Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்து மோதி விவசாயி பலி

வள்ளியூரில் உள்ள கலந்தபனை கிராமத்தை சேர்ந்தவர் பாலசிங். 75 வயதாகும் விவசாயியான பாலசிங் இன்று காலை அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த பாலசிங் விபத்து ஏற்பட்ட இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பணகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |