Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த தேர்தல் வந்தாலும்….. ”அதிமுக வெற்றி நிச்சயம்”…. OPS உறுதி …!!

நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் நிச்சயம் வெற்றிபெறும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் O.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக நடக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொழுப்புத்தனமான பேச்சு….. ”வாடகை கொடுக்க வக்கில்லை” சீமானை வெளுத்த அமைச்சர் ..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து கொழுப்புத்தனமான பேச்சு என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டித்துள்ளார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது முட்டாள்தனமான மடத்தனமான வார்த்தை என்றார். தமிழன் எதிரிக்கு கூட துரோகம் இழைக்காதவன். ராஜீவ் காந்தியின் கொலை தமிழக மண்ணில் நடந்ததையே கேவலமாகக் கருதுபவர்கள் தமிழக மக்கள். அப்படியிருக்கையில் ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மறைந்த தலைவர்களை பேசாதீங்க” சீமானுக்கு G.K வாசன் அட்வைஸ் …!!

மறைந்த தலைவர்களை அவதூறாகப் பேசக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘மறைந்த தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசுவது ஒரு போதும் ஏற்கக்கூடியது அல்ல, அது தவிர்க்கப்பட வேண்டும். அது பயங்கரவாதம், தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும், அடக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாங்குநேரி அதிமுக […]

Categories
அரசியல்

”எல்லாமே திமுக தான்” கருத்துக்கணிப்பில் அரண்டு போன அதிமுக …..!!

நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே 3 தொகுதிகளிலும் வெற்றிபெறுமென்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமானுக்கு சங்கு ….. ”ஆப்பு வைக்கும் தேர்தல் ஆணையம்”…. விரிவான அறிக்கை …!!

சீமானின் சர்சை கருத்து குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கை கேட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …!!

சீமானின் சர்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……!!

ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை காவல்துறை கைது செய்ய வேண்டுமென்று H.ராஜா தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்…..!!

 ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜசேகர் புகாரளித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’சீமான் ஒரு அரசியல் தலைவர்போல் செயல்படவில்லை’- நாராயணசாமி

சீமானின் செயல்பாடுகள் எதுவும் அரசியல் கட்சித் தலைவர் செய்வதுபோல் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார். இது இந்தியாவை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ராஜிவ் காந்தியை கொச்சைப்படுத்தி விக்கிரவாண்டியில் சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தலைவர்களை இழிவாகவும் பேசிவருவது சீமானின் பழக்கமாக உள்ளது.திரைப்பட இயக்குநராக இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கதருக்குள் காவி-காவிக்குள் கதர்…! – காங்., பாஜகவை கலாய்த்த சீமான் …!!

காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் கொள்கை அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராஜிவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு, விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாகக் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். இலங்கைத் தமிழர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிதம்பரத்த வெளிய எடுங்க …. என்ன உள்ள போடுங்க ….. போராடுங்க ….. பின்வாங்க மாட்டேன் …. சீமான் கருத்து …!!

ராஜிவ் காந்தி குறித்து பேசியதை திரும்ப பெற மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டை சுற்றிய போலீஸ் ….. கைதாகும் சீமான் …… பரபரப்பில் அரசியல் களம் …!!

ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசிய சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தமிழகம் , பாமக இருவருக்கும் ஸ்வாகா ….. இடியாப்ப சிக்கலில் அதிமுக ….!!

கோரிக்கையை அதிமுக நிறவேற்ற தயங்குவதால் பாமக கூட்டணியை விட்டு விலகுவது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலக்கத்தில் அதிமுக…. நாங்க 10 வைத்தோம் …. ஓடப்போகும் பாமக ……!!

புதிய தமிழகம் கட்சியை தொடர்ந்து பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஷாக்…..”கட்சி பெயர், கொடி பயன்படுத்தாதீங்க” கிருஷ்ணசாமி அதிரடி…!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பள்ளர், குடும்பர், காலாடி ,பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். (நெல்லை மாவட்ட வாதிரியார் சமூக மக்களும் இதில் […]

Categories

Tech |