வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோயிலுக்கு சென்ற கோனாமேடு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை, நூருல்லாபேட்டை பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளனர். இந்தப் […]
Tag: #Vaniyambadi
வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 50ரூபாய்க்கு 2பார்சல் பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை குடி போதையில் தாக்கிய 2ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர். பேரூந்துநிலையம் அருகே கலீம் என்பவர் காஜா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இங்கு குடிபோதையில் சென்ற 2ஆட்டோ ஓட்டுனர்கள் 240ரூபாயுடைய பிரியாணியை வெறும் 50ரூபாயை கொடுத்து விட்டு 2பிரியாணியை தரும்படி அதட்டலாக கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் முதலில் ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் பின்னர் உரிமையாளரையும் தாக்கினர் பதிலுக்கு ஹொட்டல் […]
இருசக்கர வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருப்பத்தூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி அருகே இவர் வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த ஷேர் ஆட்டோ இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், விரைந்து […]
வேலூர் வாணியம்பாடி அருகே தெருவில் சுற்றித் திரிந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது கணவாய்புதூர் கிராமம். நேற்று இரவு இக்கிராமத்தில் உள்ள தெருவில் சுமார் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. பாம்பு குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பாம்பை பார்பதற்காக ஒன்று கூடினர். அப்போது, அந்த மலைபாம்பு கூடியிருந்த பொதுமக்கள் மீது சீறிப் பாய்ந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் பாம்பு […]