Categories
அரசியல் மாநில செய்திகள்

“‘சம்திங்’ தந்தால் தான் உதவிகளை பெற முடியும்” ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

‘சம்திங்’ தந்தால் தான் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு  அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில்  திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக  நா. புகழேந்தியும்,  திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரனும்  போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்காக அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல திமுகவும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்”… அடித்து சொல்லும் செங்கோட்டையன்.!!

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் போட்டியிடும் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும்  களம் காண்கின்றனர். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு  ஆதரவாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பரப்புரை.!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதற்கட்டமாக நாங்குநேரி தொகுதியில் இன்று  பரப்புரை பயணம் செய்கிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன.  திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்… பொன். ராதாகிருஷ்ணன்.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  பாஜக ஆதரவு அளிக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : ஆதரவு தாருங்கள்… பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.!!

 இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி 3… நாங்குநேரி 3… முதல்வர் எடப்பாடி அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்கிறார்.  வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் இரண்டு தொகுதிகளிலும் பரப்புரை செய்யும் நாட்களை திமுக அறிவித்து விட்டது. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 தொகுதி இடைத்தேர்தல் : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு.!!

3 தொகுதி இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், நாம் தமிழர், என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அனைவரும்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றுடன் (30ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் வேட்பு மனு ஏற்பு.!!

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது  தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று  அறிவிகப்பட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று இரண்டு தொகுதி வேட்பாளர்களும் வேட்பு மனுதாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் அதே பதில்… “பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும்”… பொன். ராதாகிருஷ்ணன்..!!

அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில்  2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். இத்தேர்தலை சந்திக்க அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாமக  மற்றும்  தேமுதிக தலைவர் விஜயகாந்திடம்  ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால்  கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காங். வேட்பாளர் இறக்குமதி செய்யப்பட்ட பணக்காரர்”… நாங்கள் அப்படியில்லை.. அமைச்சர் தங்கமணி விமர்சனம்..!!

பண பலத்தை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்கவில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக  அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்ததையடுத்து, இன்று விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும் நாங்குநேரி வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நாங்குநேரியில் அமைச்சர் தங்கமணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள்”… அடித்து சொல்லும் ஓபிஎஸ்.!!

பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்தார்.  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில்  2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும்  தேமுதிக தலைவர் விஜயகாந்திடம்  ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால்  கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இன்று ஐஐடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல்…. “முற்றுப்புள்ளி வைத்தது அதிமுக… நேரடியாக மோடியிடம் ஆதரவு கேட்ட ஈபிஎஸ், ஓபிஎஸ் ..!!

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  ஆதரவு கேட்டு பிரதமர் மோடியிடம் முதல்வர்  ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்  கோரிக்கை வைத்துள்ளனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி  தினம் என்பதால், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும்  நாங்குநேரி வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தார். […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி : திமுக, காங்.,கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.!!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில்  திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுவதாகவும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலுக்காக கடந்த 21ஆம் தேதி முதலே  வேட்புமனு தாக்கல் துவங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி  தினம் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி வேட்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி”… அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!!

2 இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.   நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.  கடந்த 21ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி  தினம் என்பதால்,  விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிக்கு… “2 தொகுதிகளின் இடைத்தேர்தல் ராசியானது”… அமைச்சர் செல்லூர் ராஜூ.!!

அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது பற்றி  பேசியதாவது, அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு”… கேப்டன் விஜயகாந்த் உறுதி.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக  கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.   இந்நிலையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது  இல்லத்தில் வைத்து  தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி”… என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுத்தர பாஜக முடிவு.!!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர பாஜக முடிவு செய்துள்ளது.   புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக விருப்பமனுக்களை பெற்று வந்த நிலையில், பாஜகவும் அதே தொகுதிக்காக விருப்பமனுக்களை பெற்றதால் அரசியலில் பரபரப்பு நிலவியது. அதன்பின் நேற்று முன்தினம் காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக தலைமை அறிவித்தது. அதிமுகவின் இந்த முடிவுக்கு புதுச்சேரி பாஜக அதிர்ச்சியடைந்தது. தங்களுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திருமா வேண்டவே வேண்டாம்” தடை போடும் முக.ஸ்டாலின்…. அதிர்ச்சியில் சிறுத்தைகள்…!!

விக்ரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவா திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக_வுக்கு பிரசாரம் செய்தால் நமக்கு பாதிப்பு ஏற்படும். வன்னியர் மக்கள் அதிகமாக இருக்க கூடிய பகுதி என்பதால் நமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து முக.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதி நிலைமை என்ன என்று திமுக மாவட்ட செயலாளர் பொன்முடியிடம் கேட்டுளார். விக்ரவாண்டி தொகுதியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். அதன் படி விக்கிரவாண்டி தொகுதியில் கு.கந்தசாமியும், நாங்குநேரி தொகுதியில் சா.ராஜநாராயணன் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் பிரவினா மதியழகன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைதேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவிக்கிறது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து  திமுக,  அதிமுக,  நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்   இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் நடைபெற்று, அதன் விவரம் கட்சி தலைமைக்கு அனுப்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட அமைச்சர்கள்.!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக அமைச்சர்கள் அவரது  இல்லத்தில் வைத்து  நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு  ஆதரவு கோரினர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக சார்பில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடைதேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி வேட்பாளர்கள் (நாளை மறுநாள்)  நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று காங்.தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .இதையடுத்து  திமுக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நேற்று முன் தினம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதேபோல  நாம் தமிழர் கட்சியும் 3 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 நாள் விக்கிரவாண்டி… 5 நாள் நாங்குநேரி… ஸ்டாலின் சூறாவளி பரப்புரை.!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2  தொகுதிகளில் 10 நாட்கள் பரப்புரை பயணம் செய்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து திமுக, அதிமுக, நாம் தமிழர்உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் நாளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் : காங். வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிப்பு… கே.எஸ். அழகிரி.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான  வேட்பாளர்கள்  நாளை மறுநாள் அறிவிக்கப்படுவார்கள் என்று காங்.தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .இதையடுத்து  திமுக நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது. அதேபோல அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை இன்று அறிவித்தது. அதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் 3 இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல்…. “தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழு”… திமுக அறிவிப்பு..!!

திமுக சார்பில் நாங்குநேரி இடைத்தேர்தலில், தேர்தல் பணியாற்றிட தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழுவினரை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.    தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக நாம் தமிழர்,தமிழ்நாடு காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக சார்பில் நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.!!

 நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது. அதேபோல அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை இன்று அறிவித்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை.!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பல்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து இன்று விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை முதல்வர் ஓபிஎஸ் முதல்வர் இபிஎஸ் அறிவித்தனர். அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எங்களுக்கு செல்வாக்கு இருக்கு” தேர்தல் நிரூபிக்கும்- முதல்வர் உறுதி….!!

இந்த தேர்தல் மக்கள் செல்வாக்கு அதிமுகவுக்கு இருப்பதை நிரூபித்துக் காட்டும் என்று தமிழக முதலவர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் , அண்டை மாநிலத்துடன் நல்லுறவில் இருந்து வருகின்றோம். நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் உறுதி. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். ஆனால் மக்கள் நேர்மாறாக தீர்ப்பளித்தார்கள். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்துள்ளனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு கொடுக்கப்பட்து. அதைத்தொடர்ந்து  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மதுசூதனன், கேபி முனுசாமி உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் விருப்பமனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் யார்?…. இன்று காலை அறிவிப்பு..!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை (இன்று)  காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிப்பு – ஓபிஎஸ்.!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.   இந்நிலையில்  நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவின் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் இவர் தான்”…. முக  ஸ்டாலின் அறிவிப்பு..!!

திமுகவின் விக்கிரவாண்டி தொகுதியின் வேட்பாளர் பெயரை முக  ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக நேற்று விருப்ப மனு அளித்தது.   இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : “அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை”… முதல்வர் ஈபிஎஸ் .!!

அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை, பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்  நடைபெறுகிறது . இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நேற்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் இன்று (23-ஆம் தேதி) மாலை 3 மணிவரை விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்காக  90 பேர் விருப்பமனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக விருப்ப மனு வழங்கிய அவகாசம் நிறைவு… நாளை நேர்காணல்.!

விக்கிரவாண்டி  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக இன்று  காலை 10 மணிமுதல் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 6 மணியுடன் விருப்பமனு நிறைவு… மகனை தேர்ந்தெடுப்பாரா ஸ்டாலின்?.. நாளை திமுக நேர்காணல்..!!

திமுக சார்பில் இன்று மாலை 6 மணியுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கான  விருப்பமனு தாக்கல் நிறைவடைகின்ற நிலையில் நாளை முக ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : விருப்பமனு விநியோகம் நிறைவு… யாரை தேர்வு செய்யப்போகிறது அதிமுக?..!!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வந்தது. நேற்று வரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். அதில் அதிகபட்சமாக நாங்குநேரி தொகுதியில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி அன்பழகன், கே ஆர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் பரபரப்பு…. விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டியா?…. திமுக எம்.பி விருப்பமனு தாக்கல்.!!

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து  திமுக எம்.பி கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும்  வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் வேட்பாளர் யார்?…. இன்று அதிமுக நேர்காணல்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும்  வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வருகின்றது. இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக சார்பில் விருப்பமனு”…. 2 தொகுதிக்கு இத்தனை பேரா?

அதிமுக சார்பில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அதிமுக மற்றும் திமுக இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு ரூ 25,000 பெற்றுக்கொண்டு விருப்பமனு அளித்து வருகின்றன. இதில் அதிமுக சார்பில் ராயப்பேட்டை  தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பயத்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை”… அமைச்சர் தங்கமணி விமர்சனம்.!!

இடைத்தேர்தல் பயத்தால் மக்கள் நீதி மய்யம்  போட்டியிடவில்லை என்று அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு பரிசீலனை அக்டோபர் ஒன்றாம் தேதியும்,  வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3 ஆம் தேதியும்,  கடைசியாக அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது”… கமல் ஹாசன்..!!

இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது’ என்று கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.   இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் மக்கள் நீதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன், ஆர்.லட்சுமணன் விருப்ப மனு.!!

அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் மற்றும்  முன்னாள் எம்.பி ஆர்.லட்சுமணன் விருப்ப மனு பெற்றுள்ளனர்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அதிமுக தலைமை  இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்.!!  

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம்  அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.   இதையடுத்து அதிமுக நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விக்கிரவாண்டி தேர்தல் : ”வெற்றியே பெறாத அதிமுக” சம பலத்துடன் மோதுகிறது…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி. இது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதில் விழுப்புரம் தாலுக்கா பகுதியை சேர்ந்த பல்வேறு ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகள் உள்ளடக்கி […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாங்குநேரி யாருக்கு…? ஆதிக்கம் செலுத்தும் அதிமுக…எதிராக 66.34 % வாக்கு….!!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் நாங்குநேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் சட்டமன்ற தொகுதி ஆகும். இதில் பாளையம் கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி , எர்வாடி,திருக்குறுங்குடி , களக்காடு ,கருவேல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி….. திமுக VS அதிமுக ஆதிக்கம் செலுத்தியது யார்?

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதை தொடர்ந்து மாவட்ட நாங்குநேரி தொகுதியான திருநெல்வேலி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியான விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதியை அமுல் படுத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு தொகுதியிலும் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை தீவிர கண்காணிப்பு – விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன்..!!

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாத […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் யார்?… நாளை மறுநாள்  3.30 மணிக்கு நேர்காணல்..!!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு  நாளை மறுநாள்  3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்  அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories
மாநில செய்திகள்

“ரூ.25 000 செலுத்தி நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்”…. அதிமுக தலைமை அறிவிப்பு..!!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று அதிமுக அறிவித்துள்ளது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories

Tech |