Categories
தேசிய செய்திகள்

‘CAA – NRC குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை’ – வெங்கையா நாயுடு..!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாரி சன்னா ரெட்டியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும். சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது, […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது கடல்வளம்” – வெங்கையா நாயுடு.!!

கடல்வளம் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் வெள்ளி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், “கடல் வளம் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

ராம்ஜெத்மலானி உடலுக்கு அமித்ஷா , வெங்கையா நேரில் அஞ்சலி….!!

மறைந்த மூத்த வழக்கறிஞ்சர் ராம்ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர், துணை குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினர். மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். 95வயதான இவர் 1996 வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். மறைந்த ராம் ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேரில் அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணை பார்க்க முடியாது , வேதனையை உணர முடியும்…. அமித்ஷா பேச்சு …!!

வெங்கையா நாயுடு_விடம் கம்யூனிஸ்ட் பேராசிரியர் கேள்வி கேட்டதும் உடனே பதிலளித்தார் என்று அமித்ஷா மாணவ பருவத்தை குறிப்பிட்டு பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷ்மாவின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பு” வெங்கையா நாயுடு இரங்கல்..!!

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சுஷ்மாவின்   மரணம் நாட்டிற்கு பேரிழப்பு என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக  உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். […]

Categories

Tech |