கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 205 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 338 பேர் உயிரிந்துள்ள நிலையில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
Tag: #Vijayakanth
கேப்டன் வரும் போது தமிழகத்தில் பூகம்பம் வருமென்று விஜயபிரபகரன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜய் பிரபாகரன் , தேமுதிக மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த கழகத்தில் நாட்டுக்கு என்னென்ன தேவையோ என்ற கொள்கையை தலைவர் […]
வருகின்ற 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 20ஆவது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் உள்ள 118 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கட்சிக்கொடி ஏற்றிவைத்த பின்பு அலுவலகத்தில் கூடியிருந்த 500க்கும் அதிகமான தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், ஏழை […]
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு கூட்டம் தேமுதிக கட்சி தலைமை அலுவலத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை நடைபெற்றது. இதில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா உட்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தொண்டர்களிடம் பேசிய பிரேமலதா, தொண்டர்களின்விருப்பத்திற்காக ஒரு கூட்டணி அமைத்து கூட்டணி தர்மத்தை காப்பாறினோம். கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் […]
தேமுதிக குட்ட குட்ட குனியமாட்டோம் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு கூட்டம் தேமுதிக தலைமை அலுவலத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை நடைபெற்றது. இதில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா உட்பட முன்னனில் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தொண்டர்களிடம் பிரேமலதா, கேப்டனை பொருத்தவரைக்கும் தொண்டர்கள் விருப்பத்திற்காக ஒரு கூட்டணி அமைத்து கூட்டணி தர்மத்தை காப்பாறினோம். கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்பது […]
அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்க இது இடமில்லை என்று தமிழக அரசின் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை திரும்பப் பெறக் கோரிய தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் […]
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினருக்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று விருப்ப மனுக்களை வழங்கினார். மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்வதாக தேமுதிக அறிவித்துள்ளது.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் […]
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தேமுதிக அறிவித்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவதாக கூறி அவரது மகன் விஜய பிரபாகரன் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அடுத்த தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயபிரபாகரன், விஜயகாந்தின் உடல்நிலை மிக சீராக உள்ளது ஆனால் அவரது உடல்நிலை குறித்து சிலர் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 67_ஆவது பிறந்தநாளை விழாவை கொண்டாடி வருகிறார்.இதற்காக அவர் நேற்று 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அவருடைய பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகதிற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். முன்னதாக விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி100 கிலோ எடையுடைய கேட்க வெட்டப்பட்டு […]
தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவே கடனில் தான் உள்ளது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் IOB வங்கியில் வாங்கிய ரூ 5,52,73,825 கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை என்று கூறி அவர் செலுத்த வேண்டிய வட்டி , இதர செலவை வசூலிக்க அவரின் சாலிகிராமத்தில் உள்ள வீடு , மதுராந்தகம் மாமண்டியூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியல் கல்லூரியை வருகின்ற ஜூலை 26_ஆம் தேதி ஏலம் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாலிகிராமத்தில் உள்ள […]
நேர்மையானவர்களுக்கு சோதனை வரும் , சோதனையை வெல்வோம் கல்லூரியை மீட்போம் என்று விஜயகாந்த் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிகவின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை என்று கூறி அவர் வாங்கிய கடன் சுமார் ரூ 5,52,73,825 கடன் , வட்டி , இதர செலவை வசூலிக்க அவரின் சாலிகிராமத்தில் உள்ள வீடு , மதுராந்தகம் மாமண்டியூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியல் கல்லூரியை வருகின்ற ஜூலை 26_ஆம் தேதி ஏலம் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை […]
வாங்கிய கடனை கட்டாததால் நடிகர் விஜயகாந்தின் வீட்டை ஏலம் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் நடிகராக இருந்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவராக இருந்து வருபவர் விஜயகாந்த். இவர் அரசியலுக்கு வந்ததும் சினிமைவை கைவிட்டார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானமாக வைத்து இந்திய ஓவர்சீஸ் வங்கியில் கடன் வங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் வாங்கிய கடனுக்கான வட்டி என்று எதுவுமே செலுத்தாத நிலையில் இன்று விஜயகாந்தின் […]
தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு ( கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் ) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கட்சியின் தலைமை […]
தேமுதிக வேட்பாளரை விஜயகாந்த் இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட்து. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் பாமகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இந்நிலையில் சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , மாபெரும் வெற்றி […]
விஜயகாந்த் வீட்டில் அமைச்சர்கள் மற்றும் பாமக நிறுவனர் அன்புமணி ஆலோசனை நடத்தினர். சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமக நிறுவனர் ராமதாஸ் , இளைஞரணி செயலாளர் அன்புமணி , அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி வருகை தந்து விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . ஏனென்றால் வட மாவட்டங்களில் உள்ள கள்ளக்குறிச்சி , கிருஷ்ணகிரி தொகுதியானது பாமகவின் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கிறது . இந்த தொகுதியை தேமுதிக கேட்பதாக சொல்லப்படுகிறது . […]
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருக்கின்றார் பாமக நிறுவனர் ராமதாஸ் . அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணைந்துள்ளது . பாமக_விற்கு 7 தொகுதியும் , தேமுதிகவுக்கு 4 தொகுதியும் ஒப்பந்தமாகியுள்ளது .மேலும் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததால் தேமுதிக இணையுமா என்ற கேள்வி எழுந்தது ஏனெனில் வட மாவட்டங்களில் தேமுதிக_விற்கும் , பாமக_விற்கும் கொள்ளகை ரீதியில் விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் பாமகவை விட தங்களுக்கு அதிக சீட் வேண்டுமென்று […]
மார்ச் 13_இல் தேமுதிகவின் நேர்காணல்…..!!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 13ம் தேதி விஜயகாந்த் முன்னிலையில் நடைபெறுகின்றது . தேமுதிக அதிமுக இடையேயான கூட்டணி தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைக்கு பின் நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று இரவு அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தமாகி இறுதியானது. இதில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . 4 தொகுதி -கள் என்னென்ன தொகுதிகள் என்று இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை . இந்நிலையில் தேமுதிக விருப்ப மனு அளித்து அவர்களிடம் நேர்காணல் நடைபெறுவதற்கான அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது . […]
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக_விற்கு ஆதரவு என்று ஒப்பந்தமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது .தொகுதிப் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது இந்த நிலையில் அதிமுக கூட்டணி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் தேமுதிக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது . இதையடுத்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுண்ட் பிளாசா […]