தற்கொலை குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 3.2 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. அதிலும் நாட்டில் அதிகம் தற்கொலை செய்பவர்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது குறித்து பல சமூக ஆர்வலர்களும், பல பிரபலங்களும் தற்கொலை தீர்வல்ல என்பது உள்ளிட்ட கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து […]
Tag: #vairamuthu
உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும். […]
மே 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது சாவின் ஒத்திகை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் […]
கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தனக்காக ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் சாதனைகளைப் பாராட்டி அவரை கவுரவிக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனம் சமீபத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது.அந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள இருந்தார். இதனிடையே, பாடகி சின்மயி வைரமுத்து குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்ததை அடுத்து திடீரென கவுரவ டாக்டர் […]
ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே என்று கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். அமேரிக்காவில் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றிய போது, ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்று பேசினார். மேலும் இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். 3000 […]
சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தியால் எப்படி முடியும்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவின் மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். […]
பி.வி.சிந்துவின் வெற்றியால் இந்தியா பொன்னால் பெருமை பெறுகிறது ஒரு பெண்ணால் என்று வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். […]
ஒரு முனையில் தேசிய கொடி மறுமுனையில் கருணாநிதியின் புகழ் கட்டப்பட்டிருக்குமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சென்னை YMCA மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில் , தமிழ்நாட்டில் ராஜாஜி முதல் எடப்பாடி வரை 12 முதல்வருடன் அரசியல் செய்தவர் கலைஞர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 15 வரப் போகிறது. இந்தியாவின் முதல் அமைச்சர்கள் அவரவர்கள் கோட்டையில் கொடியேற்ற போகிறார்கள். மம்தா பானர்ஜி வங்காளத்திலும் , புதுச்சேரி முதல்வர், பினராய் விஜயன், ஆதித்யநாத் கூட கொடியை […]
தளபதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் தமிழக மக்களின் மனதை கட்டாயம் வெல்வீர்கள் என்று கலைஞர் நினைவு நாளின் சிறப்பு நிகழ்வான பொது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பின் தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, கவிஞர் வைரமுத்து, புதுச்சேரி முதல்வர் […]
கலைஞர் இறந்த பின்பும் அவரது தத்துவத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை விலங்குகளுடன் ஒப்பிட்டு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதன்பின் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் […]
தமிழின் தொன்மையை அளிக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழுக்கு சிறந்த தொண்டுகளாற்றிய அறிஞர்கள் குறித்து கவி பேரரசு வைரமுத்து எழுதிய தொகுப்பான தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவானது சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் நூலை வெளியிட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதனை பெற்றுக் கொண்டார். இதையடுத்து விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழ் மொழியின் தொன்மையையும், திராவிட இனத்தின் பெருமைகளை சிதைக்கவும், தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்கவும் சதி திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இவரை தொடர்ந்து […]
தமிழை ஆட்சி மொழியாக மாற்ற முழுமூச்சோடு பயணிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பிகளுக்கான பதவியேற்பு விழா இரண்டாவது நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதில் இன்றைய நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற அனைவரும் தமிழ்மொழியிலே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேலும் பதவிப்பிரமாணத்தின் இறுதியில் தமிழ் வாழ்க என்ற முழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி அனைவரிடமும் […]
தமிழ் பேசக்கூடாது என்று கூறியதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக […]
நேருவின் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிற்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார் . கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஹிந்தி பேசாத மக்கள் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் வரை மொழித் திணிப்பை செய்யமாட்டோம் […]