தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி நேற்றுமுன்தினம் திரையரங்கிற்கு வந்த படம் டாக்டர். இந்த படத்தைப் பார்க்க சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் அதிகமாக குவிந்தனர். அதற்கு காரணம் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை இயக்குவது தான். டாக்டர் படம் வெற்றி பெற்றால் தளபதி 65 படமான பீஸ்ட் வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் கணிப்பு. இதனால் முதல் நாளே டாக்டர் படத்தை பார்க்க அதிக […]
Tag: Vijayfans
பொருளாதார ரீதியில் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி முருகன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வருவதை விஜய் இரசிகர் மன்ற நிர்வாகி மூலம் விஜய் அறிந்துள்ளார். இதனையடுத்து அந்த குடும்பத்திற்கு விஜய் 50, 000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளதாகவும் மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை […]
புல்வாமா தாக்குதலின் ஓர் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் விஜய் ரசிகர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான […]
சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வருவாய் தொடர்பாக நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம் இரவு 8 […]
விஜய் படம் என்பதால் நெய்வேலியில் மாஸ்டருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். பிகில் படம் வருவாய் தொடர்பாக கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்ற வருமான வரித்துறையினர் விஜயை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அதேபோல் விஜயின் மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது விஜய் பிகில் சம்பளமாக 30 கோடி […]
என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் #தாமரை_மயிர்ல_கூடமலராது என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் பிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் வருமானவரித்- துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் நடிகர் விஜயையும் விட்டுவைக்காத வருமானவரித்துறையினர், நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்றனர். அங்கு அவரிடம் சிறிது […]
பாஜக கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி. நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்றைய முன்தினம் சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து சென்னையில் உள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர் விஜய் இன்று காலை நெய்வேலியில் நடக்கும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடர்ந்தது அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் […]
காவல்துறை ஆலோசனையை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேரமாக்களை விஜய் நற்பணி இயக்கத்தினர் பொருத்தி கொடுத்துள்ளனர். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு […]
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தின் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு பிராத்தனை செய்துள்ளனர். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரை படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் திரை படம் வெற்றிபெற வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் திருகோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த […]
பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் இன்று #SaveTheniFromNEUTRINO என்ற ஹாஷ்டாக்_கை ட்ரெண்ட் செய்து வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா-வில் நடிகர் விஜய் தனது பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடிய விஜய் தனது ரசிகர்கள் இது போன்ற சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் போடுங்க என்று அறிவுறுதினார். நடிகர் விஜயின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அன்றே #JusticeForSubaShree என்ற ஹேஷ்டேக்_கை ட்ரெண்ட் செய்தனர். அதை தொடர்ந்து […]
ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுக திமுக, பாமக […]