சிறப்பு வாகன சோதனையின் போது விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், சக்திவேல், கருணாநிதி ஆகியோர் பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் சீருடை அணிந்துள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றார்களா என்றும், தகுதி சான்றிதழானது புதுப்பிக்கப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு நடத்தினர். […]
Tag: Vellore
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற எருது விழாவில் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். பொங்கல் திருநாளை ஒட்டி அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகில் எருது விடும் விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இவ் விழாவை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டனர். வீரர்கள் உறுதி ஏற்ற பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப் பாய்ந்தன. எருது விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விவசாய நிலத்திற்கு வெளிச்சம் வேண்டி மின்கம்பத்தில் ஏறிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேடு என்ற கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனார்த்தனன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் பல்ப் பொருத்துவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென இவரின் மீது மின்சாரம் பாய்ந்து […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரிசிங் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினரான எழிலரசி என்பவரை காதலித்து பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் உணவு சமைப்பது தொடர்பாக விக்னேஷ் மற்றும் எழிலரசி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் […]
பெண் சாலையை கடக்க முயன்ற போது அவரின் மீது வேன் மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கந்தனேரி பகுதியில் சிவாஜி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மேய்ச்சலுக்காக பசு மாட்டை கட்டி விட்டு பின் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மகேஸ்வரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அந்த வழியாக சென்னையிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்த வேன் […]
சாராயம் விற்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 209 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுவானம் பகுதியில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெட்டுவானம் பகுதியில் உள்ள கோவிலின் பின்புறம் சாராயம் விற்ற காரணத்திற்காக அதே பகுதியில் வசித்து வரும் சௌந்தர்ராஜனின் மனைவி கிருஷ்ணவேணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை […]
ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வடுகன்தாங்கல் ரைஸ்மில் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். ஆனால் பல மணி நேரம் முயன்றும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி […]
போலீஸ் நிலையத்தில் மேஜையில் வைக்கப்பட்ட துப்பாக்கி திடீரென வெடித்ததில் காவல் நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் வடக்கு காவல் நிலையம் உள்ளது. அங்கு விருதம்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகிய இருவரும் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வடக்கு காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது ஜெகதீசன் அவரது கைத்துப்பாக்கியை எடுத்து அங்கு உள்ள மேஜையில் […]
அரக்கோணம் அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனோகரனின் மூன்றாவது மகள் வேனிஷா என்பவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன் பின் வீட்டில் இருந்துவிட்டார்,. இவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அறுவை சிகிச்சை […]
தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்சை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் நிலையத்தில் மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் என்பவர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது அரியூர் […]
ஸ்கூட்டரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னால் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கணேசன் ஸ்கூட்டரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, சாய்நாதபுறம் அன்பு இல்லம் அருகில் வைத்து கணேசன் ஓட்டிவந்த ஸ்கூட்டரின் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தினால் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 […]
போக்குவரத்து அதிகாரிகள் தார்பாய்கள் இல்லாத லாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் கருணாநிதி மற்றும் சக்திவேல் ஆகியோர் அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் அப்பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் அதன் மேற்புறத்தில் தார்ப்பாயால் மூடாமல் சென்றதை கவனித்தனர். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதிகாரிகள் அந்த லாரிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக, 82 கிராமங்களுக்கு மட்டும் எருதுவிடும் விழா நடத்த கலெக்டர் அனுமதித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு எருதுவிடும் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். எருது விடும் விழா தொடர்பாக காளை உரிமையாளர்கள் மற்றும் எருதுவிடும் விழா சங்கத்தினருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டமானது கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் போன்றோர் […]
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் சில நாட்களாக அரசு சார்பில் காப்பீடு சலுகை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறி மக்களின் தகவல்களை பெறுவதும், பணங்களை பெற்று போலியான காப்பீடு அட்டைகளை வழங்குவது என பல முறைகேடு சம்பவங்கள் நடந்து வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் பணம் பெற்றுக் கொண்டு தரப்படும் போலி காப்பீடு அட்டை களை நம்பி ஏமாற வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள […]
கலெக்டராக ஆசைப்பட்ட கூலி தொழிலாளியின் மகனை தன் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்த குடியாத்தம் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் மகன் நரசிம்மன் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து அறிந்த குடியாத்தம் உதவி கலெக்டர்ஷேக் மன்சூர் நேரடியாக மாணவரை சந்திக்க […]
வேலூர் அருகே கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆலம்பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மனைவி யுவராணி. கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இந்த நிலையில், ரஞ்சன் நேற்றைய தினம் காலை சுமார் 8 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கு குடியாத்தம் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே சென்று, பெட்ரோல் […]
