பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களின் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து விட்டனர். அதன்படி மொத்தம் 227 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை திரும்ப கொடுங்கள் என்று கூறி […]
Tag: vehicle
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் கால்கள் முழுமையாக வலுவில்லாத மற்றும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் […]
தாய்லாந்து நாட்டில் சாலையை மறித்து வயதான யானை தனது மகனுக்கு வாகனத்தில் இருந்த உணவுப் பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும் என பறித்துச் சாப்பிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் சச்சோயங்சாவோ (Chachoengsao) என்ற இடத்தில் இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர். அப்போது ஒரு சிறிய டிரக் வண்டியில் உணவுப் பொருள் இருப்பதை ஒரு யானை பார்த்து விட்டது. உடனே வண்டியில் […]
விபத்து ஏற்பட்டு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குள்ளம் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதனை தொடர்ந்து நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் […]
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதற்கு முன்பு போலோ மற்றும் வென்டோ கார்களின் ஜிடி லைன் வேரியண்ட் அறிமுகம் செய்திருந்தது. தற்போது அந்நிறுவனம் அமியோ ஜிடி லைன் அறிமுகம் என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் காரின் விலை ரூ. 9.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த அமியோ காரில் 110 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் ற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என்ஜின் […]
இந்திய விற்பனையில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் இந்திய விற்பனையில் 15,000 யூனிட்களை கடந்துள்ளது. மேலும், பத்து மாதங்களில் 650சிசி பிரிவில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதுமட்டுமின்றி ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 650சிசி பிரிவில் இதன் விலை இந்தியாவில் […]
இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் தனது புதிய காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவின் ரெனோல்ட் நிறுவனம் தனது புதிய டஸ்டர் பி.எஸ். 6 காரின் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டஸ்டர் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்களில்முழுமையாக மறைக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், காரின் வெளிப்புறத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிகிறது. மேலும், புதிய டஸ்டர் காரானது சமீபத்தில் அறிமுகமாகி விற்பனையாகி வரும் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே […]
இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் தனது வாகனங்களுக்கு புதிய விலையை நிர்ணயித்துள்ளது. அதன்படி பஜாஜ் பல்சர் சீரிஸில் கிளாசிக் 150, பல்சர் 150 நியோன், 160 என்.எஸ்., 200 என்.எஸ். மற்றும் 220 எஃப் போன்றவற்றின் விலை ரூ.4000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பஜாஜின் அவெஞ்சர் சீரிஸ் மாடலில் ஸ்டிரீட் 160, குரூஸ் மற்றும் ஸ்டிரீட் 220 மாடல்களின் விலை ரூ.1000 மாக உயர்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி பஜாஜ் ஃபிளாக்ஷிப் மாடலான டாமினர் 400 விலையை ரூ. 10,000 வரை […]
இந்தியாவின் ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கோடியக் கார்ப்பரேட் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்கோடா நிறுவனம் புதியதாக கோடியாக் கார்ப்பரேட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் விலை ரூ. 32.99 லட்சம் என நிர்ணயம் நிர்ணயித்துள்ளது. இந்த காரானது அந்நிறுவனத்தின் ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 2 லட்சம் குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாகா இந்த புதிய கார்ப்பரேட் எடிஷன் மாடல் காரானது இந்திய சந்தையில் ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனைக்கு […]
மாருதி நிறுவனம் புதியதாக எஸ் பிரெஸ்ஸோ என்ற காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி நிறுவனம் புதியதாக எஸ் பிரெஸ்ஸோ என்ற காரை கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாருதியின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்டின்படி இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த கார் வரும் 30 தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், இந்த கார் ரெனோ க்விட் காருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் நீளம் 3,565 மிமீ, அகலம் 1,520 மிமீ, உயரம் 1,564 மிமீ, வீல் பேஸ் 2,380 […]
டாப் 10 கார்களின் வருட விற்பனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதக் கணக்கெடுப்பின்படி , கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 1.07 லட்சம் ஆகும் . ஆனால் , கடந்த ஆண்டு 1.35 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 21 சதவிதம் கார் விற்பனை குறைந்துள்ளது. இதில் , மாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து உள்ளது . இதன்மூலம் […]
ஹூண்டாய் நிறுவனம் அடுத்ததாக கிராண்ட் ஐ 10 நியாஸ் என்ற புதிய மாடல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது . கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ10 மாடலில் உருவாக்கப்பட்ட கார்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது . மேலும் இந்த மாடலுக்கு உலகம் முழுவதும் சுமார் 27 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் அந்நிறுவனம் என கூறியுள்ளது . இந்த கார் இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என நான்கு […]
டுகாட்டி நிறுவனம் தனது புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவின் டுகாட்டி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மோட்டார் சைக்கிளின் விற்பனையை இந்தியாவில் துவங்கிவிட்டது . டுகாட்டி நிறுவனம் பனிகேல் வி 4 ஆர் மொத்தமே இந்தியாவில் ஐந்து யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது . இந்நிலையில், புதிய பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிளை வாங்குவதற்காக இருவர் முன்பதிவு செய்துள்ளனர் . இதில் , இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதியின் விற்பனையாளர் […]
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் 2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் மாடல் 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ உருவாக்கப்படுகிற பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது . இந்த டி.யு.வி.300 பிளஸ் மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது . மேலும் , இதன் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . குறிப்பாக புதிய டி.யு.வி.300 பிளஸ் அடுத்த […]
பஜாஜ் நிறுவனம் பல சிறப்பான அம்சங்களை கொண்ட புதிய பல்சர் 125 நியான் மாடலை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 நியான் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பல்சர் 125 நியான் மாடலானது இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 64,000 மேலும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 66,618 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் […]
பிரீமியம் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார் சைக்கிள் மாடல்களை உருவாக்கியுள்ளது . பிரீமியம் மோட்டார் சைக்கிள்களின் பட்டியலில் இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ள டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. இது நீண்ட தூர பயணத்துக்கு மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக ஜி.டி. மாடலில் மட்டும் […]
நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமாக முழுவதும் ரிமோட்டில் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. நெதர்லாந்தை சேர்ந்த பிஜோர்ன் ஹர்ம்ஸ் அர்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கணினி மென்பொறியாளரான இவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருகிறார். குழந்தைகள் விளையாடும் கார் போல் ரிமோட் மற்றும் ஜாய் ஸ்டிக் போன்றவற்றின் மூலம் இந்த புதிய காரை இயக்கிக் காட்டி அசத்துகிறார். மேலும் அடுத்த கட்டமாக இந்த காரை குரல் […]
இந்தியாவில் வாகன பதிவு கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கம் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் தற்போது எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாகன பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக புதிய வாகனங்களின் பதிவு மற்றும் மறு பதிவுக் கட்டணங்களை கடுமையாக உயர்த்த உள்ளதாகவும், இலகு ரக கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை […]