ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவை நெகிழி இல்லா நகரமாக மாற்றும் நோக்கில், அங்கு பிரசித்தி பெற்ற கனக துர்க்கை கோயில் நிர்வாகம் கோயில் வளாகத்தில் நெகிழிக்கு தடை விதித்துள்ளது. கிருஷ்ணா நதி கரையோரத்தில் உள்ள இந்திரகிலாட்ரி மலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற துர்க்கை அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றனர். அவர்கள் கோயிலுக்குள் நெகிழியை கொண்டுவரக்கூடாது என கோயில் நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கோயில் […]
Tag: Vijayawada
நான்கு வயதில் காணாமல் போன சிறுமி ஒருவர் பேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைய உள்ளார். ஆந்திராவில் விஜய நகரத்தை சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி தனது 4 வயதில் காணாமல் போன நிலையில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் இந்த நிலையில் வம்சி கிருஷ்ணா என்பவர் வீட்டிற்கு வீட்டு வேலை கேட்டு பவானி சென்ற நிலையில் அங்கு அவரிடம் அடையாள […]
ஒடிஷா_வில் வீட்டுக்கு வந்த பார்சலில் பாம்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் ஒடிசாவின் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் வேலை செய்கின்றார். இவருக்கு அண்மையில் ஒரு பார்சல் வந்துள்ளது. ஆந்திராவின் குண்டூரில் வந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் என்று எண்ணிய முத்துக்குமார் அதை திறந்து பார்த்தார். அப்போது பார்சலில் இருந்து விஷம் கொண்ட ஒரு பாம்பு வெளியே தலைகாட்டியதை கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. #WATCH […]
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகளை மறுத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட்பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் செல்வார்கள்.இந்நிலையில் நேற்று இரவு விஜயவாடா விமான நிலையத்துக்கு சந்திரபாபு நாயுடன் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பாவும் வந்திருந்தார். சந்திரநாயுடுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் நேரடியாக வி.ஐ.பி.க்கள் […]
அதிரடிப்படை என்று தொழிலதிபரின் காரில் சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற மோசடி கும்பல் சிக்கியது. பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை , போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முறையான ஆவணமில்லாதவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கி சோதனை என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலும் சில இடங்களில் கைவரிசை காட்டுகிறது. […]