ஊரடங்கினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வேலூரில் மூடப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 75 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் பலருக்கும் நஷ்டம் […]
விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மீது கார் மோதியதில், நான்கரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவரது மனைவி கவிதா.. செந்தில்குமார் தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.. இவரது மனைவி கவிதா வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இவர்களது இளைய மகள் சாரா நேற்று இரவு சக குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஈசாக் என்பவர் சரியாக […]
தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன், மதிப்பெண் குறைவாக பெற்றதால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார்.. இவருக்கு வயது 17 ஆகிறது.. குடியாத்தத்தில் இருக்கும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணக்கு-உயிரியல் பாடப்பிரிவில் 12ம் வகுப்பு படித்தார். இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்று […]
வேலூர் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக வேலூர் மாவட்டத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் வேலூரில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 750 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 168 பேர் கொரோனாவில் […]
அரசு மருத்துவமனையில் தவறாக நடக்க முயன்ற வாலிபரை பெண் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் இருக்கும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டு எதிரில் கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் காத்திருப்பது வழக்கம்.. அதன்படி இங்கு 40 வயதுடைய பெண் ஒருவர் காத்திருந்தபோது, அவரை வாலிபர் ஒருவர் சுற்றிசுற்றி வந்துள்ளார். அவரிடம் தவறாக நடப்பதற்கு முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், கடுமையாக திட்டி காலில் […]
மயில் வேட்டையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்துள்ள பத்திரப்பல்லி, கம்பசமுத்திரம் காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.. அப்போது, வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டது.. இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மயில் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தார்.. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த இளைஞர் மதினாப்பல்லியை சேர்ந்த 18 வயதுடைய விக்னேஷ் என்பது தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்த […]
வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை வேலூர் மாவட்டத்தில் 389 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை வேலூரில் 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுவரை 283 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று 292 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர் பாகாயம் அருகே குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டியதால் தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார்.. வேலூர் மாவட்டம் பாகாயம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தார். 11 ஆம் வகுப்பு செல்ல இருந்தார்.. இந்நிலையில் தான் அந்த மாணவி வீட்டில் மேற்கூரை இல்லாத பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கணபதி என்ற தாமஸ் (19) மற்றும் 17 வயது […]
செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அப்போது திடீரென மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீ குளித்து, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தீ பற்றி எரிந்ததும் மாணவியின் அலறல் சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]
வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பைக் விபத்தில் பெயிண்ட் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் வசூர் பகுதியில் அமைந்துள்ள வேலூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளதாக சத்துவாச்சாரி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. அந்தத் ததவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் வேலூர் மக்கான் பகுதியைச் […]
வேலூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் பலியானார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மேல்விஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்தநிலையில் நேற்று (ஜூன் 11) மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலனனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். இதுவரை வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். அதில் 20 வயது கர்ப்பிணி […]
சொத்து தகராறில் தாய் மற்றும் தங்கையை விவசாயி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி அருகேயுள்ள தலைவர்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு இந்திராணி (70) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்களுக்கு முனிராஜ் (45) என்ற மகனும், சின்னம்மா (35) மற்றும் சூரியகலா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில், முனிராஜ் மற்றும் சூரியகலா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.. சின்னம்மாவுக்கு இன்னும் திருமணம் […]
வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. வேலூர் அருகேயுள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் செல்வம்.. 42 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். தற்போது தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு சித்ரா (36) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது.. தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். […]
வேலூர் அருகே 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. வேலூர் அடுத்துள்ள கணியம்பாடி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள் மற்றும் ஆடுகள் திருட்டு போனது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி, மேல்வல்லம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது. இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
மதுகுடித்து விட்டு போதையில் காரை வேகமாக ஓட்டிச்சென்று தடுப்புகளின் மீது மோதியதில் தொழிலதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். வேலூர் மாவட்டம் செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராஜி.. 27 வயதுடைய இவர் தன்னுடைய கார் மூலம் வேலூர் வந்துவிட்டு பின் மீண்டும் அதே காரில் மது குடித்து விட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கொணவட்டம் […]
