மார்புகளிலும் கத்தி இறங்கியிருந்தது.இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்டதாக ஹூசேன் ஷாஜீர்ஹீசேன் சேஷ் (34), மொய்னுதீன் […]
சோன்பத்ரா கலவரத்தில் கிராமத் தலைவர், அவரின் சகோதரர்கள் உள்பட 51 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களை தங்களுக்கு கொடுக்குமாறு மாற்று சமூகத்தினர் கட்டாயப்படுத்தினர். ஆனால் அதற்கு பழங்குடியின மக்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டு 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் தொடர்புடைய 15 அரசு அலுவலர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், கிராமத் […]
தனியார் துறை கீழ் செயல்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 554 கிலோ மீட்டர் துரைத்தை வெறும் 6.15 மணி நேரத்தில் கடக்கின்றது. மத்திய அரசின் கீழ் இயங்கும் ரெயில்வேதுறையில் தனியார் மையத்தை புகுத்தும் வகையில் கடந்த மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.இதன் ஒருபகுதியாக இந்த சேவையை நாட்டில் முதல்முறையாக உத்திர பிரதேச மாநிலத்தில் அக்டோபர் மாதம் 4_ஆம் தேதி இந்த சேவையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க இருக்கிறார்.தனியார் சார்பில் இயக்கும் ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’என்று பெயர் […]
உத்தரபிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மத்தியிலும் , மாநிலத்தலும் எந்த அரசு வந்தாலும் கல்வியை எந்த அளவுக்கு ஊக்குவிக்கின்றார்களோ அந்தளவுக்கு நாட்டின் வளர்ச்சி சாத்திய படும். மாணவர்களை படிக்க வைக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக மதிய உணவு வழங்கப்பட்டு தற்போது சத்துணவை வழங்கி வருகின்றது. அதிலும் மாணவர்களுக்கு முட்டை உள்ளிட்ட சத்து மிக்க சுகாதார ஆரோக்கியமான உணவுகளை தமிழக […]
உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் ஓடும் வெள்ள நீர் இருசக்கர வாகனத்தை அடித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. பருவமழையானது வட மாநிலங்களில் வெளுத்து வாங்குகின்றது. மகாராஷ்டிரா , உத்தரப்பிரதேஷ மாநிலங்களால் வெள்ளத்தால் மிதக்கின்றது. அங்குள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மாநில அரசுக்கள் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மும்பை கனமழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி , முதலைகள் தெருக்களுக்கு படையெடுத்தன. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. […]
உத்திர பிரதேச கன்வர் யாத்திரை பக்தர்கள் மது அருந்துவதாக வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் உட்பட அதை சுற்றியுள்ள மாநிலத்தை சேர்ந்த கன்வாரியாஸ் என்று அழைக்கப்படும் சிவ பக்தர்கள் கன்வர் யாத்ரா என்ற பெயரில் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங் கோவிலுக்கு யாத்திரை செல்வது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் இந்த புனித யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் சிலர் மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கங்கை ஆற்றின் கரையின் ஓரத்தில் பக்தரான இளைஞர்கள் […]
குற்றவாளிக்கு பாஜக அதிகாரமளித்ததை ஒப்புக்கொண்டதாக உன்னோவ் வழக்க்கில் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று […]
உன்னோவ் வழக்க்கில் தொடர்புடைய பாஜக MLA குல்தீப் சிங் செங்கார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை […]
உத்தரபிரதேச உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள MLA மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாஜக MLA என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நியாயம் கிடைக்க அம்மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 […]
உன்னாவ் விவகாரம் தொடர்பாக திமுக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையே சிறுமி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் சிறுமியின் குடும்பத்தினர் 2 பேர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து […]
உத்தரப் பிரதேசத்தில் பெண் புலியை அடித்து கொன்றதாக 43 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பனிபட் மாவட்டத்தில் உள்ள மதானி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை காலை ஊருக்குள் புகுந்த பெண்புலி ஒன்று பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கம்பு மற்றும் கம்பிகளால் அந்த புலியை தாக்கியுள்ளனர். புலி தாக்க படுவதை வீடியோ எடுத்த ஒரு சிலர் அதனை உடனே சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த வனத்துறையினர் புலிகளை கொடூரமாக தாக்குவதை […]
உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆசுரத்தனமான பெற்று , மத்தியில் தனி பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் அமித்ஷா இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக தேர்வாகியதால் பாஜவிற்கு செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு செய்யப்பட்டார். ஜே.பி நட்டா தேர்வானத்தில் இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான […]
மும்பையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் . உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 9_ஆம் தேதி முதல் 12_ஆம் தேதி வரை 3 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாக்ராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபித், சோனபத்ரா, சந்தோலி, பிரோசாபாத், மாவ் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நகரின் […]
தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் பாஜகவில் இணைந்ததால் வீட்டை காலி செய்யும்படி சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது . பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது இந்தியளவில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. வாரணாசியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தர பிரதேச […]