வேலூரில் 8 மருத்துவ பணியாளர் உட்பட 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் இதுவரை 38 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனோவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 16,395 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. ஏப்., 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால் சிலர் இந்த உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். 144 தடை உத்தரவு மீறியதாக 4,100 பேர் மீதி தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் […]
வேலூரில் அடிபட்டு உயிரிழந்த நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை பத்திரமாக கால்நடை டாக்டர் மீட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் மக்கான் சிக்னல் அருகில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் தெருநாய் ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஓன்று திடீரென்று நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஐயோ பாவம்!… இதில் அந்த நாய்க்கு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்தசமயத்தில் அவ்வழியாக வந்தவர் […]
இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் மந்தமாக இருக்கும் 20 நகரங்களுக்கு வழிகாட்டி உதவுவதற்காக சிறப்பாக செயல்படும் பிற 20 நகரங்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. வழிகாட்டும் 20 நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் திருப்பூர், வேலூர் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் 100 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மிகவும் மந்தமாக பணிகள் நடைபெற்று வரும் கடைசி 20 இடங்களில் உள்ள நகரங்களில் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. […]
விழுப்புரம் அருகே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மிளகாய் அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி பகுதியை அடுத்த பேட்டையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வினோதமான பூஜையில் நடைபெற்றன. அங்குள்ள கோவில் பூசாரியான அருள்பெரும்ஜோதி என்பவரின் மார்பு மீது உரல் வைத்து மாவு இடித்தனர். மிளகாய் பொடியை கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]
யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]
பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட மூவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் கடந்த 18ஆம் தேதி இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தனது காதலனுடன் வந்த இளம்பெண் கோட்டை பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர்கள் கத்திமுனையில் காதலனை மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தனர். இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு […]
வேலூரில் காதலனை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வேலூர் பச்சையப்பாஸ் துணி கடையில் பணிபுரிந்து வரும் அஜித்தும் அதே கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சனிக்கிழமை இரவு கோட்டை பூங்காவில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் அஜித்தை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. […]
வேலூர் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்த பாலாஜி நகரில் வசித்து வரும் ராமனைய்யா குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது முன்பக்க கதவு மற்றும் பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த […]
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வறுமையில் தவித்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ. உதவிக்கரம் நீட்டியுள்ளது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற குறைதீர் முகாமில்,” 72 வயதான மூதாட்டி ஒருவர் தன்னிடம் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்ற முடியாமல் சாப்பிடுவதற்குக் கூட வழியின்றி தவித்து வருவதாகவும், இந்த பணத்தை வைத்துக் கொண்டு மாற்று பணம் வழங்க வேண்டும்,” என்றும் கோரிக்கை […]
பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழத்தில் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் தனது சொகுசுக் காரில் வேலூரை நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 30 அடி ஆழத்தில் பாலாற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் நல்வாய்ப்பாக ராஜேஷ் […]
வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மாலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேசன். கூலித் தொழிலாளியான இவருடைய மகள் அஸ்வினி (15), அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (10), சங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (7) ஆகிய மூவரும் வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான இன்று மூவரும் […]
பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 9ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளத்துக்கு […]
மின்வாரிய தலைமைப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 53 ரூபாய் பணம், 48 கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு மின்வாரியத்தின் வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்துவருபவர் நந்தகோபால். இவர் புத்தாண்டை முன்னிட்டு மின்வாரிய அலுவலர்களிடம் பரிசுப் பொருள்கள் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புக் […]
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் உதவியோடு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்தனர் . இந்த கொலை அரக்கோணம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது .போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர் .அப்போது அங்கிருந்த […]
மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், ‘வந்தன் விகாஸ் கேந்திரம்’ […]
ராணிப்பேட்டையில் குற்றங்களை குறைக்க பொது மக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலர்கள், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய மயில்வாகணன், ராணிப்பேட்டையில் குற்றங்களைக் குறைக்க பொதுமக்களும் இளைஞர்களும் […]
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் மக்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்டார்.2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததன் காரணமாக மே மாதத்தில் தேர்தல் நடைபெறவில்லை. பின்னர் வேலூரில் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த […]